100 சவரன் தங்கம்.. நெப்போலியனே சொல்லிட்டாரு.. தனுஷூக்கு 2வது திருமணம்? எப்போ? சொல்றது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தொழிலதிபருமான நெப்போலியனை பாராட்டியும், அவரது மகனின் 2வது திருமணம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து, இணையத்தில் தொடர்ந்து வைரலாகி கொண்டே வருகிறது.

Paper Weight Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில் சொன்னதாவது: "நெப்போலியன் மகனுக்கு 2ம் திருமணம்.. இதை நான் சொல்லல.. இப்படியொரு தகவலை சொன்னதே நடிகர் நெப்போலியன்தான்.. "ஜப்பானில் நடந்தது எங்களது சந்தோஷத்துக்காக.. தனுஷூம், அக்‌ஷயாவும் அமெரிக்காவில்தான் வாழ போறாங்க.. அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை தேவை.. இதற்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய வேண்டும்.

television napoleon dhanush

இந்த திருமணம் அமெரிக்காவின் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காகத்தான், 2வது திருமணம் நடைபெற உள்ளது.. இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க போகிறேன்" என்று நெப்போலியன் சொன்னார்.

தனுஷ் திருமணம்: முதல்ல ஜப்பானில் கல்யாணம் நடப்பதாகவே இல்லை. இதனை உறுதிப்படுத்தியவர் தனுஷ்தான்.. 4வயது வரை தனுஷ் நன்றாகவே ஓடியாடி விளையாடி கொண்டிருந்தார்.. இதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்திருந்தார் நெப்போலியன்..

4 வயதுக்கப்புறம்தான் தசை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆயுசுக்கும் இருக்கும் என்று டாக்டர்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள். சித்தா, ஆயுர்வேதம் மருத்துவம் செய்து பார்த்தும் முன்னேற்றம் ஏற்படாததால்தான், தனுஷின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு குடும்பத்துடன் அமெரிக்கா குடிபுக நேர்ந்தது.

திருமணம்: தனுஷூக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதுமே, நெப்போலியனின் மாமனார், மாமியாரும் பெண் பார்க்க துவங்கியிருக்கிறார்கள்.. அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் அக்‌ஷயா வீடும் இருந்துள்ளது.. அக்‌ஷயாவின் நடவடிக்கைகளை கண்டு, இந்த பெண் தனுஷூக்கு சரியாக இருப்பார் என்று நினைத்து, அவரிடம் பேசியிருக்கிறார்கள்.

அக்‌ஷயாவிடம் தனுஷின் போட்டோவை காண்பித்து, நோய் பற்றியும் விவரித்து, மனைவியாகவும், தாயாகவும் இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிவித்துள்ளார்கள்.. அதற்கு பிறகுதான் வீடியோ காலில் பேசி ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டார்கள். இருவருமே காதலித்துள்ளார்கள்.. மணமகளின் பெற்றோரும் சம்மதித்துள்ளார்கள்.. அதற்கு பிறகே திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது..

நிச்சயதார்த்தம்: ஆனால், இந்த நிச்சயதார்த்தத்துக்கு தனுஷ் செல்லவில்லை.. திருமணத்துக்காக ஜப்பானில் ஆடம்பர சொகுசு கப்பலில் 3 மாதம் பயணித்து, ஜப்பான் வந்தது நெப்போலியன் குடும்பம். ஒருநாள் விட்டு ஒருநாள் கப்பலில் வீடியோ போடுவார் நெப்போலியன்.. அதெல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் நெப்போலியன்.. எம்எல்ஏ, எம்பி, மத்திய இணை அமைச்சர் பதவியை வகித்தவர்.. அமெரிக்கா சென்று தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்தினார். பிறகு பிஜேபியில் சேர்ந்தார்.. ஆனால், உடனே பிஜேபியிலிருந்தும் விலகிவிட்டார்.

பெருமைதானே: எனினும், தொட்ட இடம் பொன்னாகும் என்பதை நிரூபித்தவர் நெப்போலியன் 2 ஆங்கில படங்களிலும் நடித்தார்.. ஹாலிவுட் படங்களில் இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.. ஒரு தமிழன் அமெரிக்காவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் அது நமக்கு பெருமைதானே? " என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

அதேபோல, ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியிருப்பதாகவும், அதில், மணமகள் அக்‌ஷயா பெயரில் 200 கோடி சொத்தினை நெப்போலியன் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. 100 பவுனுக்கு மேல் நகைகள், தங்கக்கட்டிகளாகவும் நெப்போலியன் தந்திருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது" என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+