ரூ.100 கோடி.. பணத்திலேயே "குளித்த" நெப்போலியன்.. பாஜகவுக்கு ஏன் போனாரு தெரியுமா: ஓபனாக சொன்ன பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெப்போலியன் எப்படி திரைத்துறைக்கு வந்தார்? அவருக்கு சான்ஸ் கிடைக்க உதவி செய்தவர்கள் யார்யார்? அரசியலில் நெப்போலியன் செய்தது என்ன? என்பது குறித்தெல்லாம் விலாவரியாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

Kumudam Reporter யூடியூப் சேனலுக்கு திருச்சி சூர்யா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "நெப்போலியனை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால், புண்ணியமானவர், தூய்மையானவர், உண்மையானவர் என்ற ரீதியில் நெப்போலியனை சித்தரிக்க யாரும் முயற்சிக்காதீங்க.. கே.என். நேருவின் அக்கா மகன்தான் நெப்போலியன்.

television napoleon dhanush

1989-ல் நேரு அமைச்சரானபோது, வாட்டசாட்டமாக வெள்ளை சட்டை போட்டு, PA மாதிரி நெப்போலியனை தன்னுடன் அவர் வெச்சிருந்தார்... ஒரு கல்யாணத்துக்கு பாரதிராஜாவிடம் பத்திரிகை தருவதற்காக வந்தபோது, நெப்போலியன் பற்றி சொல்லி, சினிமாவில் வாய்ப்பு கேட்டுள்ளார் நேரு.

பாரதிராஜா: ஆனால், அதை பாரதிராஜா கண்டுக்கல. விபி துரைசாமி பாரதிராஜாவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர்மூலம் கேஎன் நேரு அழுத்தம் தந்துதான், நெப்போலியனுக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்தார். நெப்போலியன் பிரபலமாகி, பல படங்களில நடித்தபோதும், கோடிகளில் ஒன்றும் சம்பாதிக்கவில்லை. உச்ச நடிகர் என்றும் பெயர் வாங்கவில்லை. நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார். ஆனால் சம்பாதிக்கவில்லை.

இதற்கு பிறகு திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகிறார்.. அப்போதும் அவர் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அடுத்தமுறை எம்எல்ஏ தேர்தலில் நின்று தோற்றுவிடுகிறார். பிறகு நண்பர் ஒருவர் மூலம், சின்ன தொகையை கொண்டு, ஐடி கம்பெனியை ஆரம்பித்தார். ஆனால், எதிர்பாராத வகையில் வானத்தை பிளந்து கொண்டு பணம் அதில் கொட்டியது.

பணத்திமிர்: இந்த பணம் சம்பாதிச்ச பிறகு, எம்எல்ஏ சீட்டுக்காக நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று நினைத்து, 50 கோடி ரூபாய் கொடுத்து பெரம்பலூர் எம்பி சீட் வேண்டும் என்று திமுகவில் கேட்டார்.. பெரம்பலூர் பொதுத்தொகுதியாக மாறிவிடவும், அந்த தொகுதியை நெப்போலியன் கேட்டார்.. ஆனால், நேருவின் தம்பியான ராமஜெயமும் அதே பெரம்பலூரில் சீட் கேட்டார்.

இந்த விஷயத்தை கலைஞர் கேள்விப்பட்டு நேருவை அழைத்து சத்தம் போட்டார்.. "ஒரே குடும்பத்தில், ஒரே தொகுதியை கேட்பது சரியல்ல? உன் குடும்பத்தில்தான் மந்திரிகள் இருக்க வேண்டுமா" என்று கேட்ட கலைஞர், இறுதியில் அந்த தொகுதிக்கு நெப்போலியனை அறிவித்துவிட்டார். தன்னுடைய தம்பிக்கு சீட் கிடைக்கவில்லையே என்ற கோபம் கே.என். நேருவுக்கு நெப்போலியன் மீது ஏற்பட்டது. நெப்போலியன் தோற்க வேண்டும் என்று வேலை பார்த்தும்கூட, அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

100 கோடி ரூபாய்: இதனால் மறுபடியும், 100 கோடி ரூபாய் தந்து மத்திய அமைச்சர் பதவி கேட்டு வாங்கி கொள்கிறார் நெப்போலியன்.. தன்னுடைய தம்பிக்கு சீட் கிடைக்க விடாமல் செய்ததற்காக மு.க.ஸ்டாலினிடம், நெப்போலியன் பற்றி நெகட்டிவான விஷயங்களை சொல்லி சொல்லி தருகிறார் கேஎன் நேரு. கடைசியில், ஸ்டாலினுக்கு ஆகாதவராக நெப்போலியன் மாறிவிட்டார். இதனால், நெப்போலியன் மு.க. அழகிரியிடம் சரணடைந்துவிட்டார்.

ஆனால், நாலரை வருஷம் மந்திரி பதவியில் கோடிகளில் குளித்தார் நெப்போலியன்... தொகுதிக்கு வருவதேயில்லை.. யாருக்குமே ஒன்னும் செய்யல.. கடைசியில் சம்பாதித்த பணத்தை அமெரிக்காவில் கொண்டுபோய் திணிச்சுட்டார்.. அரசியலில் பதவியை அனுபவித்தது குறித்து பலரும் பேசவும், "என் மகனுக்கு உடம்பு சரியில்லை, அமெரிக்காவில் வைத்தியம் பார்க்கணும்னு சொல்லிட்டாரு

உச்சக்கட்ட பதவி: அமெரிக்காவில் இருக்கிறதிலேயே உச்சக்கட்ட பணம் கொட்டும் தொழில் விவசாயம்தான்.. குதிரைகளுக்கு புல் போடுவதற்கான 300 ஏக்கர் நிலம் வாங்கி வெச்சிருக்காரு.. விவசாயத்தில் வேற லெவலுக்கு போயிட்டாரு. அங்கேயே நிரந்தரமா தங்கிட்டாரு.

அப்படியானால் எதுக்கு பாஜகவில் சேரணும்? திமுகதானே நெப்போலியனை வாழ வைத்தது? கேஎன் அன்று இல்லையென்றால், சினிமா, அரசியலில் நெப்போலியனால் வந்திருக்க முடியுமா? நெப்போலியனை நடிகராக்கியது திமுக.. சட்டமன்ற உறுப்பினராக்கியது திமுக.. எம்பி.யாக்கியது திமுக.. அமைச்சராக்கியது திமுக.. கடைசியில் நாலரை வருஷம் சம்பாதித்துவிட்டு, அமெரிக்காவுக்கு போயாச்சு.

நெப்போலியன்: "கலைஞர் இறந்துவிட்டாலும் நேரடி அரசியலுக்கு தன்னால் வரமுடியவில்லை, எனினும் திமுகவிலேயே இருப்பேன்" என்று நெப்போலியன் சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு பாஜக போகணும்? கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற, தேசிய கட்சியில் இருந்தால்தான் சரிவரும்.. அந்த பணத்துக்கு தொந்தரவு வராது என்பதற்காகவே பாஜகவில் சேர்ந்தார்..

இப்போது கேஎன் நேரு, நெப்போலியன் இருவருமே நெருக்கமாகிவிட்டார்கள். "ப்ரூ வேலிவியூ ஹோம்ஸ்" என்ற கே.என் நேரு நிறுவனம், அமெரிக்காவில், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறது. நேரு இங்கே சம்பாதிக்கக்கூடிய கருப்பு பணம், அமெரிக்காவில் நெப்போலியன் மூலமாகத்தான் வெள்ளையாக மாறுகிறது. அந்தவகையில், குடும்ப ரீதியான பணபரிமாற்றம் இவர்களுக்குள் இருக்கிறது.

இனத்துரோகி: கடந்த முறை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, 2 நாட்கள் நெப்போலியன் வீட்டில்தான் தங்கினார். பாஜவுக்கு போயிட்டதாலே நான் இவங்களுக்கெல்லாம் ஆகாதவன்? அப்ப நெப்போலியன் பாஜகவுக்கு போனாரே, அவங்க வீட்டுக்கு எதுக்கு முதல்வர் போனாரு? எதுக்கு அவங்க வீட்டில் சாப்பிட்டாரு? என்னை மட்டும் இனத்துரோகின்னு திமுகவில் சொல்றாங்க?" என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் திருச்சி சூர்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+