நீயா நானா: பெண் சொன்ன வார்த்தை.. கண் கலங்கிய கோபிநாத்.. நெருட வைத்த கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மனநல சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக எடுத்துக்க முடியாது என்றும் மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் பலர் மனநல சிகிச்சைக்கு செல்வதால் தங்களை சமுதாயத்தில் வீக்கானவர்கள் என்று நினைத்து விடக்கூடாது என்பது போல பேசிக் கொண்டிருந்தனர்.

Neeya Naana 2023 June 18th Episode and fans psychiatric treatment is not acceptable

அந்த வகையில் ஒரு பெண் தான் ஐந்து மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாக கூறி அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் நீயா நானா நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வந்தாலும் இதற்கும் தனித்துவமான ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் விட்டுவிட்டாலும் ஹாட்ஸ்டாரில் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக நீயா தானா நிகழ்ச்சி சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையிலேயே விவாதங்கள் வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் மனநல சிகிச்சைக்கு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதை இயல்பாக மாற்ற வேண்டும் என்று தலைப்பிலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது

அந்த வகையில் இந்த வாரம் தன்னுடைய மனநிலையை 21 வருடமாக தெரிந்துகொண்ட என்னை விட என்னிடம் ஒரு மணி நேரம் பேசுபவர்களால் எப்படி சரியான தீர்வை கொடுக்க முடியும் என்று கேள்வி கேட்டு, அப்படி அடுத்தவர்களின் சொல்படி நான் நடந்தால் என்னுடைய ஒரிஜினாலிட்டி போய்விடும் என்று கூறி இருந்தார்.

அதைக் கேட்டு கடுப்பான கோபிநாத் உன்னுடைய ஒரிஜினாலிட்டியில் தீயை வைக்க என்று திட்டி பிறகு அந்த நபருக்கு பல அட்வைஸ் கொடுத்து அந்த நபருக்கு புரிய வைக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து எதனால் நீங்க மனநல சிகிச்சை இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று அந்த அணியில் இருப்பவர்களிடம் கோபிநாத் கேள்வி கேட்டிருந்தார்.

Neeya Naana 2023 June 18th Episode and fans psychiatric treatment is not acceptable

அதில் ஒரு பெண் சில வருடங்களுக்கு முன்பு எங்க வீட்டில் நடந்த விஷயத்தை வைத்து தான் நான் சொல்றேன். எங்க அப்பா ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு அதுல ஏற்பட்ட பினான்சியல் ப்ராப்ளத்தால அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு. எங்க வீட்ல எங்க அப்பாவை மட்டும்தான் நாங்க நம்பி இருக்கிறோம் வேற எந்த பினான்ஸ் சப்போட்டும் கிடையாது.

இப்படி இருக்கையில அப்பா தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமாளிப்பதற்காக டிரக் அடிட் ஆக மாறிவிட்டார். அப்போ நான் சின்ன பொண்ணா இருந்தேன். அப்பாகிட்ட அப்படியும் சொல்றேன், நீங்க ஒரு மனநல சிகிச்சை மருத்துவரை போய் பார்க்கலாம் என்று அப்போ அவங்க இந்த ஒரு சின்ன பிரச்சினையை என்னால் சமாளிக்க முடியலன்னு நான் அவங்க கிட்ட போயிட்டா என்னை ஒரு மெண்டலாக இந்த உலகம் பிரதிபலிச்சுரும் என்று சொல்லிட்டாங்க.

அதனால அப்பா போய் டாக்டரை பார்க்க மாட்டேன்னுட்டாங்க அதோட ரிப்ளெக்ஷன் நாங்க எல்லாருமே கஷ்டப்பட்டோம். அதனாலதான் நான் கண்டிப்பா மனநல மருத்துவர மனசுல பிரச்சனை இருந்தா போய் பாக்கணும்னு சொல்றேன் என்று அந்த பெண் பேச, இன்னொரு பெண்ணிடம் கோபிநாத் நீங்க எதனால மனநலம் மருத்துவரை பாக்கணும்னு சொல்றீங்க என்று கேட்க அந்த பெண் முதல் முறையாக மனம் விட்டு பேசுகிறார்.

நான் பொதுவா யாருகிட்டயும் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணவே மாட்டேன். எல்லாத்தையும் மனசுக்குள்ளே வச்சிக்கிட்டு இருப்பேன். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். அம்மாவும் வேலை பாக்குறாங்க. நானும் அம்மாவும் அந்த அளவுக்கு குளோஸ் கிடையாது. அப்ப எல்லா விஷயத்தையும் என் மனசுக்குள்ள வச்சு எனக்கு ஒரு கட்டத்துல என்னமோ ஆயிடுச்சு. நான் சுவற்றை பார்த்து அப்படியே இருப்பேன் என்று சொல்ல, நீங்க எந்த நேரத்தில் மனநல மருத்துவரை சந்திக்கணும்னு நினைச்சீங்க என கோபிநாத் அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க

Neeya Naana 2023 June 18th Episode and fans psychiatric treatment is not acceptable

அதற்கு அவர் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி எனக்கு பிரச்சனை ரொம்ப அதிகமாகி நான் தற்கொலை பண்ணிக்கணும்னு நினைச்சேன் என்று சொல்ல, ஒரு நிமிடம் அமைதியாக மாறிய (தழுதழுத்த குறலில்) கோபிநாத் நீங்க அந்த நேரத்தில் என்ன நெனச்சிங்க? உங்களுக்கு இந்த பிரச்சனையை ரிலீஸ் பண்ணா எப்படி இருக்கும்னு ஃபீல் பண்ணுனீங்க என்று கேட்க, எனக்கு குற்றாலத்தில் குளிக்கும்போது தலையில் தண்ணி விழுந்ததும் மொத்த உடலும் அப்படியே ரிலீஃப் ஆகுற மாதிரி இருக்கும் என்று அந்தப் பெண் தன்னுடைய பீலிங்கை சொல்கிறார்.

அது கேட்ட கோபிநாத் இந்த அளவிற்கு பிரச்சனை இருக்கிறவங்க எதனால மனநல சிகிச்சைக்கு போக கூடாதுன்னு நீங்க சொல்றீங்க என்று மனநல சிகிச்சையை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் கேள்வி கேட்க அங்கே எந்த பதிலும் இல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+