சீரியலுக்கு வரும் நாட்டாமை பட டீச்சர்... கேரக்டர் இதுதானாம்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக பிரபலமான நடிகை ரக்ஷா தற்போது ஜீ தமிழில் விரைவில் வரவிருக்கும் சீதா ராமம் என்னும் சீரியலில் நடிக்க இருக்கிறாராம்
சென்னை: ஜெமினி திரைப்படத்தில் "ஓ போடு" எனும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை ரக்ஷா தற்போது ஜீ தமிழில் சீரியலில் அறிமுகமாக இருக்கிறாராம்.
நடிகையாக பலருக்கும் தெரிந்த ரக்ஷா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் முதல் முறையாக அறிமுகம் ஆகிறார்.
நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக அந்தக் காலத்து இளைஞர்கள் முதல் இப்ப வரைக்கும் ரசிகர்களுக்கு டக்கென்று நினைவிற்கு வந்துவிடும் இவர் தற்போது அம்மா கேரக்டரில் சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

நாட்டாமை டீச்சர்
ஒரு சிலர்தான் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதேபோல இருப்பார்கள் அந்த மாதிரி தான் தற்போது நடிகை ரக்ஷா என்று அழைக்கப்படும் ராணியும் இருந்து வருகிறார். இவர் நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக இளைஞர்கள் முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை ரசிகர்களாக சுற்ற விட்டவர் தான். இந்த திரைப்படத்தில் சரத்குமார் நடிப்பையும் இந்த திரைப்பட பாடலையும் மறக்க முடியாத ரசிகர்கள் அதோடு டீச்சரை மறக்கவே முடியாது என்று தான் கூறி வருவார்கள். அந்த அளவிற்கு அனைவருடைய மனதிலும் இடத்தை பிடித்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள படத்தில் அறிமுகம்
1992 ஆம் ஆண்டு ஜானிவாக்கர் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி முதல் முறையாக நாட்டாமை திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். அதற்குப் பிறகு தொடர்ந்து பதவிப்பிரமாணம், நம்ம அண்ணாச்சி, ராசையா, கர்ணா, அந்த நாள், அவ்வை சண்முகி, காதல் கோட்டை என பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு பட பாடலுக்காக இவர் ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலில் போட்ட குத்தாட்டம் பலராலும் இப்ப வரைக்கும் மறக்க முடியாதாக தான் இருந்து வருகிறது.

வாய்ப்பு பலருக்கும் அமைவதில்லை
என்னதான் திறமை இருந்தாலும் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு சிலரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியாமல் விடுகின்றனர். அந்த மாதிரி தான் ரக்ஷா என்று அழைக்கப்படும் ராணியும் இருந்து வருகிறார். இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து இவருக்கு பெரிய வாய்ப்புகள் வராததால் சின்ன சின்ன கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இவர் தற்போது சின்னத்திரையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறார். அதுவும் ஜீ தமிழில் முதல்முறையாக இவர் அறிமுகமாக இருக்கிறாராம்.

ரசிகர்கள் வெயிட்டிங்
ஜீதமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீதா ராமன் என்னும் சீரியலில் இவர் கதாநாயகனின் அம்மாவாக நடிகை இருப்பதாக தகவல்கள் வெளியில் இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் சன் டிவியில் ரோஜாவாக நடித்த பிரியங்கா நல்கிரி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து நடிகை ரக்ஷா சீரியலுக்கு வருவது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. இவருக்காகவே நாங்கள் சீரியல் பார்க்க ரெடி என்று இவருடைய ரசிகர்கள் பலர் இப்போதே கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் குவித்து வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications