காதுக்குள் அந்த சத்தம்? முன் ஜென்ம ஞாபகம்.. திகிலூட்டிய நீயா நானா பிரபலங்கள்! வாயடைத்த கோபிநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் 17ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் முன் ஜென்ம ஞாபகங்கள் எங்களுக்கு இருக்கிறது என்று சிலரும் அதை நம்ப மறுக்கும் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதித்து இருக்கிறார்கள்.

அதில் ஒரு சிலர் பேசியதை கேட்டு ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் எங்களுக்கு காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே மாலையில் மறந்து போய் விடுகிறது. இவர்களுக்கு மட்டும் எப்படித்தான் போன ஜென்மத்தில் நடந்ததெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ என்று சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

Neeya Naana 2024 march 17th promo pre-birth memory gobinath reaction

அதுபோல இன்னொரு ரசிகர் எங்களுக்கு காலையில் படித்தது மாலையில் மறந்து போய் விடுகிறது. ஆனால் இவர்களுக்கு இவ்வளவு ஞாபகம் இருக்கும் நிலையில் இவர்கள் படித்து கவர்மெண்ட் போஸ்டிங் வாங்கி விடுவாங்க போல என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்படியாக பல கேள்விகள் குவிந்து வருகிறது. அதிலும் இந்த எபிசோடில் இரண்டாவது ப்ரோமோவில் ஒரு ரசிகர் என்னுடைய காதுக்குள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அது போன ஜென்மத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதை சொல்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல இன்னொரு பெண் போன ஜென்மத்தில் என்னை என்னுடைய தாய் மாமா கொலை செய்வதற்காக ஒரு மரத்தை வெட்டி போட்டார். அப்போது என்னுடைய கை கட் ஆகிவிட்டது. அது எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதை கேட்ட இன்னொரு பிரபலம் இவர்களுக்கு ஒரு சத்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் என் முன்பே சில காட்சிகள் நான் போன ஜென்மத்தில் எப்படி இருந்தேன் என்பது தத்ரூபமாக தெரிகிறது என்று கூறி வருகிறார். இவர்கள் பேசுவது உண்மையா? அல்லது கற்பனையா? என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கிறது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் முன் ஜென்ம கதையை நம்பாதவர்கள் பேசுவது தற்போது வெளியான ப்ரோமோக்களில் அதிகமாக காட்டப்படவில்லை.

அதே நேரத்தில் கோபிநாத் எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் அதில் நடுநிலைமையாக பேசுவார். ஆனால் இந்த வார எபிசோட்டுக்கு வெளியான ப்ரோமோக்களில் அதிகமாக அவர் எந்த விஷயத்தையும் மறுத்து பேசுவது போன்ற காட்சிகள் எதுவும் காணவில்லை. இதனால் கோபிநாத் இதை முழுமையாக நம்பி விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனாலும் அவர் மீது இருக்கும் நம்பிக்கையில் எப்படியும் கடைசியில் கோபிநாத் இதை உளவியல் ரீதியாக சரி செய்ய வேண்டும் என்று சொல்வார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்களில் அடித்து கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு எபிசோட்டிலும் கோபிநாத் சில நம்ப முடியாத வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் கலாய்த்து விடுவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை முன் ஜென்ம கதை ஞாபகம் வருகிறது என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+