Nayagi Serial: முடிஞ்சுருமோன்னு பார்த்தா.. புதுசா தொடங்குது!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நீங்களும் நானும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால், சீரியல் என்னவோ ரேட்டிங்கில் இன்னும் இன்னும் என்று எகிறிக்கொண்டே போகிறது.
மக்களுக்கு இது போல கோபம் தாபம், பொறாமை, பழிவாங்கும் தன்மை.சொத்தாசை என்று இதெல்லாம் அளவுக்கு மீறி இருந்து அதற்காக போராடும் கதைதான் ரொம்ப பிடிக்கும் போல என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அனன்யா மாதிரி ஒரு பெண் இப்படி இருந்து சாதிக்கப் போவது என்ன என்று பல ஆயிரம் கேள்விகள் நமக்குள் இருந்தாலும், இதற்கு விடை கூறுவார் யாரும் இல்லை.

நாயகி வித்யா
நாயகியின் நாயகி ஆனந்தியாக நடித்து இருக்கும் வித்யா பிரதீப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயகி 500 வது எபிசோடைத் தாண்டி வெற்றியுடன் என்று ஒரு கேக் மற்றும் புகைப் படத்தை பகிர்ந்து உள்ளார். இப்போது இந்த சீரியல் இரண்டாவது தலைமுறைக் கதையை துவங்கி இருக்கிறது.

அனன்யா ஆனந்தி
ஆனந்தி அனன்யா இருவரில் திரு ஆனந்தியைக் காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதில் ஆரம்பிக்குது பிரச்சனை. அனன்யா திருவின் மீது பைத்தியமாக இருக்கிறாள்.இதனால் அவனுக்கே தெரியாமல் அவனது உயிரணுக்களை எடுத்து தனது கருவில் டெஸ்ட் டியூப் பேபியாக்கி வளர்க்கிறாள்.

போவாளா பெண்
ஒரு பெண் இந்த அளவுக்கும் போவாளா என்று எண்ணும்படி இருக்கிறது அனன்யாவின் செயல், ஜெயிலில் அனன்யா திருவின் ஆண் குழந்தையைப் பெத்து எடுக்க, ஆனந்தி தனது புருஷன் திருவின் பெண் குழந்தையைப் பெத்து எடுக்கிறாள். இரு குழந்தைகளும் வளர்ந்து இப்போது சிறுவர்,சிறுமிகளாகி இருக்கின்றனர்.

கதை முடியும்
ஆனந்தியின் சொத்துக்களை திருவின் அப்பா கலிவரதனிடம் இருந்து மீட்டு விட்டார்கள். பிள்ளைகளும் பிறந்துவிட்டது... கதை இனி முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால், இப்போது செகெண்ட் இன்னிங்ஸ் கதை பிள்ளைகளில் இருந்து துவங்குகிறது.












Click it and Unblock the Notifications