பூவுக்காக பல பேர் முன்பு கணவர் செய்த செயல்.. கோபிநாத்தே கண் கலங்கிட்டாரே.. நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூலை 7ஆம் தேதிக்கான எபிசோடில் தனி ஆளாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு பெண் தான் தலையில் பூ வைத்ததால் தன்னுடைய கணவர் தன்னை பல பேர் முன்பு அடித்ததார் என்று சொன்னதைக் கேட்டு கோபிநாத் கண்கலங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதிலும் அதிகமாக மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து இந்த நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் தனி அழகாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் தாங்கள் வீட்டில் எல்லாருக்காகவும் தனி ஆளாக கஷ்டப்படுவதை குறித்து சொன்னதை கேட்டு பலரும் பீல் பண்ணி இருக்கிறார்கள்.

அதில் ஒரு பெண் நான் என்னுடைய குடும்பத்திற்காக உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.. அவர் உடல் எடை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறார். ஆனாலும் அவர் தன்னுடைய குடும்பத்திற்காக பல வீடுகளில் பல மாடிகளுக்கு ஏறி இறங்கி உணவுகளை டெலிவரி செய்து கொண்டு வருகிறார். அது குறித்து அவர் பேசும் போது எனக்கு மாடிப்படி ஏறினாலே மூச்சு வாங்கும் கால்கள் எல்லாம் அவ்வளவு வலி இருக்கும் ஆனாலும் வேறு வழியில்லை கையில் இருக்கும் பொருட்களை தூக்கிக்கொண்டு நான் போக தான் டெலிவரி செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் என்னுடைய குழந்தை சின்ன பிள்ளையாக இருந்தது அந்த குழந்தையும் வீட்டில் விட முடியாது அந்த குழந்தையும் கூட்டிக்கொண்டு நான் டெலிவரி வேலை செய்தேன். அப்போதெல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன். எல்லாமே என்னுடைய குழந்தைகளுக்காக தான் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல என்னுடைய வாழ்க்கையில் நான் ரொம்பவும் மிஸ் பண்ணுவது என்றால் என் தலையில் பூ வைப்பது தான். எனக்கு சின்ன வயசுல இருந்தே பூ வைப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும்.
நான் குழந்தையாக இருக்கும்போது எனக்கு முடி அதிகமாக இருப்பதால் என்னுடைய அம்மா எனக்கு முடி அளவுக்கு பூ வைத்து விடுவார். நானும் பூ வைப்பதை அவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். ஆனால் நான் பார்க்கிற வேலையில் பூ வைத்துக்கொண்டு போவது சரிப்பட்டு வராது என்பதற்காக நான் வைக்க மாட்டேன் என்று முதலில் சொல்லியிருக்கிறார்.
பிறகு கோபிநாத் அவருடைய மகளை கூப்பிட்டு அம்மாவுக்கு பூவைத்து விடுங்கள் என்று சொல்ல அந்த பூவை தலையில் வைத்ததும் அந்தப் பெண் சந்தோஷத்தில் நான் ரொம்ப வருஷம் கழிச்சு இந்த பூவை தலையில் வைத்ததும் அவ்வளவு சந்தோஷமாக எனக்கு இருக்கிறது... நான் உண்மைய சொல்லனும்னா டெலிவரி வேலை செய்வதால் மட்டும் பூ வைக்கவில்லை எனக்கு மனதிற்குள் ஒரு வைராக்கியம் இருக்கிறது. அதனால் தான் நான் வைக்கல.

அது என்னன்னா ஒரு முறை எங்க வீட்டுக்காரரின் சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம். அப்போ எனக்கு முடி அதிகமா இருந்ததால எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி அண்ணி நீங்க நிறைய பூ வச்சுக்கோங்கன்னு என் முடி அளவுக்கு வச்சு விட்டாங்க. அப்போ கல்யாண வீட்டில் நான் அங்கே இங்கே அலைந்ததால் என்னுடைய முடியை தாண்டி பூ இழுத்து கீழே வந்து விட்டது. அதை பார்த்த என்னுடைய கணவர் இவ்வளவு பூவை வச்சிக்கிட்டு..... என்று சில அசிங்கமான வார்த்தைகளை சொல்லி அவ்வளவு பேர் முன்னாடி என்னை போட்டு அடித்து விட்டார்.
அதுவும் கொஞ்ச நஞ்ச அடி கிடையாது அவ்வளவு அடி வாங்கினேன். அன்னைக்கு நான் என் தலையில் இருக்கிற பூவை தூக்கி போட்டுட்டு இனி நான் பூவே வைக்க மாட்டேன்னு சொன்னேன். இன்னைக்கு வரைக்கும் பூ வைக்கல... இப்போ அந்த பூவை வச்சதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, அதை கேட்ட கோபிநாத் கண்ணகியும், பாஞ்சாலியும் இன்னமும் நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாங்க.
அவர்களுடைய வாழ்க்கை இன்னும் முடியவே இல்லை என்று கண்கலங்கியபடியே சொல்ல அரங்கத்தில் எல்லோருமே கண் கலங்கி இருக்கின்றனர். இந்த உணர்வுபூர்வமான வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications