நாதஸ்வரம் சீரியல் மகா ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பண்ணுறாரு தெரியுமா? ஆளே மாறிட்டாரே?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் மகா கேரக்டரில் நடித்த கீதாஞ்சலி லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகன் கோபி பின்னாடி சுற்றும் மகா இப்போ என்ன செய்கிறார் என்று விரிவாக பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இப்போது மாதிரி சோசியல் மீடியா பயன்பாடு கிடையாது என்பதால் அனைவருடைய என்டர்டைன்மெண்டும் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதிலும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம்.

நாதஸ்வரம் சீரியல் கதை
பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் மட்டுமல்லாமல் வேலை பார்ப்பவர்களும் வீடு திரும்பும் நேரத்தில் ஒரு சில வீட்டில் மட்டுமே டிவி உண்டு. அந்த டிவியில் தெருவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சில சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்து வந்தனர். அந்த வரிசையில் தான் நாதஸ்வரம் சீரியலும் உண்டு. இந்த சீரியலை இயக்கியது திருமுருகன். திருமுருகன் சீரியல்கள் எப்போதும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் தான் இருக்கும்.
நாதஸ்வரம் சீரியலில் கதாநாயகனாக கோபி கேரக்டரில் அவர்தான் நடித்து வந்தார். அவர் மலர் என்ற பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பார். ஆனால் அந்த பெண் பணக்கார வீட்டு பெண் என்பதால் அவருடைய பெற்றோர் அவருக்கு இன்னொருவருடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மலரை திருமணம் செய்தவர் அவரை ரொம்பவும் கொடுமைப்படுத்த அவரிடமிருந்து தப்பித்து வந்து கோபியையே மறுமணம் செய்து கொள்வார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
நாதஸ்வரம் மகா
ஆனால் கோபியை அவருடைய அத்தை பொண்ணு விரட்டி விரட்டி காதலித்துக் கொண்டிருப்பார். கோபி மற்றும் மகாவிற்கு தான் தான் திருமணம் என்று குடும்பத்தினரும் பேசி முடித்திருந்தார். ஆனால் கோபி மலரை இரண்டாவது திருமணம் செய்ததால் கோபி மீது மகா கோபமாக இருப்பார். நாதஸ்வரம் சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி ஒளிபரப்பானது. அதிலும் ஒரு எபிசோடில் எந்த எடிட்டிங் செய்யாமல் லைவாக ஒளிபரப்பாகி கின்னஸ் ரெக்கார்டு படைத்தது.

அடையாளம் தெரியாத மாற்றம்
இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டனர். அந்த வரிசையில் நடிகை கீதாஞ்சலி அதாவது மகாவாக நடித்த நடிகையையும் இப்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். கீதாஞ்சலிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறதாம். அவர் இப்போது எந்த சினிமா சீரியலிலும் நடிக்க வில்லையாம்.
நாதஸ்வரம் சீரியல் வெற்றி
நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகு வாணி ராணி மற்றும் ராஜா ராணி போன்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதால் இப்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களையும் கீதாஞ்சலி சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

சீரியல் வாய்ப்பு
அதுபோல நாதஸ்வரம் சீரியலில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றும் பேசுகின்றார். அதாவது கீதாஞ்சலியும் அவருடைய உறவினர் ஒருவரும் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது திருமுருகன் எதார்த்தமாக தெருவில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது கீதாஞ்சலியின் உறவினர் திருமுருகனிடம் பேசிவிட்டு இது எங்க தெரு பொண்ணு தான் ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்கு திருமுருகன் சரி போட்டோ அனுப்புங்க பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.
சினிமாவில் நடிக்க ஆசை
பிறகு கீதாஞ்சலியும் அவருடைய தங்கையும் போட்டோ அனுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்ததும் திருமுருகன் ஆடிஷன் வர சொல்லி இருக்கிறார். பிறகு கீதாஞ்சலியை தேர்வு செய்து விட்டாராம். ஆனால் கீதாஞ்சலி அப்போது நான் சினிமாவில் நடித்த ஆசைப்பட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு திருமுருகன் சிரித்தபடியே கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருந்தாராம். ஆனால் நாதஸ்வரம் சீரியல் எனக்கு இவ்வளவு பெயர் வாங்கி கொடுக்கும் என்று நான் அந்த நேரத்தில் நினைக்கவே இல்லை என்று கீதாஞ்சலி பேசியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications