Naam Iruvar Namakku Iruvar Serial: கார்த்திக் ஆனந்தி கல்யாணத்துல என்னமோ இடிக்குதே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயனின் தங்கை என்று தெரிந்ததும் ஆனந்தியை கல்யாணம் செய்துக்க மறுக்கிறான் கார்த்திக். என் கல்யாணத்துலயும் உன்னாலதான் எனக்கு பிரச்சனை.. ஒரு அண்ணனா எனக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கியான்னு அழறா ஆனந்தி.

கார்த்திக்கின் அக்கா தேவியை மாயன் கல்யாணம் செய்துகொண்டதுதான் கார்த்திக்குக்கு பிடிக்கலை மாயன் படிக்காதவன், ரவுடி, தேவியை மிரட்டி கல்யாணம் செய்துக்கிட்டவன்.

இப்படி விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனுக்கு ஏகப்பட்ட ஃபிளாஷ்பேக்குகள். பாவம் நல்லவன் மாயன் ரவுடி கெட்டப் போட்டு பல கஷ்டங்கள்.. என்றாலும் எல்லாத்தையும் லேசா எடுத்துக்கறவன்தான் மாயன்.

சொன்னான் இப்போ?

சொன்னான் இப்போ?

மாயனின் தங்கை என்றவுடன் அவளை கட்டிக்கவே மாட்டேன்னு சொன்னவன், இப்போ அக்கா தேவியை விட்டுட்டு, அப்பாவின் இன்னொரு தாரத்துக்குப் பிறந்த தாமரை அக்காதான் இந்த கல்யாணம் நடக்க காரணம்னு சொல்றான். தாமரை கையால் தட்டை மாத்திக்கலாம்னு கார்த்திக் சொல்றான்..

நடப்பது போல

நடப்பது போல

மாயனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருக்கு. எப்படி இந்த நெட்டப்பு திடீர்னு கல்யாணத்துக்கு சம்மதிச்சான்.. இம்புட்டு நல்லவனா இருக்கானே.. இந்த லண்டன் ரிட்டர்னு கார்த்தின்னு நெகிழ்ந்து போறான்.தேவியிடமும் ஏங்க உங்க தம்பி இம்புட்டு நல்லவனான்னு கேட்டு நெகிழ்ந்து போறான்.

நெட்டப்புவை கட்டிப்பிடிச்சு

நெட்டப்புவை கட்டிப்பிடிச்சு

நேரா போயி கார்த்திக்கிடம்..நான் உங்களை தப்பாவே நினைச்சுப்புட்டேன் கார்த்திக் .நீங்க இம்புட்டு நல்லவங்களான்னு கட்டிப் புடிச்சுக்கறான். ஆனால், அந்த பக்கம் கட்டி புடிச்ச கார்த்திக்கின் முகம் நிறைய வஞ்சகம். இவன் என்ன பிளான் வச்சு இருக்கானோன்னு பிளான் போட்டு இருக்கனோ தெரியலையேன்னு ப்ரோமோவிலேயே போடறாங்கன்னா பாருங்க.

அரவிந்த் மாயன்

அரவிந்த் மாயன்

மாயனாகவும், அரவிந்தாகவும் மிர்ச்சி செந்தில் நடிச்சு இருக்கார்.மாயனாக இவர் பேசும் வசனங்கள், மதுரை பாஷையில் பேசி நக்கலடித்து ஜோக்கடிப்பது என்று நன்றாக சிரிக்க வைக்கிறார். இவருக்காக இந்த சீரியலைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+