எல்லாவற்றுக்கும் காரணம் பொறாமை! இதை மட்டும் பண்ணுங்க.. சர்ச்சைக்கு மத்தியில் நாஞ்சில் விஜயன் வீடியோ
சென்னை: சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமான நாஞ்சில் விஜயன், சமீபத்தில் தன் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, அந்த சர்ச்சைக்குப் பதிலளிப்பதைப் போல இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

யார் இந்த நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். மிமிக்ரி மற்றும் நகைச்சுவைப் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். பின்னர், அசத்தல் சுட்டீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இவர், சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அரசியல் தலைவர்களை மிமிக்ரி செய்தது, டிக் டாக் பிரபலம் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது அவருக்குப் புதியதல்ல.
திருமணம் மற்றும் சர்ச்சைகள்
நாஞ்சில் விஜயன், தனது சகோதரி மூலமாக அறிமுகமான மரியம் என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
ஆனால், சமீபத்தில், வி.ஜே வைஷு என்ற திருநங்கை, நாஞ்சில் விஜயன் மீது ஒரு அதிர்ச்சி அளிக்கும் புகாரை அளித்தார். "நாஞ்சில் விஜயனும் நானும் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அவர் திருமணம் செய்து கொண்ட பிறகும் என்னுடன் உறவில் இருந்தார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என்னை யார் என்றே தெரியாது என ஒதுக்கிவிட்டார்" என்று வைஷு குற்றம் சாட்டினார். இந்த புகார், நாஞ்சில் விஜயனுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பதில் சொன்ன வீடியோ
இந்தச் சர்ச்சை ஓயாத நிலையில், நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு குட்டிக் கதை சொல்கிறார்: ஒரு அம்மா, தன் பக்கத்து வீட்டில் ஒரு மாமரம் நிற்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார். இதனால், தன் வீட்டு குப்பைகளை எல்லாம் பெருக்கி, அந்த மாமரத்தின் அருகே கொட்டுகிறார். சில நாட்கள் கழித்து, மாமரத்தின் உரிமையாளர் மாம்பழங்களுடன் அந்தப் பெண்ணைப் பார்க்க வருகிறார். இதை பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மனது கஷ்டம் ஆகிறதநா, நான் உன் வீட்டுக்கு இவ்வளவு குப்பைகளைக் கொட்டினேன், நீயோ மாம்பழத்தோடு வந்திருக்கிறாயே?" என்று அந்தப் பெண் கேட்கிறார். அதற்கு அந்த வீட்டுக்காரர், "நீங்கள் கொட்டிய குப்பைகள் என் மாமரத்திற்கு உரமாக மாறி, அதிகப் பழங்களை காய்க்கச் செய்துவிட்டன" என்று சொல்கிறார்.
இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, நாஞ்சில் விஜயன், "இதுபோல்தான் நம் வாழ்க்கையும். அடுத்தவர்கள் நம் மீது பொறாமையால் எவ்வளவு குப்பைகளைக் கொட்டினாலும், அதையெல்லாம் நம் வளர்ச்சிக்கு உரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று பேசியுள்ளார்.
நாஞ்சில் விஜயனின் இந்தப் பேச்சு, திருநங்கை வைஷு அளித்த புகாருக்கு மறைமுகமாக அவர் கொடுத்த பதில் போல இருப்பதாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications