நீயா நானா: பெண் சொன்ன "அந்த” வார்த்தை.."Thug Life” கொடுத்த கோபிநாத்.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ட்ரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறையினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் தாத்தா பாட்டி தாங்கள் இன்னும் இளமையாக இருப்பதற்கு டிரெண்டாக இருப்பதும் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Neeya Naana 2023 July 9th promo 3 Trending Grandparents Vs Youngsters

ஆனால் இவர்கள் டிரண்டாக இருப்பது தங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று சில இளம் தலைமுறையினர் கூறுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ட்ரெண்டாக இருக்கும் தாத்தா பாட்டி மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Neeya Naana 2023 July 9th promo 3 Trending Grandparents Vs Youngsters

அதில் வயது என்பது எப்போதும் நம்பர் தான் என்று பலர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அதை நாமும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாலே போதும் பலருக்கும் நோய் நொடி எல்லாம் காணாமல் போய்விடும். நமக்கு வயது ஆகிவிட்டது என்ற ஒரு எண்ணம் மனதிற்குள் வரும்போது தான் அங்கே அடுத்தடுத்த பல பிரச்சனைகளும் பயமும் வர தொடங்கும்.

எப்போதும் மனதையும், உடலையும் இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் அதை பார்த்து கிண்டல் செய்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் நிஜம் என்னவென்றால் நாம் சொல்வதை நம்முடைய உடம்பு கேட்டாலே நாம் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை பெருக்கெடுத்து விடும்.

Neeya Naana 2023 July 9th promo 3 Trending Grandparents Vs Youngsters

அந்த வகையில் தங்களுக்கு மனதிற்கு பிடித்ததை நாங்கள் எப்போதும் செய்வோம் என்று வயதானாலும் எங்களுடைய மனம் மாறாது என்று தாத்தா பாட்டி ஆனாலும் ட்ரெண்டிங்காக இருக்கும் சிலர் நீயா நானா நிகழ்ச்சியில் தாங்கள் எப்படி டிரெண்டாக மாறினோம் என்று தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் ட்ரெண்ட்டாக மாறியதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஒரு சில இளம் தலைமுறையினர் அதற்கு விவாதமும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒரு பெண், நைல் பாலிஸில் இருந்து, லிப்ஸ்டிக்கில் இருந்து, மேக்கப்பில் இருந்து, ஹேர் ஸ்டைல் மாற்றியது வரை எல்லாமே என்னுடைய மருமகள் தான்.

Neeya Naana 2023 July 9th promo 3 Trending Grandparents Vs Youngsters

இதையெல்லாம் நான் சென்னையில போட முடியவில்லை. அதனால இந்த மாதிரி ஃபங்ஷன் எல்லாம் நான் வந்தேன்னா போட்டுக்குவேன் என்று சொல்ல, அதைக்கேட்டு கோபிநாத் இது பங்க்ஷனு....!? என்று "தங் லைப்" கொடுத்து நீயா நானாவை பங்க்ஷன் பீலிங் வைத்திருக்கேன் என்று கேட்கும் போது சந்தோஷமா தான் இருக்கு என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த கலகலப்பான பிரமோ வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+