Naam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் செம தூள் கிளப்புதுங்க. வீட்டில் எல்லாரும் குசும்பு பிடிச்சவங்களா இருக்காங்க. அதுவும் இந்த பாட்டி பேசுற குசும்பு இருக்குதே... அதை ஒரு ஸ்டோரியாவே எழுதலாம்.

உண்மையில மதுரைக்காரய்ங்க ரொம்ப குசும்புங்க. அங்கே ரவுடியா ஃபார்மாகறது கஷ்டம்தான். காரணம் வீட்டுக்கு வீடு ரவுடி கும்பலாவே மனுஷங்க இருந்தால் என்ன பண்றது?

யாருக்குத்தான் ரவுடியாக வாழணும்னு ஆசை இருக்காது.இது ஒரு கெத்துதானே. நம்மை பார்த்து மக்கள் பயப்படுவது, வணக்கம் வைப்பது ,பயந்துகிட்டு கையில் இருக்கு காசை கொடுப்பது என்று இருந்தால் ரவுடியாக வாழ .யாருக்குத்தான் ஆசை வராது?

பெண் டான்

பெண் டான்

தேவி பெண் டானாக ஒரு வாரத்துக்கு வாழனும்னு ஆசைவந்துருது. மாயன்தான் ஏற்கனவே ரவுடி கெட்டப்பில் டுபாக்கூராக இருப்பவனாச்சே. அவன்கிட்டே தனது ஆசையை சொல்ல, அவனும் ரவுடி ரெங்கம்மா கெட்டப்பில் அழைச்சுக்கிட்டு போயி, மார்க்கெட்டை துவம்சம் பண்றாங்க. சும்மா சுத்தறவனை கூப்பிட்டு பொளேர் பொளேர்னு அடிக்கறா.

வண்டிகளை தள்ளி

வண்டிகளை தள்ளி

காய் கறிகளை தூக்கி விசிறி, வண்டியை உதைவிட்டு உதார் விடறா. தக்காளி..சாரி வெங்காயத்தை ஒரு டானின் வாயில் வச்சு,காரில் உட்கார வச்சு கரை உதைக்கிறாள், கார் சும்மா பறக்குது. இது ஒரு டானுக்கு தேவியால் ஏற்பட்ட நிலைமை.

டானுக்கு டான்

டானுக்கு டான்

டானுக்கு டான் கண்மணி ராஜாவை சம்பவம் செய்யணும்னு வாடான்னு கூப்பிடறா. தேவி.எங்க அவன் பரம்பரை டானுங்க.. .விளையாடறீங்களான்னு கேட்கிறான் மாயன்.டேய் தள்ளுடா போயி பொருளை எடுத்துக்கிட்டு வரேன்னு சொல்லிட்டு மாடிக்கு டங்கு டங்குன்னு ஏறி போயி அறிவாளோட வர்றா.

கண்மணி ராஜா

கண்மணி ராஜா

டேய் டானாம்.. பெரிய டான். கூப்பிடுடா அவனை வெளியில இன்னிக்கு வெட்டி பொலி போடப்போறேன்னு சொல்லி தேவி நிற்கிறாள். கண்மணி ராஜா கண்மணி ராஜான்னு குரலைத் தாழ்த்தி கூப்பிட, டேய் இப்படி கூப்பிட்டா வெளங்கிரும்னு சொல்லிட்டு, டேய் கண்மணி ராஜான்னு கூப்பிட வீடு பூட்டி கிடக்குது. பக்கத்துல பார்த்தா, அவன் திண்ணையில உட்கார்ந்து இருக்கான்.

ஏற்கனவே உயிரில்லை

ஏற்கனவே உயிரில்லை


கிட்டே போயி பார்த்தால் அவனுக்கு ஏற்கனவே உயிரில்லை. தொட்டால் கீழே விழுந்துட்டான். அடடா அக்கா நாம சம்பவம் செய்யறதுக்குள்ள, யாரோ செய்துட்டாங்க. வாங்கக்கா ஓடிடுவோம்னு ரைட்டு சொல்ல, டேய் வாங்கடா..இந்த கொலையை நாம்தான் செய்தோம்.செல்பி எடுத்துக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போலாம்னு சொல்றா.

இதுதான் வடிவேலு பாணியிலே நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்னு சொல்றது. இந்த சம்பவம் சம்பவம்ன்னு போலீஸ் சொல்றதும் இதைத்தானா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+