Napoleon: அசிஸ்டன்டுக்காக நெப்போலியனுடன் விஜய் மோதல்! இரவு 2மணிக்கு நடந்த சம்பவம்: பிஸ்மி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லனாகவும், பின்னர் அண்ணன், அப்பா போன்ற பாசமிகு கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் நெப்போலியன். தற்போது அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மூத்த மகன் தனுஷுக்குத் தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) வந்ததால், அதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அங்கேயே நிரந்தரமாக வசித்து வருகிறார்.

நெப்போலியன் சினிமாவில் இருந்தபோது, நடிகர் விஜய்யுடன் 'போக்கிரி' படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய்யுடன் தனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவருடன் சேர்ந்து நடிப்பதையோ, பேசுவதையோ நிறுத்திவிட்டதாகவும் நெப்போலியன் சில பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

Napoleon Vijay Bismi

நெப்போலியனின் ஆதங்கம்

மோதலுக்கான காரணத்தைக் குறித்து நெப்போலியன் நேரடியாகப் பேசினாலும், பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் சொன்ன தகவல் தான் இப்போ ஷாக் கொடுத்திருக்கு. நெப்போலியன் தன் பேட்டிகளில், "அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது நண்பர்கள் விஜய்யைச் சந்திக்க ஆசைப்பட்டாங்க. அதுக்காக விஜய்யோட கேரவனுக்குக் கூட்டிட்டுப் போனபோது, விஜய் கேரவனுக்கு வெளியே வைத்து ஒரு மாதிரி பேசிட்டாரு"ன்னு சொல்லியிருக்காரு. இத்தனைக்கும் நெப்போலியன் தமிழ்நாட்டுல ஒரு சீனியர் நடிகரா, அரசியல்வாதியா இருந்தவர். அவரே ஒரு நடிகர். அவருக்கே அப்படி நடந்தா எப்படி இருக்கும்?

பிஸ்மி சொன்ன ஷாக் தகவல்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியப் பத்திரிகையாளர் பிஸ்மி, அன்றிரவு ஷூட்டிங்கில் நடந்தது என்னன்னு விளக்கமா சொல்லியிருக்கார். "போக்கிரி படத்தில் நடிக்கும்போது **இரவு 2 மணிக்குத்தான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. நெப்போலியனோட நண்பர் ஒருத்தர் விஜய்யைப் பார்க்க விருப்பப்பட்டிருக்காரு.

உதவியாளர் சொன்னது

அந்தக் களேபரமான நேரத்துல, விஜய் தனதுக் காட்சியை முடிச்சுட்டு, கேரவனுக்குள்ளே உடை மாற்றிக்கிட்டு இருந்தாராம். நண்பரை அழைச்சுட்டு நெப்போலியன் கேரவன் கதவைத் திறக்கப் போறப்போ, அங்க இருந்த உதவியாளர், 'விஜய் சாரே உடை மாற்றிக்கொண்டு வெளியே வருவார். அதுவரை திறக்காதீர்கள். காத்திருங்கள்'ன்னு சொல்லியிருக்காரு. இதனால் கோபமடைந்த நெப்போலியன், அந்த உதவியாளரை ஒருமையில் திட்டினாராம்.

விஜய் வந்த காட்சி

சத்தம் கேட்டு விஜய் வெளியே வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கார். அப்போ உதவியாளர் நடந்ததைச் சொல்ல, விஜய் அங்கிருந்தவங்க எல்லாரும் முன்னாடியும் நெப்போலியன் கிட்ட, "நீங்கள் எப்படி அவரைத் திட்டலாம்? நான் சொல்லித்தான் இந்த வேலையைச் செய்றார். எதுவாக இருந்தாலும் என்னிடம்தானே சொல்லியிருக்கணும். அவரை ஏன் திட்டினீங்க?"ன்னு கோபத்தோடு கேட்டாராம்.

நெப்போலியனின் வருத்தம்

இத்தனை பேர் முன்னாடி விஜய் இப்படித் தன் உதவியாளருக்காகப் பேசிட்டாரேன்னு நெப்போலியன் மனசு வருத்தப்பட்டதால தான், அப்போதிருந்து விஜய்யோட சேர்ந்து நடிப்பதை நிறுத்திட்டார். விஜய் ஒரு சூப்பர் ஸ்டாரா இருந்தாலும், தனக்குக் கீழே வேலை செய்றவங்களுக்குக் கொடுத்த மரியாதையைப் பாராட்டி ஒருபக்கம் பேசினாலும், நெப்போலியன் போன்ற ஒரு சீனியர் நடிகரை இப்படிப் பேசியிருக்கலாமான்னு ஒரு கேள்வியும் எழத்தான் செய்யுது. மொத்தத்துல, ரெண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில நடந்த இந்தக் கருத்து வேறுபாடு தான், அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிக்காமல் போனதுக்கு முக்கியக் காரணம்னு பிஸ்மி தன்னோடப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+