என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க? கண் கலங்கிய பெண்.. கோபிநாத் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூன் 16ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. திருமணத்தில் மணமகள் அதிகம் டிமாண்ட் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் மணமகன் வீட்டாரும், பதில் சொல்லும் இளம் பெண்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் சுவாரசியமான தலைப்புகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் கூட அமானுஷ்ய சக்திகள் இருக்கு என்று சொல்லும் நபர்களும் அது இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கும் நபர்களும் கலந்து கொண்டு விவாதித்து இருந்தனர். அப்போது நடிகர் சதீஷ் கலந்து கொண்டு தன்னுடைய கலகலப்பான பழைய நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சில வாரங்களாகவே நீயா நானா நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக ஆண்களை மட்டுமே குற்றம் சாட்டுவது போன்று நிகழ்ச்சிகள் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கணவன் மனைவி பிரச்சனை என்றாலும் அங்கு ஆண்கள் செய்வதுதான் பிரச்சனை, பெண்கள் தான் சரியாக செய்கிறார்கள் என்கிற மாதிரி கோபி நாத் கூட இப்போது ஒரு தலை பட்சமாக பேச தொடங்கி விட்டார், என்றெல்லாம் கருத்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரத்திலும் திருமணத்தில் மணமகள் அதிகம் டிமாண்ட் செய்கிறாரா? என்று கேள்விக்கு ஆமாம் என்று குற்றம் சாட்டும் மணமகன் வீட்டாரும், அதற்கு விளக்கம் கொடுக்கும் இளம்பெண்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பல பெண்கள் எங்களுக்கு அழகானவராகவும் படித்தவராகவும் அதிக சம்பளத்தோடு கூடிய கௌரவமான வேலையில் இருப்பவராகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதோடு எங்களுக்கு வீடு வசதி எல்லாம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூட சில பெண்கள் கூறுகிறார்கள். அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் மாப்பிள்ளைகளின் பெற்றோர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுபோல அங்கு சில பொம்மைகளை வைத்து அதில் ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு வேலை பார்க்கும் நபர் என்கிற மாதிரி நிறுத்தி வைக்கிறார்கள்.
அதில் போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், மீடியா என்று பல கேட்டகிரியில் பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம் பெண்கள் எந்த கேட்டகிரியில் இருக்கும் ஆண்களை விரும்புகிறார்கள் என்று சுயம்வரம் போல அங்கு நடத்தி இருக்கிறார்கள். இப்படியாக நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் நிலையில் ஒரு பெண் பேசிய வார்த்தை தான் பல பெண்களின் குரலாக ஒலித்து இருக்கிறது.
அதாவது பல மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்கள் வீட்டில் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு எதிர் தரப்பில் இருந்த இளம் பெண் நீங்கள் என்னை மாதிரி பெண்களை ஏன் திருமணம் செய்யாமல் ரிஜெக்ட் செய்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதாவது அவர் பேசுகையில் எனக்கு இப்போது 22 வயது தான் ஆகிறது. ஆனால் எனக்கு வரும் வரன் எல்லாம் 33, 34 வயதில் உள்ள வரன் தான் வருகிறது.

காரணம் அவர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கு அதிகமான வரதட்சணையோடு பெண் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கிடைக்காமல் போன பிறகு வயதாகி விட்டது இனி வழியில்லை என்று கஷ்டப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று சின்ன வயதில் இருக்கும் பெண்களை தேடி வருகிறார்கள் என்று சொல்ல,
அதற்கு கோபிநாத் எதிர் தரப்பில் மாப்பிள்ளைகளின் பெற்றோரிடம், நீங்க பல இடங்களில் பொண்ணு பார்த்து அது செட் ஆகாததால் மகனுக்கு வயசான பிறகு கஷ்டப்பட்ட பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் தேடி வரீங்க ஏன் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதோடு இப்போது இருக்கும் இளைஞர்களை விடவும் அவர்களுடைய பெற்றோருக்கு தான் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எதிர்த்தரப்பில் பேசிய இளம்பெண் பெற்றோர்கள் குறித்து கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இளம் பெண்களுக்கு திருமணத்தில் மணமகன் பற்றி அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறதா? அல்லது மணமகன் வீட்டில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறதா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications