Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவி இல்லாமல் எப்படி.. ஏக்கத்தில் ரசிகர்கள்.. விரைவில் திரும்பி வருவாராம் ரக்ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தேவியாக நடித்துக் கொண்டிருந்தவர் ரக்ஷா. இந்த சீரியலில் இப்போ இவர் இல்லை என்பதால் ரசிகர்கள் இவரை ரொம்ப மிஸ் பண்றாங்களாம். அதுபோக இணையதளத்தில் இவருக்காக நிறைய கமெண்டும் போட்டிருக்கிறார்கள்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக நான் சீக்கிரமாக திரும்பி வருவேன் அப்படின்னு ரக்ஷா இணையதளத்தில் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். ரக்ஷா தமிழ் கடவுள் முருகன் சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானாலும் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தான்.

இந்த சீரியலில் தேவி கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக செந்தில் மாயன் கேரக்டரில் நடித்தார்..இந்த சீரியலில் தேவி மாயன் ஜோடிதான் இளைஞர்களும் ரசிகர்களாலும் ரொம்பவும் ரசிக்கப்பட்டது.

நல்ல கெமிஸ்ட்ரி

நல்ல கெமிஸ்ட்ரி

இந்த இருவருக்கும் இடையிலான மோதல் மட்டுமல்லாமல் கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. தேவி டாமினேட் செய்வார்.. மாயன் மடங்கிப் போவார். இந்த காம்பினேஷன் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் ,காதல் ,பாசம் எல்லாமே ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தது. முதலில் மாயன் திருட்டுத்தனமாக ஏமாற்றி ரக்ஷாவை திருமணம் செய்தாலும் இவரை உண்மையாக காதலிப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சல்

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சல்

ரக்ஷாவும் முதலில் இவரை பழிவாங்குவதற்காக கணவனாக ஏற்றுக் கொண்டாலும் எவ்வளவு கொடுமைகள் பண்ணுனாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாயனின் காதலை புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தார். இருவரும் காதலித்து ஒன்றாக வாழலாம் என்று இருக்கும்போதுதான் எந்த லாக்டோன் போட்டு சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட.து அதனால் ஷூட்டிங் எடுத்திருந்த எபிசோடுகளை மட்டும் ஒளிபரப்பி வந்தனர்.

தொடர்ந்து நடிக்க முடியலை

தொடர்ந்து நடிக்க முடியலை

தொடர்ந்து ஒளிபரப்ப முடியாததால் போட்ட எபிசோடுகளையே திரும்பப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போ சின்னத்திரை படபிடிப்பு ஆரம்பித்த நிலையில் ரக்ஷாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம் பேசிக்கலி இவர் கர்நாடகத்துக்காரர். எனவே பெங்களூரிலிருந்து வந்து போக முடியாத சிச்சுவேஷன். அதனால் தான் அவரால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

நடிப்பும் அழகும்

நடிப்பும் அழகும்

இந்த சீரியலில் ரக்ஷாவின் நடிப்பும் அழகாக இருந்தது. அவருடைய அழகு மட்டுமல்ல நடிப்பும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்ததால் தான் இந்த சீரியலில் இவரை மாற்றியதும் ரசிகர்களால் தாங்க முடியவில்லையாம். சீரியலில் இருந்து இவரை சொல்லாமல் கொள்ளாமல் தூக்கியதற்கு அவர் வருத்தம் அடைந்தாலும் ரசிகர்கள் தன் மேல் இவ்வளவு பாசம் வைப்பதே நினைத்து ரொம்பவும் சந்தோஷம் அடைந்து இருக்கிறாராம்.

கவலைப்படாதீங்க மக்கா

கவலைப்படாதீங்க மக்கா

இந்த சீரியலில் தொடர்ந்து கலந்துகொள்ள முடியாமல் நின்று போனதை நினைத்து வருத்தமாக தான் இருக்கிறாராம். ஆனால் அதற்காக ரசிகர்கள் ஏதும் கவலைப்பட வேண்டாம் நான் விரைவில் உங்களை வந்து பார்க்க வருவேன் என்று கூறியிருக்கிறார். அடுத்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். அதில் இன்னும் சிறப்பாக நடித்து செயல்படுவேன் .மேலும் இனி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

முண்டியடிக்கும் கூட்டம்

முண்டியடிக்கும் கூட்டம்

இணையதள பக்கம் போனாலே இவரை தேடுற கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது. எல்லாருமே மிஸ் யூ ரக்ஷா அப்படின்னு தான் புலம்பித் தள்ளுவார்கள். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கு சில ரசிகர்கள் இவரை தேடிக்கொண்டு வருவார்களாம். அதுவும் தொலைதூரத்திலிருந்து கூட வந்திருக்கிறார்களாம். வரும்போது கிப்ட் கொண்டு வருவார்களாம். அதைப்பார்த்து இவங்க கூட நடிக்கிறவங்க எல்லாம் இவரை கிண்டல் பண்ணுவாங்க.

கியாரே செட்டிங்கா

கியாரே செட்டிங்கா

நீதான் காசு கொடுத்து ஆள் செட் பண்ணி இருக்கியா என்று கலாய்ச்சி தள்ளுவாங்களாம். ரக்ஷாவுக்கு இவ்வளவு தூரத்தில் இருந்து ரசிகர்கள் வருவது சந்தோஷமாக இருந்தாலும் அவங்க கிப்ட் வாங்கிட்டு வருவது அவருக்கு பிடிக்காதாம். 80க்கும் மேற்பட்ட போட்டோ பிரேம்கள் ரசிகர்கள் இவருக்கு கொடுத்திருக்காங்களாம். அதையெல்லாம் எங்க மாட்ட போறோம் என்பது தெரியாமல் இருக்காராம்.

வர்றேன் வர்றேன்

வர்றேன் வர்றேன்

இணையதளத்தில் ரசிகர்களுக்காக இவர் போட்ட வீடியோ இப்போ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இன்றைய வீடியோவை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்களாம். சீக்கிரமாக வாங்க ரக்ஷா உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் என்று உருகி உருகி கமெண்ட் போட்டிருக்கிறார்கள். வருவாங்கப்பா கொஞ்சம் பொறுங்க.. கொரோனோ போகட்டும்.. எங்க போய்ரப் போறாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+