13 ஆண்டு தவம்! நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்புக்கு ஆண் குழந்தை! புகைப்படத்தை வெளியிட்ட தம்பதி
சென்னை: நடிகை வித்யா பிரதீப்பிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை வித்யா பிரதீப். இவர் பயோ டெக்னாலஜி படித்துவிட்டு முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சிறு வயது முதலே மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட இவர், நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

எனினும் படித்துக் கொண்டே நடித்தார். வித்யா பிரதீப் கடந்த 2010ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் டான்ஸராக நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவருடைய நடிப்பும், நடனமும் பெரிதும் கவரப்பட்டது.
இந்த படத்திற்கு பிறகு விருந்தாளி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஹீரோவாக மைக்கேல் ஈஸ்வர் நடித்திருந்தார். இவருக்கும் நடிக்கும் போதே காதல் ஏற்பட்டது. மைக்கேலை பெற்றோர் சம்மதத்துடன் தனது 18 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
மைக்கேல் சில படங்களில் நடித்த நிலையில் அவர் இப்போது போட்டோகிராபராக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தனது காதல் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை பயோடெக்னாலஜி படிக்க வைத்தார். இந்த நிலையில் சைவசம் திரைப்படம் வித்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அது போல் பசங்க 2 படத்திலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.35 படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப், சன் டிவியின் நாயகி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவருக்கு படங்களை விட இந்த சீரியல் மிகப் பெரிய ரீச்சை கொடுத்தது. ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வீட்டு வேலைக்கு வரும் ஆனந்தி, அந்த வீட்டு பையனையே திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு அந்த பையன் திருவின் அப்பா எதிர்ப்பு, அவருக்கு பணக்காரரான தனது நண்பரின் மகளை மருமகளாக்க விரும்பினார். ஆனால் விதி விளையாடியது. அந்த பணக்கார நண்பரின் மகளால் ஆனந்தி- திருவுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அழகாக இந்த சீரியல் சொன்னது.
இவருக்கு திருமணமானதே பலருக்கும் தெரியாது. இந்த நிலையில்தான் தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என தெரிவித்து தனது கணவருடனான புகைப்படங்களை வெளியிட்டார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்த வித்யாவுக்கு கடந்த நவம்பரில் சீமந்தம் நடந்தது.
நிறைமாதமாக தனது கணவருடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த வித்யாவுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் வித்யா- மைக்கேல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். குழந்தை செம க்யூட்டாக தூங்கிக் கொண்டிருக்கிறது! சமத்து!












Click it and Unblock the Notifications