சல்லி சல்லியா மனசு நொந்த நஸ்ரியா.. நீலாம்பரி போல ரூமில் அடைபட்டு! மீண்டும் பகத்தோடு சேரணும்: பிரபலம்
சென்னை: கடந்த சில மாதங்களாகவே என்னுடைய உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களை எதிர்கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு போராடி வருகிறேன். இப்போது ஓரளவுக்கு அதிலிருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று நஸ்ரியா அறிக்கை மூலம் கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன், "சிறிய வயதிலேயே திருமணம் செய்தார் நஸ்ரியா.. ஆனால், பகத் பாசிலை விருப்பப்பட்டுதான் திருமணம் செய்தார்.. எத்தனையோ பேர் பகத் பாசிலின் ஹேர்ஸ்டைல், நஸ்ரியாவின் வயதை ஒப்பிட்டு சோஷியல் மீடியாவில் அப்போது டிரோல் செய்தார்கள்.. ஆனால், எதையுமே நஸ்ரியா கண்டுகொள்ளவில்லை..

அதேபோல, நிறைய சினிமா வாய்ப்புகளும் நஸ்ரியாவுக்கு தமிழ், மலையாளத்திலிருந்து வந்து கொண்டேயிருந்தது.. அவைகளை அவாய்டு செய்துவிட்டார் நஸ்ரியா. இப்போது சில தனிப்பட்ட விஷயங்களை நஸ்ரியாவால் அறிக்கையில் சொல்ல முடியாது.. பகத் பாசிலும், நஸ்ரியாவுக்கும் சரியான முறையில் புரிதல் தற்போது இல்லை என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது..
பிரபலமான ஜோடிகள் விவாகரத்து
பகத்பாசில் வில்லன், ஹீரோ , என கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார்.. நஸ்ரியாவும் சிறந்த நடிகை.. இவருவருமே ஆளுக்கொரு பக்கம் பிசியாக சினிமாவில் டிராவல் செய்வதால், எந்த விஷயத்தையும் உட்கார்ந்து பேச நேரம் கிடைப்பதில்லை.. குடும்பத்துக்காக இருவருமே நேரத்தை ஒதுக்க வேண்டும்..
தமிழ் சினிமாவில் சமீபத்தில் 2 பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்ததற்கு காரணமே, நேரமின்மை, புரிதலின்மை, உட்கார்ந்து சமரசமாக பேசாததுதான்.. அதுபோன்றுதான் நஸ்ரியா விவகாரத்திலும் இருக்கலாம்.
புரிதலின்மைக்கு என்ன காரணம்
ஆனால், சமீபத்தில் வெளியான சூக்ஷமதர்ஷினி பட ஷூட்டிங்கிலும் சரி, பட புரமோஷனிலும் சரி, படம் தொடர்பாக தரப்பட்ட பேட்டிகளிலும் சரி, சோஷியல் மீடியாவிலும் சரி, அனைத்திலிருந்தும் நமக்கு தெரியவருவது என்னவென்றால், பசில் ஜோசப்புக்கும் நஸ்ரியாவுக்கும் அந்த படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள்.. பட புரமோஷன்களிலும், பேட்டிகளிலும் நஸ்ரியா, பசில் ஜோசப்பிடம் கேஷூவலாக பேசியிருந்தார்.
இப்படி இருவரும் ஜாலியாக பேசுவதை பலரும் டிரோல் செய்திருந்தார்கள்.. இந்த விஷயம் பகத் பாசிலுக்கும் சென்றுள்ளது.. இது சம்பந்தமாகவும் இருவருக்குள்ளும் சலசலப்பு எழுந்திருக்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
டீசன்ட் நடிகை நஸ்ரியா
தமிழ்ல் நஸ்ரியா இதுவரை நடித்துள்ள படங்களை பார்த்தாலே ரொம்ப டீசன்டாக இருக்கும்.. நையாண்டி படத்தின் டிரெயிலரில், குளோஸ்அப் ஷாட் ஒன்று நஸ்ரியாவுக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்துவிட்டு, அதிர்ச்சியடைந்த நஸ்ரியா, போலீஸ் கேஸ் வரை சென்றார்.. அந்த அளவுக்கு கண்ணியம் எதிர்பார்க்கும் நடிகை நஸ்ரியா..
ஒரு சாதாரண குளோஸ்-அப் ஷாட்டுக்கே, நஸ்ரியா கடுமையாக ரியாக்ட் செய்திருக்கும்போது, ஒருவேளை பகத் பாசில் சம்பந்தமாக கம்யூனிகேஷன் பிரச்சனையாக ஏதாவது இருந்திருந்தால், அது நஸ்ரியாவை கடுமையாகவே பாதித்திருக்கலாம்.
அதேபோல, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பகத் பாசில் நடித்து வருகிறார்.. தான் மட்டும் வீட்டில் சும்மா இருக்க வேண்டுமா? என்ற வருத்தமும் நஸ்ரியாவுக்கு ஏற்பட்டு, ஈகோவை தந்திருக்கலாம். ஏனென்றால், வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் நபர்களுக்கு ஆயிரம் சிந்தனைகள் வரலாம்..
விவாகரத்து வாய்ப்பு அதிகம்
இனிமேலும் இவர்கள் சேர்ந்து பயணம் செய்வார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. நஸ்ரியா-பகத் பாசில் விவாகரத்து செய்ய நிறைய வாய்ப்புள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது.
எதுவாக இருந்தாலும், படத்துக்காக செய்யப்படும் சில விஷயங்களை பெரிதுபடுத்தி பார்க்கக்கூடாது. அல்லது பகத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் வேறு எதிலாவது புரிதல் குறைபாடு வந்திருக்கலாம். அதனால்தான், நஸ்ரியா தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு, மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். யாரையுமே சந்திக்கவில்லை.. தன்னுடைய பெற்றோரையும் சந்திப்பதில்லை. படையப்பா படத்தில் நீலாம்பரி மாதிரி, நஸ்ரியாவும் தன்னையே தனிமைப்படுத்தி கொண்டார்..
மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்
நிறைய விஷயத்தை வெளிப்படையாக நஸ்ரியா அறிக்கையில் சொல்லவில்லை.. எனவே, இன்னும் 1 வாரத்தில் அவரே அதை பற்றி சொல்லலாம்.. எனினும், வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சிக்கலில் இருப்பதாக தெரிகிறது. மீண்டு வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
எது எப்படியோ, கண்டிப்பாக நஸ்ரியா மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவார்.. அதேசமயம், நஸ்ரியாவிடம் நெருங்கிய நண்பர்கள் பேசி, அவரை மீட்டு வெளியே கொண்டு வரவேண்டும்.. பகத் பாசிலும், நஸ்ரியாவிடம் உட்கார்ந்து பேசி, பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.. இருவருமே மீண்டும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications