மீனாவை இன்சல்ட் பண்ணி..நயன்தாரா நடந்து வர்றதை பார்த்தீங்களா?வானத்துல இருந்து கீழே குதிச்சு?: பிரபலம்
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.. இந்த திரைப்படத்தில் மீனா நடிப்பதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை விழாவில், மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மீனா பதிவிட்ட, இன்ஸ்டாகிராம் பதிவு அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், 'மீனா, நயன்தாரா இவர்களில் யார் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் என்பது அனைவருக்குமே தெரியும். மீனா, குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானவர்.. சிவாஜி, ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே, அனைவராலும் பேசப்பட்டவர்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தபோது, பெரிய பெரிய மூத்த நடிகைகளும் தரமுடியாத எக்ஸ்பிரஷன்களை, அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக வெளிப்படுத்தியிருப்பார் மீனா.. இதற்கு பிறகு மீனா நடித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.. சின்ன வயதிலிருந்தே படிப்படியாக உயரத்துக்கு வந்தவர் மீனா.
சேற்றை வாரி இறைத்தனர்
நாங்கள் தயாரித்த தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், பன்னீர் நதிகள் என 4 படங்களிலுமே குழந்தை மீனா நடித்திருந்தாங்க.. பிரம்மாதமாக நடித்திருந்தாங்க..
எந்த கால கட்டத்திலும் யாரையும் எதிர்த்து பேசியதாகவோ, ஆட்டிடியூட் காட்டியதாகவோ மீனா பற்றின செய்திகள் வந்ததில்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார், கோபமாக நடந்து கொண்டார் என்று பொதுவெளியில் யாருமே மீனாவை பற்றி சொன்னதில்லை.. மீனாவின் கணவர் இறந்தபோதுகூட, பலவிதங்களில் சேற்றை வாரி இறைத்தனர்.. அப்போதும் அமைதியாக இருந்தார் மீனா.. இயல்பாகவே சாந்தமான குணம் கொண்டவர்.
மூக்குத்தி அம்மன் பட பூஜை
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மீனா நடிப்பதாக தெரிகிறது. அந்த படத்தின் பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க, காரிலிருந்து நயன்தாரா இறங்கி வரும்போது, அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால், ஏதோ வானத்திலிருந்து தேவதை இறங்கி வந்தது போல நடந்து கொண்டார்.. கடவுளின் நேரடி படைப்பு போல, நடந்து வர்றாங்க.. இதற்கு அத்தனை அள்ளுமுள்ளு, அத்தனை பவுன்சிலர்களும் பரபரப்பாகிவிட்டார்கள்.
கிளாமர் ரோல் நயன்தாரா
வீடியோவில், நயன்தாரா நடந்து வருவதும், பூஜையில் நிற்பதும் பார்க்கவே ஆட்டிடியூட் தெரிகிறது. அந்த நிகழ்வில், குஷ்புவிடம் நயன்தாரா பேசறாங்க, ஆனால் மூத்த நடிகை, அதிலும் திறமையான நடிகையான மீனாவிடம் பேசவில்லை..
நயன்தாரா, இதுவரை பிரம்மாதமான கேரக்டர்களில் நடித்துவிட்டார் என்று சொல்ல முடியாது. பெரிதாக அப்படியென்ன நயன்தாரா நடித்துவிடடார்? பெரும்பாலும் கிளாமர் ரோல்தான் செய்தார்.. அழுத்தமான கேரக்டரில் நடித்தது கிடையாது,. மூக்குத்தி அம்மன் பட புரமோஷனுக்கு இப்போது வந்திருக்கிறார் என்றால், தன்னுடைய மார்க்கெட் இறங்கிவிட்டதை நயன்தாராவே உணர்ந்துள்ளார். ஏனென்றால், இன்று போட்டிகள் அதிகமாகிவிட்டன. "முந்தின காலகட்ட" நடிகையாக நயன்தாராவை அனைவரும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அலட்சியப்படுத்தப்பட்ட மீனா
மூக்குத்தி அம்மன் பூஜையில் அமைதியாக கை கட்டிக்கொண்டு நிற்கிறார் நயன்தாரா.. யாரிடமும் பேசவில்லை, சிரிக்கவில்லை.. கலகலன்னு காணப்படவில்லை..
பூஜை என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வு.. படத்தின் ஹீரோயின்தான், எல்லாரிடமும் சிரித்து பேசணும், கைகொடுத்து வரவேற்கணும்., அரவணைக்கணும். ஆனால், நயன்தாரா தவிர மற்ற எல்லாரும் சிரித்து, கலகலன்னு இருக்காங்க. அதிலும் பக்கத்தில் மூத்த நடிகை மீனா வந்து நிற்கும்போது, அலட்சியப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா.. அப்படித்தான் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது..
இன்ஸ்டா பதிவு - யதார்த்தமானதா
மீனா ஒரு இன்ஸ்டா பதிவு போட்டுள்ளார். அது எதார்த்தமானதா? அல்லது நயன்தாராவுககு பதிலளித்து பதிவிட்டாரா? என்று உறுதியாக தெரியவில்லை. "நிறைய ஆடுகளுடன் இருக்கும் ஒரு சிங்கத்தின் போட்டோவை இணைத்து, 'ஆடுகள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என சிங்கம் கவலைப்படாது" என்று பதிவிட்டிருக்கிறார்.
மீனா அந்த காலத்திலிருந்து இப்போதுவரை எப்போதுமே நிதானமாக இருக்கிறார்.. சினிமாவில் ரியாலிட்டி என்ன என்பது மீனாவுக்கு தெரியும்.. ஆனால், நயன்தாராவுக்கு ரியாலிட்டி என்ன என்பது தெரியவேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications