நெப்போலியனின் குலசாமி மருமகள்.. அம்மா வீட்டுக்கு போன அக்ஷயா.. புறப்பட்ட புரளி.. சபாஷ் நெப்போலியன்
சென்னை: நடிகர் நெப்போலியன் சமீபத்தில் தன்னுடைய வீட்டுக்கு பிரபலங்களை அழைத்து சந்திப்பு நடத்தியிருந்தார்.. அதில் அவரது மருமகள் அக்ஷயா எங்கே? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.. இதையடுத்து, நெப்போலியன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறியிருக்கிறார்.. அத்துடன் அன்பான வேண்டுகோள் ஒன்றையும் நெப்போலியனுக்கு விடுத்துள்ளர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் என்பவருக்கும், அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது.

சமீபத்தில், நெப்போலியன் தன்னுடைய வீட்டுக்கு பல பிரபலங்களை அழைத்து சென்று மகன் தனுஷை சந்திக்க வைத்து இருந்தார். பரிதாபங்கள் கோபி சுதாகர், மாதம்பட்டி ரங்கராஜ், தொழிலதிபர் ஆதித்யராம் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்..
அந்த வீடியோக்களில் தனுஷ் மட்டுமே இருந்தார். மருமகள் அக்ஷயா இல்லை. அதனால் அவர் எங்கே போனார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூத்த மகன் தனுஷின் மனைவி அக்ஷயா, நெப்போலியன் இல்லத்திற்குத் திரும்பியுள்ளார். இந்த நிகழ்வை ஒரு விழாவாகவே நெப்போலியன் கொண்டாடி, தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோவாக ஷேர் செய்திருந்தார்.. இந்த வீடியோ வைரலாகி, நிலவி வந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு போனது.
இந்நிலையில்தான், Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "நெப்போலியன் மகன் தனுஷ், திருமணத்தின்போது புஷ்டியாக இருந்தார்.. பிறகு உடல் சற்று நலிவுற்றதுபோல இருக்கிறது..
வில்லிவாக்கம் எம்எல்ஏ
தன்னுடைய மகன் சந்தோஷமே நெப்போலியனுக்கு சந்தோஷமாகும்.. ஆரம்பத்தில் வில்லிவாக்கத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.. பெரிய தொழிலதிபராகி, பல ஏக்கருக்கு சொந்தமானார். அதேபோல ஐடி கம்பெனியும் சொந்தமாக வைத்திருக்கிறார்..
மகனுக்கு திருமணத்தை நல்லபடியாக செய்தார்.. அது தொடர்பான வீடியோவையும் நெப்போலியனே பதிவிட்டிருந்தார்.. ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, மருமகளை காணோமே? என்று சோஷியல் மீடியாவில் பலரும் கமெண்ட்களை எழுப்ப துவங்கிவிட்டனர்..
"என்னுடைய குலசாமி வந்துருச்சு"
இதற்கு பிறகுதான், "என்னுடைய குலசாமி வந்துருச்சு" என்று தன்னுடைய மருமகள் வந்ததை பெருமிதமாக குறிப்பிட்டார்.. ஏர்போர்ட்டில், வீட்டில் மருமகளுக்கு பூ மழை தூவி வரவேற்றார்.
தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக மருமகள் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.. இதுதான் விஷயம்.. அதுக்குள்ளே மருமகள் எங்கே? தனுஷை பிரிந்தாரா அக்ஷயா? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் கேள்விகளை கேட்டு விடுவார்கள்.. மருமகள் சொந்த ஊருக்கு சென்று வந்ததை ஏன் நெகட்டிவ்வாக பேச வேண்டும் என தெரியவில்லை.. அது ஒரு சாதாரண விஷயம்..
எதுக்கு நெகட்டிவ்வா பேசணும்
பொதுவெளியில் நெகட்டிவ்வாக ஆயிரம் பேசலாம், ஆயிரம் கேள்வி கேட்கலாம்.. ஆனால், நிஜம் என்ன என்பது நெப்போலியன் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும்.. இதுபோன்ற விஷயத்தையெல்லாம் கற்பனையாக பேசக்கூடாது.. நெகட்டிவ்வாகவும் நினைக்கக்கூடாது. மருமகள் எங்கே என்று பலரும் கேட்டதற்குதான், வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெப்போலியன்.
எனினும், அவர் பதிவிடும் வீடியோக்களில், வரும் கமெண்ட்களை நெப்போலியனும் படித்திருப்பார் என்பதால், குடும்ப விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்களையும், அது தொடர்பான வீடியோக்களையும் பதிவிடாமல் இருப்பார் என்றே நம்புகிறேன். விளம்பர வெளிச்சத்திலிருந்து விலகியிருப்பது நல்லது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
வெளிச்சத்தை குறைக்கணும்
தன்னுடைய மகனுக்காகவே அமெரிக்காவில் செட்டில் ஆனவர் நெப்போலியன்.. மகனுக்காக எதையும் செய்யக்கூடியவர். பரிதாபங்கள் கோபி, மாதம்பட்டி ரங்கராஜ் சென்று தனுஷை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இது தனுஷின் விருப்பமாக இருக்கலாம்.. 3 நாள் அவர்களுக்கான டிக்கெட், அமெரிக்காவில் சுற்றிப்பார்ப்பதற்கான வசதி வாய்ப்புகளை செய்து தந்துள்ளனர்.. மகனுக்கு பிடித்ததால், அவர்களை அழைத்து சென்று காண்பித்துள்ளார் நெப்போலியன்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications