Naam Iruvar Namakku Iruvar Serial: உன் மனசில் ஏதாவது ஒரு மூலையில் நான் இருந்தால்..!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்.தாமரையை டாக்டர் அரவிந்த் விவாகரத்து செய்து விடுகிறான். காரணம், அரவிந்த வளர்த்த அம்மாவுக்கு தாமரையை பிடிக்காமல் போனது மட்டும்தான்.
அரவிந்த்,மாயன் இருவரும் இரட்டையர்கள், மாயனின் பொண்டாட்டி தேவியின் அப்பாவும், அரவிந்தின் மனைவி தாமரையின் அப்பாவும் ஒருவர்தான்.அம்மாதான் வேறு வேறு. தாமரையை அரவிந்த் விவாகரத்து செய்தது, மாயனின் மனைவியான தேவியால் தாங்கிக்க முடியலை.
தங்கை தாமரையை தனது வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து, அவளுக்கு நிர்வாகம் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்,. அரவிந்த் தாமரை அடிக்கடி சந்திக்க ஒரே ஊரில் இருவரும் இருந்தால்தான் நல்லது என்று யோசித்து, தாமரையை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறா தேவி.

கோயிலில் இருவரும்
யதேச்சையாக அரவிந்த் விளக்கு ஏற்றி வைக்க கோயிலுக்கு வருகிறான். அங்கு தாமரையும் யதேச்சையாக வர ,அரவிந்த் அவளைப் பார்த்து எதுவும் பேச முடியாமல் நிற்கிறான். தாமரை அரவிந்தின் அருகில் வந்து, நல்லா இருக்கீங்களான்னு கேட்க, நீ பேசமாட்டேன்னு நினைச்சேன் தாமரைன்னு சொல்றான்.

நல்லா பார்த்துக்கிட்டீங்க
ஒரு வருஷம் ஒரே வீட்டில் இருந்திருக்கோம்.என்னை உங்க வீட்டில் இருந்தவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டீங்க. பேசாமல் போனால் நல்லாவா இருக்கும்? அதுதான் எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்னு மறுபடியும் சொல்றா.தாமரை என் மேல எதுவும் தப்பு.. என்று சொல்வதற்குள் நான் உங்களைத் தப்பு சொல்லவே இல்லைங்க. என்னை பிடிக்கலை விவாகரத்து பண்ணிடறேன்னு சொன்னீங்க .அதோட விட்டுட்டேன் .பழசெல்லாம் எதுக்குன்னு சொல்றா.

தாமரை அம்மாதான்
தாமரை உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்... அம்மாதான்னு அவன் சொல்லி முடிப்பதற்குள்.. ஐயோ அத்தையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லலைங்க. நடந்து முடிஞ்சதை பத்தியும் நான் ஒண்ணும் சொல்லலை. பழசு எல்லாத்தையும் மறந்துருவோம்ங்கன்னு சொல்லிட்டு கிளம்பறேன்னு சொல்லிட்டு போறா.

என்ன தாமரை
என்னை நாலு அடி அடிச்சுருக்கலாம் தாமரை. இப்படி பேசிட்டு போறியேன்னு கண் கலங்கின அரவிந்த், என் நினைவு உன் மனசின் ஒரு ஓரத்தில் இருந்தால் கூட என்னை நீ திரும்பிப் பார்ப்பே.. ப்ளீஸ் பாரு தாமரைன்னு கண்ணீருடன் அவளையே பார்த்து நிற்க, தாமரை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications