நீயா நானா: அலுத்து கொண்ட பெண்கள்.. பேச்சை நிறுத்திய கோபிநாத்.. கடும் விவாதம்
சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சமையல் வேலை செய்பவர்களும், சமையல் வேலைக்கு பணி அமர்த்தியவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் சமையல் வேலை செய்பவர்கள் தங்களுக்கு இருக்கும் நிறை குறைகளை இந்த வார நிகழ்ச்சியில் கூறி இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு சில பணிப்பெண்கள் நாங்கள் என்னதான் வேலை செய்தாலும் எங்களை வேலைக்கு வச்சிருக்கவங்க குறை சொல்றாங்க என்று தங்களுடைய கஷ்டத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் இந்த வாரம் என்ன மாதிரி விவாதம் நடைபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். காரணம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தகுந்த மாதிரியே நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சியி,ல் பல நேரம் கண் கலங்கவும் வைத்து விடுகின்றனர். அந்த வகையில் இந்த வாரமும் சமையல் வேலை செய்பவர்களும் அவர்களை சமையல் வேலை செய்வதற்காக பணிக்கு வைத்திருப்பவர்களும் இரண்டு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இதே போல வீட்டு வேலை செய்பவர்களையும் அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்த எபிசோடு வேற லெவலில் வைரலானது. அதில் அதிகமான ரசிகர்கள் இருதரப்பு கருத்துக்களையும் கூறி வந்தனர். அதில் அதிகமான கருத்துக்கள் வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் சமையல் வேலை செய்பவர்களின் கஷ்டங்களும் அதுபோல அவர்களை வேலைக்கு அமர்த்தியதால் தங்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் குறித்து அதில் பாதிக்கப்பட்டவர்களும் பேசுகின்றனர். அதே நேரத்தில் இந்த வாரம் வெளியான நான்காவது ப்ரமோவில் கோபிநாத் நீங்க பணிக்கு போறீங்க அந்த வீட்டில சந்திக்க கூடிய பிரச்சனை என்ன என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு சமையல் வேலை செய்பவர்கள் அணியில் ஒரு பெண் எவ்வளவு வேலை செஞ்சாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டு தான் சார் இருக்காங்க என்று கூறுகிறார். அதற்கு அவர்களை பணியில் அமர்த்தியவர்களில் ஒரு பெண் சார் அப்படி யாருமே டெய்லி குறை சொல்றவங்க கிடையாது என்று கூறுகிறார்.

மேலும் அதே பக்கத்தில் இருந்து இன்னொரு பெண் சார் போகப் போக உரிமை ஆயிடுது சார், அதான் அவங்க கிட்ட ஏதாவது குறை சொல்றோம் என்று சொல்ல, அதற்கு சமையல் வேலை செய்யும் பெண் ஒருவர் உரிமையாய் இருக்காங்கன்னா எங்க தப்பா வெளியே சொல்லாதீங்க என்று சொல்ல, அதற்கு பணிக்கு அமர்த்தி ஒரு பெண், குறைய மட்டும் எடுத்துக்கிட்டா முடியாது, நல்லது செய்வதையும் எடுத்துக்கணும்ல என்று கூறுகிறார்.
மேலும் அதே பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் ஒருத்தங்களை வந்து நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க என்று நாம சொன்னா, அடுத்த நாள் ஏதோ கொஞ்சம் கம்மியா இருக்குன்னு சொல்லும்போது நாம நேத்திக்கு அப்ரிஷியேட் பண்ணத நினைச்சு பார்க்கிறதே கிடையாது என்று கூறுகிறார். தற்போது இதற்கு கோபிநாத் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications