naam iruvar namakku iruvar serial: ஜிங்குச்சா கலரில் 2 கலர் வேஷ்டி... துவைக்க மாட்டானோ?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரைக்கு அரவிந்தை விட்டுவிட்டு, வேறு ஒரு மாப்பிள்ளையுடன் இன்னொரு கல்யாணம் நடக்க இருக்குது. மண்டபத்தில் உட்கார்ந்து ரெண்டு பாட்டிகள் பேசும் வம்பை சுவாரஸ்யமாக காண்பிச்சு இருக்காங்க.
கல்யாண பெண் தாமரையோட அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி. அவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கறதை பத்தியும் பாட்டிங்க வம்பு பேசிக்கறாங்க. வாழக்கையை கெடுத்தவ வீட்டு பொண்ணுக்கு வெட்கமே இல்லாம புருஷனை அழைச்சுகிட்டு கல்யாணத்துக்கு வந்து இருக்காளேன்னு வம்பு பேசறாங்க.
தாமரை ரொம்ப நல்ல பொண்ணு.. இவங்க வீட்டில் கொஞ்ச நாள் இருந்தால்ல.. அந்த பாசத்தால் வந்து இருப்பாங்கன்னு வம்போடு வம்பா சேர்த்து பேசறாங்க. இனிமே இங்கே நிற்க வேணாம்.. வாங்க மண்டபத்துக்குள்ள போயிடலாம்னு பாட்டிங்க ரெண்டு பேருக்கும் பதில் சொல்லாம போயிடறாங்க.

ஜிங்குச்சா வேட்டி மாயன்
ஜிங்குச்சான் ஜிங்குச்சான் செவப்பு கலரு ஜிங்குச்சான் என்பது போல மாயன் எப்போதும் இரண்டு கலரில் வேட்டி கட்டிக்குவான். அந்த வேட்டி உள்ள ஒரு கலர் வெளியே ஒரு கலர்னு இருக்கும். இதே போல கல்யாண மண்டபத்துக்கும் தேவியோடு வந்து ஸ்டைலாக கூலிங் கிளாசோடு வந்து இறங்கிய மாயனை ரெண்டு பாட்டிகளும் கலாய்க்கறாங்க.

துவைக்கவே மாட்டானோ
இவன் யாருடி..ஓ.. படிக்காதவன் படிச்ச பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டானே அவனா? ரெண்டு கலர்ல வேட்டி கட்டி இருக்காண்டி என்று ஒரு பாட்டி சொல்ல, ஆமாண்டி.. அவன் அதைத் துவைக்கவே மாட்டான் போல இருக்கு.. மாத்தி மாத்தி கட்டிக்குவானோ என்னவோன்னு கலாய்க்கறாங்க. அந்த பொண்ணு எம்புட்டு அழகா இருக்கா .. அதான் ஆளு மயங்கி ஏமாத்தி கல்யாணம் கட்டிகிட்டான் போல் இருக்குன்னு வம்பு பேசிக்கறாங்க.

எதாவது செய்யணுமே
ஏய்.. நம்ம பேசறதையே பார்த்துகிட்டு இருக்கான். அவன் எதாவது செய்யறதுக்குள்ள போயிடுவோம்னு ரெண்டு பேரும் கிளம்பறாங்க. இவங்களை ஏதாச்சும் செய்யணுமேன்னு மாயன் யோசிக்க, அவனை கடந்து போயிகிட்டு இருந்த பாட்டிகளை நிறுத்தி, என்ன கிளம்பிட்டீங்க போல இருக்கு. சாப்பிடலை போல இருக்கேன்னு கேட்கறான். இல்லை.. வீட்டுக்கு போகணும் என்று அவர்கள் இருவரும் இழுக்க...

போனைத் திருடிறியளா?
ஆமாம் உன் புருஷன் எங்கே போயிருக்காருன்னு ஒரு பாட்டியிடம் கேட்கிறான். அவரு வெளியூறு போயிருக்காருன்னு இன்னொரு பாட்டியை பார்த்து இந்த பாட்டி கண் சிமிட்டியபடி நான் பொய் சொல்றேன்னு சொல்வது போல பேசுவது பார்க்க நன்றாக இருக்கிறது.ஓ.. அப்படியா.. ஜெயில்ல இருக்கார்னு கேள்விப்பட்டேன்னு மாயன் சொல்ல, நான் போறேன்னு சொல்லி கிளம்புது பாட்டி.அமாம் புதுசா இப்போ போனைத் திருடிறியளான்னு கேட்கறேன் மாயன்.

லோட்டா செல்போன்
ஆமாம் போன வாரம் நடந்த கல்யாணத்துல முப்பது உருப்புடி லோட்டா டம்ளர்னு திருட்டிப்புட்டீங்களாம். இதனால் கல்யாணமே நின்னு போச்சாமேன்னு மாயன் சொல்ல, இப்போ புதுசா செல்போனும் திருடுறீங்களாமேன்னு கலாய்க்கிறான். ரெண்டு பாட்டிகளும் ஓடிவிட, எப்படிடான்னு கேட்கிறாள் தேவி. எல்லாம் நடக்கறதுதாங்க.. உங்க செல்போன் பத்திரம்னு சொல்றான். இப்படி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் செய்யும் காமெடிகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்குது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications