anbudan kushi serial: அன்புடன் குஷியில் வரும் ஜோடி.. அட நம்ம நாயகி ஜோடியாச்சே இது!
Recommended Video
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ஜோடி, விஜய் டிவியின் அன்புடன் குஷி சீரியலில் இணைஞ்சு நடிச்சு இருக்காங்க. அதாவது ஆனந்தியின் மாமனார், மாமியாரான கலிவரதன் வசந்தி தம்பதியராக நடிப்பவர்கள் விஜய் டிவியின் அன்புடன் குஷி சீரியலில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
அன்புடன் குஷி சீரியல் கதை ஒரு சேட்டு குடும்பத்தின் கதை. அதாவது மார்வாடி குடும்பம் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வாழும் கதை.
ஆரம்பத்தில் ஒரு காட்சி மட்டும் ராஜஸ்தானில் வசிப்பது போன்ற செட்டப்பில் ஷூட் செய்து இருக்கிறார்கள். குறைகளை எடுத்துக் கூறி சீரியல்கள் எடுத்து வரும் விஜய் டிவி, இந்த முறை மார்வாடி குடும்பத்தின் கதையை கையில் எடுத்து உள்ளது.

அன்பு வேலைக்காரன்
மார்வாடியிடம் வேலை செய்யும் அன்பு என்கிற இளைஞராக நடிகர் பிரஜன் நடிக்கிறார். இவர் அந்த ஏரியாவின் செல்லப்பிள்ளை. சீரியலில் பாக்ஸரும் கூட. நிறைய பெண்களுக்கு இவரை பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் இவரை வைத்து இந்த சீரியலை எடுத்து இருக்கிறார்கள். அதன் படி இவர் வெறும் உள் பனியன், பேன்ட் சகிதமாககாட்சி அளிப்பது என்னவோ நன்றாக இல்லை.

எந்த காலத்துல
என்னதான் நார்த் மெட்ராஸ் புள்ளீங்கோ என்றாலும் கூட பனியன் பேன்ட் சகிதமாக காட்சி அளிப்பது முகம் சுளிக்கும்படியாக இருக்கிறது. எந்த காலத்துல பசங்க இப்படி இருக்காங்கன்னு சொல்லி, நல்ல டீசண்ட் என்று பேன்ட்டை இடுப்புக்கு கீழேயும், ஜட்டியை இடுப்புக்கு மேலேயும் போட்டு கெத்து காட்டும் புள்ளீங்கோக்களை இனி புடிச்சு இவங்க முன்னாடி நிறுத்தணும். என்னதான் பாக்சரா இருக்கட்டுமே...இப்புடியா?

சின்ன ஜோடி
வழக்கமா சீரியல்களில் அல்லது சினிமாவில் சின்ன வயது ஜோடிகள்தான் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்குன்னு சொல்லி அடுத்தடுத்து ஜோடி சேர்க்க ஆசைப்படுவாங்க. ஆனால், பாருங்க நாயகி சீரியலின் வசந்தி கலிவரதன் ஜோடி சீரியல் எடுப்பவர்கள் ஃபேவரைட் ஜோடியாகிட்டாங்க. இந்த சக்ஸஸ் ஜோடியை அன்புடன் குஷியில் இணைத்துள்ளனர். இதுவும் வரவேற்கத்தக்க நல்ல மாற்றம்தான்.

மார்வாடிஸ் தீபாவளி
மார்வாடிஸ் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடுவதை வைத்து சீரியல் கதையை ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக சேட் குடும்பம் எப்படி எதற்காக ராஜஸ்தானில் மகள் குஷியை விட்டுவிட்டு, தம்பதி சகிதமாக சென்னை வந்ததையும் காண்பித்து இருக்கிறார்கள். பெண்பிள்ளை தமிழ்நாடு வந்து தமிழக கலாச்சாரம், தமிழ் பையன் என்று விரும்பிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்தான் காரணமாம்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications