நல்லகண்ணு கிட்ட நேரிலேயே கிளம்பி போன சிவகார்த்திகேயன்.. கைகளை பற்றி சொன்ன அன்பான பிறந்தநாள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் விடுதலை போராட்ட வீரர், அய்யா நல்லகண்ணுவை, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நேரில் சந்தித்து தனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இன்று 100வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.. அவரது 100-வது பிறந்தநாள் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார.

sivakarthikeyan nallakannu

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்பளிப்பு: நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்த தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்... இதைத்தொடர்ந்து நல்லுகண்ணுவின் பிறந்தநாள் விழாவில், முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரையாற்றும்போது, "பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததாக நம்மை பொறுத்தவரை யாரும் கருதி விட முடியாது. தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன்.

திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளக்கிக்கொண்டிருப்பவர் அய்யா நல்லகண்ணு. எதையும் அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தும் ஐயா நல்லகண்ணுவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அய்யா நல்லகண்ணுவை கேட்டுக் கொள்கிறேன்" என்று புகழாரம் சூட்டினார்.

பிறந்தநாள் வாழ்த்து: இன்று நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியினை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அத்துடன், நல்லகண்ணுவை நேரிலேயே சென்று சந்தித்துள்ளார்.. இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில், 'இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.

குகேஷி: நேற்றைய தினம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷியை நேரில் வரவழைத்து வாழ்த்து கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.. தனது அலுவலகத்திற்கு வரவைத்து அவரை பாராட்டியதுடன், வாட்ச் ஒன்றையும் கிப்ட் தந்திருந்தார். இந்நிலையில், இன்று நல்லகண்ணுவின் பிறந்தநாளுக்கு, நேரிலேயே கிளம்பி சென்று அன்பையும், வாழ்த்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+