தனுஷுக்கு போட்டி? போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா! விலை இத்தனை கோடி! இவ்வளவு வசதிகளாம்!
சென்னை: தமிழ் சினிமாவில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகை நயன்தாரா மீண்டும் ஒருமுறை தனது ஆடம்பர வாழ்க்கை முறையால் கவனம் ஈர்த்துள்ளார். சமீபத்தில் அவர் சென்னையின் மிகவும் பிரபலமான மற்றும் உயர்ந்த குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டன் பகுதியில் ஒரு மிகப்பெரிய ஆடம்பர அபார்ட்மெண்டை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நயன்தாரா வீட்டின் மதிப்பு
இந்த அபார்ட்மெண்ட் சுமார் ₹31.5 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து இந்த வீட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மிகவும் பிரபலமான குடியிருப்பு பகுதியாக இருக்கும் போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருப்பது தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
போயஸ் கார்டன் சிறப்பு
போயஸ் கார்டன் என்பது சாதாரண குடியிருப்பு பகுதி அல்ல. தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் சினிமா உலகில் பல முக்கியமான பிரபலங்கள் வசித்த அல்லது வசித்து வரும் இடம் இது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் வசித்த புகழ்பெற்ற இடமாக போயஸ் கார்டன் நீண்ட காலமாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட பிரபலங்கள் வசிக்கும் அந்த பகுதிக்கே இப்போது நயன்தாராவும் குடியேறவிருக்கிறார்.
டூப்ளக்ஸ் ஆடம்பர அபார்ட்மெண்ட்
நயன்தாரா வாங்கியிருக்கும் இந்த வீடு ஒரு சாதாரண அபார்ட்மெண்ட் அல்ல. இது ஒரு டூப்ளக்ஸ் அபார்ட்மெண்ட் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரே வீட்டாக இருந்தாலும் இரண்டு மாடிகள் இணைந்து இருக்கும் வகையில் கட்டப்பட்ட வீடு.
இந்த வீடு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் அமைந்துள்ளது. மொத்தமாக பார்த்தால் சுமார் 14,369 சதுர அடி பரப்பளவில் பரந்த அளவில் இந்த வீடு அமைந்திருக்கிறது. அதோடு சேர்த்து சுமார் 5,308 சதுர அடி நிலப்பகுதியும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சொத்து வாங்கும் ஒப்பந்தம் கடந்த 2025 டிசம்பர் 15 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அபார்ட்மெண்ட் திட்டத்தை உருவாக்கிய நிறுவனம் Landmark Metro Projects Private Limited என கூறப்படுகிறது.

வீட்டு உரிமை பகிர்வு
இந்த வீட்டின் உரிமையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 90% உரிமை நயன்தாராவுக்கும், 10% உரிமை விக்னேஷ் சிவனுக்கும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த அபார்ட்மெண்டில் அவர்களுக்காக 8 கவர் செய்யப்பட்ட கார் பார்க்கிங் இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய அளவில் வசதிகள் கொண்ட இந்த வீடு மிகவும் நவீன வசதிகளுடன் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் சொத்து மதிப்பு
இந்த புதிய வீட்டை வாங்கியதன் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் மொத்த ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு தற்போது ₹100 கோடி முதல் ₹120 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இதற்கு முன்பே நயன்தாராவுக்கு சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் சுமார் 7,000 சதுர அடி பரப்பளவில் ஒரு பெரிய பங்களா உள்ளது. அந்த வீட்டை அவர் தற்போது ஒரு ஸ்டுடியோவாக மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பல நகரங்களில் சொத்துக்கள்
சென்னை மட்டும் இல்லாமல் இந்தியாவின் பிற நகரங்களிலும் நயன்தாராவுக்கு சொத்துக்கள் உள்ளன. குறிப்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அவருக்கு இரண்டு பிரீமியம் அபார்ட்மெண்ட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் ₹15 கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது சொந்த ஊரான கேரளா மாநிலத்திலும் ஒரு பெரிய பாரம்பரிய வீடு இருப்பதாகவும், அது மிகவும் ஆடம்பரமான சொத்துக்களில் ஒன்றாக கருதப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சினிமாவிலும் வெற்றி - வாழ்க்கையிலும் ஆடம்பரம்
தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். திரைப்படங்களுடன் சேர்த்து பல தொழில் முயற்சிகளிலும் அவர் முதலீடு செய்து வருகிறார்.
இந்த நிலையில், போயஸ் கார்டன் போன்ற பிரபலமான பகுதியில் ₹31.5 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பது அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை மீண்டும் ஒருமுறை பேசவைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தானும் போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்கி விட்டேன் என்று சொல்லி இருந்தார். தான் அங்கு குடியேற கூடாதா என்று அவர் கேட்டதும் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
கடந்த வருடத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் இழப்பீடு கேட்டதற்காக நயன்தாரா ஆதங்கத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இப்போது அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கி இருப்பது தனுஷை பழி வாங்குவதற்காகவா? அவருக்கு போட்டியாக தான் நயன்தாரா இப்படி செய்திருக்கிறாரா? என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நயன்தாரா, வாழ்க்கையிலும் தனது கனவுகளை பெரிய அளவில் நிறைவேற்றி வருகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications