கல்யாணம் முடிந்த 3 மாதத்தில் நெப்போலியன் மகனுக்கு பங்க்ஷன்.. மலேசியா இரட்டைக் கோபுரத்தில் கொண்டாட்டம்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் அக்ஷயா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மூன்று மாதம் கழித்து இப்போது மலேசியாவில் நெப்போலியன் குடும்பத்தினர் அடுத்த பங்க்ஷனை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியன் குடும்பத்தினர் பற்றிய செய்திகள் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. நெப்போலியனின் மூத்த மகன் நான்கு வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு 23 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நெப்போலியன் வரன் பார்த்திருந்தார்.

திருநெல்வேலி பொண்ணு
தன்னுடைய குடும்பத்திற்கு தமிழ்நாட்டு பொண்ணுதான் மருமகளாக வேண்டும் என்று நெப்போலியன் ஆசைப்பட்டது போலவே திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண் பற்றி தெரிய வந்தது. தன்னுடைய மனைவியின் அப்பா பார்த்த வரனை தன்னுடைய மகனுக்கு பேசி முடித்திருந்தார். அப்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருந்த நிலையில் தன்னுடைய மனைவியோடு பெண் வீட்டிற்கு வந்து எங்கேஜ்மென்ட் செய்திருந்தார்.
தசை சிதைவு நோய்
நெப்போலியனின் மகன் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவர் அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. இந்த செய்திகள் இணையத்தில் அதிகமாக வைரல் ஆனது. அப்போது அதிகமான விமர்சனங்களும் எழுந்தது. தசை சிதைவு நோயால் எழுந்து நடக்க முடியாமல் வீல்சேரில் வாழ்க்கை நடத்துபவருக்கு திருமணம் தேவையா? என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

சிறந்த அப்பா
ஆனாலும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக எடுத்த முடிவு சரியான முடிவு என்று பலரும் அவரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில் நெப்போலியன் மகன் ஆசைப்பட்டது போலவே அவருடைய திருமணம் ஜப்பானில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பல சினிமா பிரபலங்களும் ஜப்பானுக்கு சென்றிருந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
ஜப்பானில் திருமணம்
அதற்கு பிறகு மூன்று மாதங்களாக ஜப்பானிலேயே குடும்பத்தோடு சுற்றி பார்த்து வந்த நெப்போலியன் குடும்பத்தினர் இப்போது அமெரிக்காவிற்கு கிளம்பி இருக்கிறார்கள். அதற்கு இடையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

மீண்டும் ரிசப்ஷன்
இந்த நிலையில் நெப்போலியனின் நண்பரான ஜீவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெப்போலியன் மகன் தனுஷின் ரிசப்ஷன் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதிலும் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகு மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தில் இவர்களுடைய ரிசெப்ஷன் நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டிருக்கிறது.
நெப்போலியன் பதிவு
அப்போது நெப்போலியனின் மகன் மற்றும் மருமகள் இருவரும் கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் தன்னுடைய மகன் திருமணம் முடிந்து 100 நாட்கள் முடிவடைந்துவிட்டது என்று நெப்போலியன் மகிழ்ச்சியான வீடியோ வெளியிட்டு இருந்தார். அதுவும் காதலர் தினத்தில் தன்னுடைய மகன் திருமணம் ஆகி 100 நாள் வந்தது. தங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றும் பகிர்ந்து இருந்தார். இப்போது தன்னுடைய மகனின் ரிஷப்ஷனை அவர் பிரம்மாண்டமாக செய்து இருக்கிறார். அக்ஷயா மற்றும் தனுஷ் தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications