நெப்போலியன் தியாகியா? எதுக்கு டிராமா? காசு தந்து கல்யாணத்துக்கு அழைக்கப்பட்ட நடிகைகள்: பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெப்போலியன் ஒரு பெண்ணை பெற்றிருந்தால், அந்த பெண்ணை இப்படியான நபருக்குதான் திருமணம் செய்து தருவாரா? ஏன் தன்னுடைய சொந்தக்காரர்களிடம் மகனுக்கு பெண் எடுக்கவில்லை? ஏழ்மையான குடும்பத்தில் பெண்ணை எடுத்தது ஏன்? என்று திருச்சி சூர்யாக காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Kumudam Reporter யூடியூப் சேனலுக்கு திருச்சி சூர்யா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "நெப்போலியனை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் நமக்கில்லை.. அவருடைய மகனின் திருமண விஷயத்தை பொறுத்தவரை, அவர் செய்தது நல்ல விஷயம்தான்.. ஒரு தகப்பனாக மகனுக்கு செய்வது சரியே.

television napoleon dhanush

ஆனால், பொதுமக்களின் பார்வையிலோ அல்லது அந்த மணப்பெண்ணின் பார்வையிலே அல்லது அந்த பெண்ணின் வாழ்க்கையை பார்க்கக்கூடிய சாமான்யனின் பார்வையிலோ நெப்போலியன் செய்தது தவறு.

விவசாயம்: குதிரைகளுக்கு புல் போடுவதற்காக 300 ஏக்கருக்குஅமெரிக்காவில் வாங்கி வைத்திருக்கிறார். விவசாயத்தில் வேற லெவலுக்கு போய்விட்டார். ஆனால் காசு இருக்கிற திமிரில் இப்படியெல்லாம் செய்வதை ஏற்க முடியாது.

யூடியூபர் இர்பானுக்கு போன் செய்து நெப்போலியன், "என்னுடைய மகன் உனன்னுடைய விசிறி.. உன்னை பார்க்க ஆசைப்படுகிறான், எனக்காக அமெரிக்கா வரணும்" என்று சொல்லி, பிசினஸ் கிளாஸ் டிக்கெட், தங்குவதற்கு வசதிகள் என பலவற்றையும் செய்து தருகிறார். உடனே இர்பானும் இங்கிருந்து கிளம்பும்போதே, வீடியோக்களை போட்டுக் கொண்டு போகிறார்.. அங்கே சென்றபிறகும் ஹோம் டூர் வீடியோ, போன் வாங்கி தருவது, கேஎஃப்சியில் சாப்பிடுவது என வீடியோக்களை போடுகிறார்.

பாப்புலாரிட்டி: இந்த வீடியோக்கள் எல்லாம் பல லட்சம் வியூசர்கள் பெறுகிறது.. இவ்வளவு காலம், சினிமா, அரசியலில் இல்லாத பாப்புலாரிட்டி, யூடியூப் சேனல்கள் மூலம் கிடைப்பதை பார்த்து நெப்போலியனே ஆச்சரியப்படுகிறார்.

அதனால், மகனுடைய திருமணத்தையும் பிரபலப்படுத்த நினைக்கிறார். மறுபடியும் இர்பானை மகனின் திருமணத்துக்கு வரவழைக்கிறார்.. இதுபோக 2 டியூப் சேனல்களுக்கு காசு தந்து, ஃபிளைட் டிக்கெட் உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்து வரவழைக்கிறார்.. இந்த யூடியூப் சேனல்காரங்க யார் வீட்டு எழவு நடந்தாலும், யார் வீட்டில் கல்யாணம் நடந்தாலும் காசு தந்தால் உடனே போய் நிப்பாங்க.. இர்பானை வைத்து, அந்த 2 சேனல்களையும் கல்யாணத்துக்கு அழைக்கிறார்.

நடிகைகள்: நடிகைகள் குஷ்பு, மீனா, சுகாசினி என என மூத்த நடிகைகள் எல்லாருமே காசு தந்துதான் அழைக்கப்பட்டார்கள்.. தங்கியிருந்த 2 நாளைக்கும் பேமண்ட்.. இதெல்லாம் ஏன் செய்யறீங்க? பணத்திமிர்தானே?

மகனின் திருமணத்தை 4 சொந்தக்காரர்களை கூப்பிட்டு முடித்திருக்கலாமே? என்னமோ யாருமே சாதிக்காததை நீங்க சாதிச்சிட்ட மாதிரி, அந்த பொண்ணை குலதெய்வம்னு சொல்றதும், உடனே இவர் அழறதும், இதுக்கு ஒரு தம்ப்நெயில் வீடியோ போட்டு, எதுக்கு இந்த டிராமெல்லாம்?

சுப்ரமணியன்: இந்த நேரத்தில் இதை நான் சொல்வது தவறுதான். ஆனாலும் சொல்கிறேன்.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கும், இதேபோன்ற பாதிப்பு கொண்ட மகன் இருந்தான். அந்த மகனை தாய், தகப்பன் இருவரும் கடைசிவரை கூடவே வைத்து பார்த்துக் கொண்டார்கள். சமீபத்தில் அந்த மகன் தவறிவிட்டான். எனினும், இதுபோன்ற பாதிப்புடையவர்களுக்கு பெற்றோர் கூடவே வைத்து பார்த்து கொள்ள வேண்டும.

காரணம், சாதாரண மனிதனின் வாழ்நாளில் பாதிகூட இதுபோன்றவர்களுக்கு இருக்காது.. அவர்களால் முழுமையான வாழ்க்கையை வாழ முடியாது.. இவர்களால் குழந்தையும் பெத்துக்க முடியாது. அப்படியே பெற்றுக்கொண்டாலும், 99 சதவீதம் இதுபோன்ற பாதிப்பு, அந்த குழந்தைக்கும் என்கிறார்கள். மருத்துவர்களே இதை சொல்கிறார்கள்.

தனுஷ் விசிறி: நான் ஒரு வழக்கறிஞராக நிறைய கேஸ்களை பார்க்கிறேன். போனவாரம்கூட ஒரு விவாகரத்து கேஸ் என்னிடம் வந்தது. மனைவி மிகப்பெரிய தனுஷ் விசிறி.. தனுஷின் படத்தை முதல்நாள், முதல் ஷோ தன்னை பார்க்க விடாமல் கணவர் தடுப்பதாக குற்றஞ்சாட்டி விவாகரத்து கேட்டார். எந்நேரமும் வேலை வேலை என்று அலைகிறார், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவன் அட்டன்ஷன் தரவில்லை என்பதே அந்த மனைவியின் குற்றச்சாட்டு.

உடல் தேவைகளும் பெண்களுக்கு இருக்கிறது. இதில் தவறும்போதுதான், கள்ளக்காதல்கள் பெருகிவிடுகின்றன. பெரும்பாலான கள்ளக்காதல் விவகாரத்தில், தங்கள் கணவன் மீதுதான் பெண்கள் குறை சொல்கிறார்கள். இதையெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது..

வசதிகள்: வசதிகள் இருந்தால் போதும் என்று பெண்ணின் பெற்றோர் நினைத்து அனுப்புகிறார்கள்.. ஆனால், வசதிகள் மட்டும் போதுமா? அப்படியானால் இயற்கையாக உள்ள பிரச்சனைகளையும் இங்கே பேச வேண்டியிருக்கு.. நெப்போலியன் குடும்பத்தில் அந்த பொண்ணோட லைஃப் என்னாகும்? கடைசிவரை அந்த பெண்ணுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்?

மிகப்பெரிய குடும்பம், வசதி இருக்கிறது என்ற சந்தோஷத்தில் அந்த பெண் அங்கே செல்கிறார் என்றாலும், கொஞ்ச நாள் கழித்துதான், எதை இழந்திருக்கிறோம் என்பது தெரியவரும். நெப்போலியன் ஒரு பெண்ணை பெற்றிருந்தால், அந்த பெண்ணை இப்படியான நபருக்குதான் திருமணம் செய்து தருவாரா? ஏன் தன்னுடைய சொந்தக்காரர்களிடம் மகனுக்கு பெண் எடுக்கவில்லை? ஏழ்மையான குடும்பத்தில் பெண்ணை எடுத்தது ஏன்?

தியாகியா: பணத்திமிரில் இப்படி செய்யும்போது, இதை நாலஞ்சு யூடியூப் சேனல்கள் வீடியோ போட்டு நெப்போலியனை தியாகின்னு சொல்றதையெல்லாம் எப்படி ஏற்பது?" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+