Naam Iruvar Namakku Iruvar Serial: பாம்பே மம்மி கும்புடு மெசேஜ் போட்டுருக்கலாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் கேரக்டர் ரசிக்கும் படியாக இருப்பதால், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் குடும்ப பெண்கள் விரும்பி இந்த சீரியலை பார்க்கிறார்கள்.

நகைச்சுவை கலந்த கதாபாத்திரம்தான் என்றாலும், அரவிந்த் மாயன் என்று இரு வேடத்தில் செந்தில் நடிப்பதால், மாயன்தான் அனைவருக்கும் பிடித்த கேரக்டர்.

ரவுடி கெட்டப்பில் அசத்துகிறார் செந்தில்.இதில் இவர் பேசும் நகைச்சுவை வசனங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன.

 சொட்டப்பு நெட்டப்பு

சொட்டப்பு நெட்டப்பு

மாயன் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பேர் சொல்லி அழைப்பதே ரசிக்கும்படி இருக்கிறது. மனைவி தேவியை மட்டும்தான் மரியாதையாக வாங்க போங்க என்று அழைப்பான் மாயன். அடுத்து சித்தப்புவை சொட்டையாக இருப்பதால் சொட்டப்பு என்று கூப்பிடுவது..தேவியின் தம்பி நெட்டையாக இருப்பதால் நெட்டப்பு என்று கூப்பிடுவது என்று கலக்குகிறார்.

அரவிந்த் தம்பி

அரவிந்த் தம்பி

ஒட்டிப் பிறந்த தம்பி அரவிந்தை டாக்டரு தம்பி என்றும், அவனின் மனைவி தாமரையை லோட்டஸு என்று கூப்பிடுவதும், அரவிந்தை எடுத்து வளர்த்த அம்மா அப்பாவை பாம்பே மம்மி பாம்பே டாடின்னு கூப்பிடறதும் செம ஜோர். மருமகளை மகனை விட்டு பிரித்ததில் தன் மீதுதான் தவறு என்று பாம்பே மம்மியாக நடிக்கும் சவீதா ஆனந்த் மாயனை அழைத்து மன்னிப்பு கேட்கிறார்கள்.

எதுக்கு ஃபீலிங்

எதுக்கு ஃபீலிங்

பாம்பே மம்மி மாயனை வர சொல்லிவிட்டு கண்ணீர் விட்டு அழுதுட்டு இருக்காங்க. பாம்பே மம்மி எதுக்கு இந்த ஃபீலிங்கு? இதெல்லாம் உங்க மூஞ்சிக்கு செட்டாகாதுன்னு சொல்றான். என்னை மன்னிச்சுரு மாயான்னு அவங்க சொல்ல அதுக்கு எதுக்கு இவ்ளோ ஃபீலிங்.. வாட்சப்பில ஒரு கும்பிடு மெசேஜ் போட்டு இருக்கலாமேன்னு மாயன் சொல்றது நல்லா இருக்கு.

தாமரை மாயன்

தாமரை மாயன்

மாயா நான்தான் அரவிந்த் தாமரையை வாழ விடாம பண்ணிட்டேன். தாமரைகிட்டே நான் பேசணும்.நீ சொல்லி அழைச்சுக்கிட்டு வான்னு சொல்றாங்க. அதானே பார்த்தேன்.. மெயின் மேட்டர் இதுதானா? அதுக்குத்தான் என்னைய நேரில் வர சொன்னீங்களா? எனக்கு இதெல்லாம் வேணாம்.. லோட்டஸை எப்படியாச்சும் கோயிலுக்கு வர வைக்கிறேன்..நீங்களே பேசிக்கோங்க பாம்பே மம்மின்னு சொல்றான்.

இப்படி கதை நகர்ந்தாலும் மாயனாக செந்தில் கெட்டப் சூப்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+