தேவாவின் பணிவு.. நயன்தாராவின் ஓவர் ஆட்டிடியூட்.. டிடி அப்பவே சொன்னாங்களே? அது நினைவிருக்கா: பிரபலம்
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா, மீனா நடிக்க உள்ளனர்.. பட பூஜையில் மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாகவே, நயன்தாரா ஆட்டிடியூட் காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, நயன்தாராவுடன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மறைமுகமாக ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தார். அதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தற்போது மீண்டும் நினைவுபடுத்தி பேசியிருக்கிறார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "டிடி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்க.. அதில் நயன்தாராவை குறிப்பிட்டுதான் பேசியிருந்தாங்க.. ஏனென்றால் போட்டோவுடன் அந்த சம்பவம் அப்போது வெளியாகியிருந்தது.

நயன்தாராவை பேட்டி எடுப்பதற்காக முதலில் டிடி வந்து நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். பிறகு நயன்தாரா வந்திருக்கிறார். அப்போதுதான் தான் கட்டியிருக்கும் சேலையும், நயன்தாரா கட்டியிருக்கும் சேலையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கோல்டன் கலரில் இருந்துள்ளதை கவனித்துள்ளார். இருவர் கட்டியிருந்ததும் ஒரே மாடலில் ஒரே பேட்டர்னிலான சேலையாக இருந்திருக்கிறது.
உடனே டிடி நயன்தாராவிடம், நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரியான சேலையை கட்டியிருக்கோம் போலியே? இதை நான் எதிர்பார்க்கவேயில்லை என்று ஆச்சரியமாக சொல்லி சந்தோஷமாக சிரித்துள்ளார்.
வேற சேலை இருக்கா?
அதற்கு நயன்தாரா, உங்க கிட்ட வேற சேலை இருக்கா? வேற சேலை இருந்தால் மாத்திட்டு வர முடியுமா? என்று கேட்டாங்களாம்.. இதைக்கேட்டதும் டிடிக்கு சுருக்னு ஆகிவிட்டதாம்.. என்ன இப்படி கேட்கிறாங்களே என்று, ஒருமாதிரியாகிவிட்டதாம். நயன்தாரா போன்ற பிரபலத்திடமிருந்து, இப்படியொரு வார்த்தையை டிடி எதிர்பார்க்கவில்லையாம்.
ஆனால், டிடியிடம் அந்த நேரத்தில் வேற மாற்று சேலையும் இல்லை. உடனே அங்கிருந்த ஷோ புரடியூசர்கள், நேரமாகிவிட்டது, ஷோ-க்கு போகலாம் என்று ஒருவழியாக சமாளித்து, அந்த பேட்டியை எடுக்க செய்துள்ளார்கள். நயன்தாராவும், வேண்டா வெறுப்பாக அந்த பேட்டியை தந்துள்ளார்..
டிடி தந்த விளக்கம்
இதை வேறு ஒரு நிகழ்ச்சியின்போது, குறிப்பிட்டு பேசிய டிடி, ஒரு விளக்கமும் அப்போது தந்திருந்தார்.. "நயன்தாரா யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும். நான் ஆங்கரிங் செய்பவர்., எனக்கு விருப்பப்பட்ட உடையை நான் அணிந்து வந்துள்ளேன்.
நான் ஷோ ஆங்கரிங் செய்யும்போது, அதற்கான மேக்கப், காஸ்ட்யூம்களில் கவனம் செலுத்துவது வழக்கம். என்னுடைய விருப்பத்துக்கு உடை அணிபவள் என்றாலும், அந்த நேரத்தில், அந்த பிரபலம் கேட்டது, எனக்குள் சின்ன முள் குத்தியது போல இருந்தது, மனசுல தைத்தது" என்று கூறியிருந்தார்.
தேவாவை பாருங்க
இதெல்லாம் தப்பு.. இதுபோன்ற ஆட்டிடியூட் காட்டுவதை முழுமையாக நயன்தாரா தவிர்க்க வேண்டும்.. திறமை இருந்தாலும், பணிவு வேண்டும்.. உயரத்துக்கு போனாலும் பணிவு தன்னாலேயே வரவேண்டும்..
சினிமாவை பொறுத்தவரை திறமை 50 சதவீதம், பணிவு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பார்கள்.. இதற்கு சிறந்த உதாரணம் தேனிசை தென்றல் தேவாவை சொல்லலாம். பல ஹிட்களை தந்தும், உச்சத்துக்கு சென்றபோதும்கூட, பணிவு அவரிடம் இருக்கும்.. எல்லாருக்கும் மரியாதை தந்து பேசுபவர்" என்று கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications