சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்த விஜய் டிவி சீரியல் கதாநாயகன்.. ஆனால் இப்படி ஒரு டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நீ நான் காதல் என்ற சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமான பிரேம் ஜேக்கப்க்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருடைய மனைவியும் சீரியல் நடிகை தானாம். இந்த சின்னத்திரை தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமான பிரேம் ஜாக்கப் அவரோடு அங்கு சீரியலில் நடித்த நடிகையை காதலித்து வந்த நிலையில் இப்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை முடித்து இருக்கிறார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் சமீபத்தில் தான் நீ நான் காதல் என்ற சீரியல் ஒளிபரப்பாகிய தொடங்கியது. இந்த சீரியல் இப்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகன் பிரேம் ஜேக்கப்க்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது. இவர் மலையாள சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாகி இருக்கிறார்.

அதுபோல சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்களுக்கு பிரபலமாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் சீரியல் நடிகையான ஸ்வாசிகா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களது திருமணம் கேரளாவில் வைத்து நடைபெற்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஜோடி தற்போது ஒரு வழியாக குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெற்று திருமணத்தை செய்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்களுடைய திடீர் திருமணம் திரையுலக மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு சமூக வலைத்தளம் வாயிலாக தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சின்னத்திரை தம்பதிகளின் புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் பிரேமின் மனைவியான ஸ்வாசிகா தமிழில் வைகை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அப்படி மலையாள சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பிரேம் ஜாக்கப் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுடைய காதல் சில வருடங்கள் கழித்து இப்போது வீட்டிற்கு தெரிய வந்து வீட்டினரின் சம்மதத்தோடு இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications