நீயா நானா அரங்கத்தில் கருத்து மோதல்.. காண்டான கோபிநாத்.. அடப்பாவிங்களா இது கூட தெரியாதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 28ஆம் தேதிக்கான 5ஆது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் தமிழ்நாட்டில் விதவிதமான பிரியாணி வகைகளை தயாரிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பிரியாணிக்கு தகுந்த ஆடு, செம்மறி ஆடா அல்லது வெள்ளாடா என்று கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது.

நீயா நானா நிகழ்ச்சியில் இதுவரைக்கும் சமூகம் சார்ந்த பல சிந்திக்க வைக்கும் கருத்துள்ள வகையில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த வாரம் நாவின் சுவைக்கு ஏற்ப பிரியாணியை கம கம வென ருசித்த படியே அதில் குறை நிறைகளை விவாதித்திருக்கிறார்கள்.
நீ பெருசா நான் பெருசா என்று அடித்து காட்டுவது போல தான் இப்போது பிரியாணி தயாரிப்பாளர்களுக்குள் பிரியாணிக்கு வெள்ளாடு சூப்பரா இருக்குமா? அல்லது செம்மறியாடு சூப்பரா இருக்குமா? என்று பெரும் விவாதம் நிகழ்ந்திருக்கிறது. இவர்களே இப்படி என்றால் கருத்துகளில் கேட்கவா வேண்டும் அங்கேயும் தங்களுக்கு பிடித்த வகைகளை விதவிதமாக கமெண்ட்களில் கொட்டுகிறது.
ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் என்ன மாதிரி தலைப்பில் விவாதம் செய்யப்படும் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த மாதிரி காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தங்களுக்குப் பிடித்த வகை வகையான பிரியாணிகள் கேள்விப்பட்டது, கேள்விபடாது என பிரியாணிக்கள் எல்லாம் இந்த வாரம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த வாரம் அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியின் ஐந்தாவது ப்ரமோவில் பிரியாணிக்கு எடுத்துக்கிட்டா செம்மறி தான் என்று வெள்ளை சட்டப் போட்ட ஒரு நபர் சொல்ல அதற்கு ஊதா சட்ட போட்ட இன்னொரு நபர் எங்க ஊர்ல எல்லாம் வெள்ளாடு தான் பா என்று சொல்கிறார்.

அதற்கு கோபிநாத் செம்மறியாடை விட வெள்ளாடு தான் பெஸ்ட் அவர் சொல்லுகிறாரே என்று கேட்க அதற்கு வெள்ளை சட்டை போட்ட அந்த நபர் நான் சேலஞ்ச் பண்ணி சொல்றேன் எந்த மாஸ்டரை கேட்டாலும் யாரை கேட்டாலும் செம்பரி ஆடு தான் பெஸ்ட் என்று சொல்லுவாங்க. வெள்ளாடு வறுவல் அந்த மாதிரி ஐட்டங்களுக்கு தான் பெஸ்ட் ஆக இருக்கும் என்று விளக்கம் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து கோபிநாத் பிரியாணி பிரியர்களிடம் வெள்ளாடு எப்படி இருக்கும் என்று கேட்க, அதற்கு அங்கே பச்சை வண்ண பனியன் போட்ட பெண் வெள்ளாடு வெள்ளையாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாத ஒரு பதிலை கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அதிர்ச்சியான கோபிநாத் இங்கே இருப்பவர்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு வித்தியாசம் தெரியாதவங்க ஓப்பனா கை தூக்குங்க என்று சொல்கிறார்.
அரங்கத்தில் இருந்த பாதிக்கும் மேற்பட்டோர் கையை தூக்கி விட அதிர்ச்சியான கோபிநாத் அடப்பாவிங்களா? என்று அவருக்கே உரிய நக்கலோடு வியந்து போயிருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications