அட மைனா நந்தினி முகம் எப்படி செவந்திருக்கு பாருங்க.. வளைகாப்பு முடிஞ்சிருச்சாம்!
சென்னை: மைனா நந்தினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனது வளைகாப்புப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருப்பவர் நந்தினி. மைனா நந்தினி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.
கை நிறைய கண்ணாடி வளையலோடும் தன் காதல் கணவரோடும் இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சரவணன் மீனாட்சி புகழ்
பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் சிலருக்கு சில படங்களின் பெயரில் அடைமொழியாக வைத்துக் கொண்டாலே பலருக்கு தெரியிற மாதிரி அமைந்து விடுகிறது. அந்த மாதிரி சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்திருந்த நந்தினிக்கு எல்லாரும் மைனா நந்தினி என்று கூறினால்தான் நன்றாக தெரியும். 2வது திருமணம் செய்து கொண்ட அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார்.

காதல் கல்யாணம் கர்ப்பம்
கர்ப்பமாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அப்பப்ப போஸ்ட்களை போட்டுக்கொண்டிருந்தார். நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஏற்கனவே இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் தற்கொலை பண்ணிக் கொண்டதால் அதன் பிறகு மைனா தனியாக தான் வாழ்ந்து வந்தார் .

சந்தோஷ வாழ்க்கை
இந்த நிலையில்தான் யோகேஷுடன் காதல் மலர்ந்து, அதன்பிறகு இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கையை தொடங்கினார்கள். பல ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினாலும் சில எதிர்ப்பாளர்களும் இவரை ரொம்பவே காயப்படுத்தினார்கள். ஆனால் இவர் யாருடைய கருத்துக்களுக்கும் செவிசாய்க்காமல் தன்னுடைய வாழ்க்கையில் சீராக பயணித்துக் கொண்டிருக்கிறார் .

என் வாழ்க்கை என் கையில்
யாரும் எனக்கு அறிவுரை சொல்லவோ கருத்து சொல்லவோ தேவையில்லை. நான் அவர்களுக்காக வாழ வில்லை. நான் எனக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய கணவன் இறந்துவிட்டால் தானும் இறந்து உடன்கட்டை ஏறியது அது அந்த காலம். இன்று என்னை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாரும் எனக்காக கஷ்டப்பட்டது கிடையாது. என்னுடைய கஷ்டத்தில் பங்கு பெற்றவர்களும் கிடையாது.

சந்தோஷ திருமணம்
என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழ்ந்தாக வேண்டும். யாரும் எனக்காக வாழப்போவதில்லை. நான் கஷ்டப்பட்டால் அனுதாபம் தான் எல்லோரும் படுவார்களே தவிர ஆறுதலுக்கு யாரும் வரமாட்டார்கள் என்று உண்மையை புரிந்து இவர் அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். நந்தினியை முழுமையாக புரிந்துகொண்ட யோகேஷால் மட்டுமே தன்னுடைய வாழ்க்கையில் இனி சந்தோசத்தை தரவேண்டும் முடியும் என்று புரிந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

குட்டி பாப்பா வரப் போகுது
இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக தான் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டார். இதைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். சீரியல்களிலும் திரைப்படங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் பலர் நிஜத்தில் அதுபோல சந்தோஷமாக இருப்பதில்லை. இவரது வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்று நிம்மதியாக இருக்கிறார் மைனா நந்தினி.

மனசு நிறைய சந்தோஷம்
நிறைமாத நிலவாக கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுக் கொண்டு தனது காதல் கணவன் யோகேஷ் உடன் நந்தினி உற்சாகமாக இருக்கிறார். வளைகாப்பு நேரத்தில் எடுத்த போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக வருகிறது .குட்டி நந்தினியோ அல்லது யோகேஷோ நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications