சீமான் பற்றி அவருடைய "அம்மா” வருத்தம்.. மேடையிலே கண்கலங்கிட்டாரே..! கோழிகளுக்கும் இந்த நிலைமையா?
சென்னை: அரசியல் பிரமுகராகவும் தமிழ் திரைப்பட இயக்குனராகவும் இருக்கும் சீமான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது சீமானின் அம்மாவோடு சீமான் நிகழ்ச்சியில் போனில் பேச வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது சீமான் பற்றிய சீமானுடைய ஆரம்ப காலம் பற்றியும் சீமானுடைய அம்மா வெள்ளந்தியாக பேசியது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி வட்டாரத்திற்குட்பட்ட அரனையூர் என்று சின்ன கிராமத்தில் பிறந்த சீமான் இன்று பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமாகி இருக்கிறார். சமூக வலைதளத்தில் சீமான் உடைய காரசாரமான விவாதங்களும் கேள்விகளும் இன்றைய இளம் தலைமுறைகள் பலரையும் கவர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் சீமான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது சீமானுடைய சொந்த ஊர் பற்றி பற்றியும் அவருடைய அம்மா பற்றியும் ஒரு வீடியோ ஒன்று பிளே செய்திருந்தனர். அதில் சீமானுடைய அம்மா பேசியிருந்தார். அவர்," எனக்கு எப்போதாவது என் மகன் போன் பண்ணுவான். அப்போ நல்லா இருக்கியா பா.. எப்படி இருக்கான் பேரன். நல்லா இருக்கானா? மருமக நல்லா இருக்காளா? என்று கேட்பேன் அதற்கு அவர் இருக்கிறதை சொல்லுவான்.

என் மொவன் காலேஜ் தான்யா படிச்சிருக்கான். அதுக்கு மேல படிக்க வைக்க எங்ககிட்டயும் வசதி இல்ல. அவன் படிக்கவும் மாட்டேன்னு சொல்லிடுச்சு. ஆடு மேச்சுது. நாங்க போலீஸ் ஆக்கலாம். இல்ல ஒரு மிலிட்டரியில சேர வைக்கலாம்னு ஆசைப்பட்டோம். ஆனா மூணு வருஷம் காலேஜ் படிச்சிட்டு மெட்ராசுக்கு போனாரு. போய் அங்கேயே இருந்துட்டாரு. படம் எடுக்கிறேன்னு இருந்துச்சு. இப்போ கட்சியில் அரசியல்வாதியாக இருக்கிறான்.
ஆனாலும் இப்பவும் அவன் வேலைய அவன் பார்க்கிறான். நம்ம வேலையை நம்ம பார்க்கிறோம். இப்போ நான் விவசாயம் தான் பார்க்கிறேன். விவசாயம் தானே பாக்கணும். இல்லன்னா சாப்பாடு எப்படி சாப்பிட முடியும்? என் புள்ள கூட பேசறதுக்கு எனக்கு ஆசைதான்.இப்ப மகள் என் மகனுக்கு மக்கள் தான் பெருசு. நாங்க எல்லாம் அவன் இஷ்டம் போல விட்டுட்டோம்.
எப்போதும் என் மகன் நல்லா இருக்கணும்னு மட்டும் நான் நினைக்கிறேன் என்று அந்த வீடியோவில் சீமானின் அம்மா பேசியிருக்கிறார். அதைக் கேட்டு சீமான் கண் கலங்கி இருக்கிறார். பிறகு சில நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அம்மாவை நான் சந்தித்தேன். அப்போ எங்கம்மா அலைபேசி என்று கேட்டேன். அது எதுக்கு எனக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பேசுவ அதை நான் கையிலேயே வச்சுக்கிட்டு இருக்கவா? அதனால அதை வேண்டாம்னு விட்டுட்டேன் என்று சொன்னாங்க.

அதோடு அம்மா கூட இப்போ வேற யாரும் இல்ல. அம்மா மட்டும்தான் விவசாயம் பாக்குறாங்க. அப்பாவும் இறந்துட்டாங்க. முன்னாடி தங்கச்சி மாப்பிள்ளையும் கூட விவசாயம் பார்த்தாங்க. இப்ப அவங்களும் இல்ல என்று பேசிக் கொண்டிருக்க, நிகழ்ச்சியில் இருக்கும்போதே சீமான் அவருடைய அம்மாவிடம் பேசுவதற்காக போன் செய்து கொடுக்கப்படுகிறது. அப்போது பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய அம்மா வெள்ளந்தியாக சீமானிடம் நலம் விசாரித்துக் கொண்டு, "ஐயா என்ன பேட்டி எடுக்க வந்தாங்க. ஏதோ ஜீ தமிழ் என்று சொன்னாங்க. எனக்கு அதை சரியா கூட சொல்ல தெரியல யய்யா" என்று சொல்ல அங்கே அரங்கத்தில் சிரிப்பொலி அலைமோதுகிறது.
அப்போது சீமான் அவருடைய அம்மாவிடம் நான் வரும் 27 வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி எனக்கு நாட்டுக்கோழி அடிச்சு வைங்க என்று சொல்ல, கண்டிப்பா வச்சிருவேன் ஐயா என்று அவருடைய அம்மாவும் சொல்கிறார். பிறகு போனை கட் பண்ணுன பிறகு சீமான் தன்னுடைய வழக்கமான நகைச்சுவையால் "எங்க அம்மா என்கிட்ட எப்பவும் சொல்லுவாங்க. நான் ஊருக்கு போகும்போது நாட்டுக்கோழி அடிச்சு வச்சு குழம்பு வச்சிருப்பாங்க.
அப்போ நான் குழம்பு வைக்க கோழி பிடிக்கணும்னு போனா அதுங்க எல்லாம் சீமான் சிவகங்கைக்கு வந்துட்டாண்டி ஓடுங்கடி.. கையில மாட்டினா இன்னைக்கு நமக்கு பரலோகம் தாண்டின்னு சொல்லிக்கிட்டு ஓடுது" அதனாலதான் நேத்திக்கு ராத்திரியே புடிச்சு அடைச்சு போட்டுட்டேன். அதை அடிச்சு குழம்பு வச்சிருக்கேன்னு சொல்லுவாங்க. என்று தன்னுடைய அம்மா குறித்து சீமான் பேசியிருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications