முத்துராமலிங்கத் தேவருக்கு நான் தான் வழக்கறிஞர்.. ஆனால் என்ன நடந்துச்சு தெரியுமா?- நடிகர் சாருஹாசன்
சென்னை: நடிகர் சாருஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் வழக்கறிஞராக இருந்தபோது முத்துராமலிங்க தேவருக்காக தான் பெயில் அப்பீல் செய்தது குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன், தான் ஜூனியர் வக்கீல் ஆக இருக்கும்போது எதிர்பாராத நேரத்தில் முத்துராமலிங்க தேவரை போலீஸ் அரெஸ்ட் செய்வதற்காக வந்திருந்த போது இக்கட்டான சூழ்நிலையில் நான் அவருக்காக அந்த கேசில் ஆஜராகி இருந்தேன் என்று அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனை பலருக்கும் தெரியும். அவருடைய அண்ணன் சாருஹாசன் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரை நடிகராகவே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவர் ஒரு வழக்கறிஞர். கமல்ஹாசன் அப்பாவும் வழக்கறிஞராக இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து சாருஹாசன் வழக்கறிஞராக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் வழக்கறிஞராக இருக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் முத்துராமலிங்க தேவருக்காக வழக்கறிஞராக இருந்ததை மறக்க முடியாது. அந்த நேரத்தில் நான் மதுரை கோர்ட்டில் ஜூனியர் வக்கீலாக சேர்ந்து இருந்தேன். அப்போது முத்துராமலிங்க தேவரின் ஆபீஸ் எங்கு ஆபீசுக்கு எதிரே தான் இருந்தது.
அந்த நேரத்தில் மதுரையில் வைத்தியநாதப் பிள்ளை என்ற பேமஸான ஒரு வக்கீல் இருந்தார். அவர்தான் எனக்கு ஜூனியர் அவரை கூப்பிடுவதற்காக முத்துராமலிங்க தேவரின் ஆட்கள் ஆபீசுக்கு வந்திருந்தார்கள். அப்போது வைத்தியநாத பிள்ளை அங்கே இல்லை. அதனால் நான் முத்துராமலிங்க தேவரின் ஆபீசக்கு
போயிருந்தேன்.
அப்போது அங்கு போலீசார் முத்துராமலிங்க தேவரின் எதிரே அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் முன்புதான் என்னிடம் முத்துராமலிங்க தேவர் என்னை போலீஸ் அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறார்கள் எனக்காக பெயில் போடணும் என்று சொன்னார். நான் சரி என்றதும் இந்த விஷயத்தை உங்க அப்பாவிடம் சொல்லி விடுங்கள் என்று முத்துராமலிங்கம் தேவர் சொல்ல நானும் சரி என்று அப்பாவிடம் சொன்னேன்.
ஆனால் அப்பா நான் காங்கிரஸில் இருக்கிறேன். அதனால் நான் பெயில் போட முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் நான் பெயில் போட்டேன். அதுபோல அந்த நேரத்தில் நான் MAவும் படித்துக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலையில் செய்தி பேப்பரில் முத்துராமலிங்க தேவருக்காக சாருஹாசன் பெயில் அப்ளை பண்ணியிருக்கிறார் என்ற செய்தி வந்தது. அப்போது சாருஹாசன் என்ற பெயரை பார்த்ததும் எல்லோரும் இது நம்ம நாட்டுக்காரன் இல்ல,

ஏதோ பெங்காலில் இருந்து வந்திருக்காங்கன்னு நினைச்சுட்டாங்க. ஏன்னா முத்துராமலிங்க தேவருக்கு பெங்கால் அசோசியேஷனிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் மூலமாக சப்போர்ட் உண்டு. அதனாலேயே எனக்கு கட்சிக்காரங்க சேர்ந்துட்டாங்க. உண்மைய சொல்லனும்னா இதில் என்னுடைய வக்கீல் உழைப்பு எதுவும் இல்ல. அந்த நேரத்தில் நான் வேறு ஆள் இல்லாததனால் அவருக்காக பெயில் போட்டேன் என்று வெளிப்படையாக ரகசியங்களை உடைத்திருக்கிறார்.
அதுபோல அதற்குப் பிறகு தன்னுடைய படிப்பு முடிந்ததும் முழு நேரமாக சில வருடங்கள் வக்கீலாக இருந்த சாருஹாசன் தன்னுடைய அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காக தான் கமல்ஹாசனோடு துணையாக சென்னைக்கு வந்திருந்தாராம். அதற்குப் பிறகு கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு கதை கேட்பது போன்ற வேலைகளை நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சில நேரங்களில் கமல்ஹாசன் கதை பிடிக்கவில்லை என்றால் அண்ணனிடம் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுவார். பிறகு அந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லுங்கள் என்று என்னை வைத்து சொல்ல வைத்து விடுவான். சில நேரங்களில் கதாநாயகிகளை கூட என்னை வைத்து தான் அப்படி மாற்றி விடுவான் என்று தன் தம்பி கமல்ஹாசன் பற்றியும் ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications