அந்தரங்கத்தை அலசிய நீயா நானா நிகழ்ச்சி.. வைரமுத்துவின் ரகசியம்.. வியக்க வைத்த “பொன் மாலை பொழுது”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் முன்னிலையில் ஏப்ரல் 7 ஆம் தேதிக்கான எபிசோடில் தத்துவ பாடல் ரசிகர்களும், பாடகர்களும் கலந்து கொண்டு தங்களுடைய இனிமையான தருணங்கள் மற்றும் தத்துவ பாடல்கள் தங்களுக்கு மருந்தாய் அமைந்த விதத்தை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு சில ரகசியங்கள் மனதிற்குள்ளே இருக்கும். அந்த ரகசியமான நேரத்தில் சில பாடல்கள் அருமருந்தாய் அமைந்திருக்கும். பிறரிடம் சொல்ல முடியாத சோகமான நேரத்திலும் கூட சில பாடல்கள் அதற்கு ஆறுதலை கொடுத்திருக்கும். அதுபோல பல மகிழ்ச்சியான தருணங்களிலும் சில பாடல்கள் மனதோடு இணைந்திருக்கும். இது குறித்து தான் நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானதுமே நிகழ்ச்சி இப்படித்தான் போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இதுவரைக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் பல பாடல் நிகழ்ச்சிகளும் அது குறித்த விவாதங்களும் நடைபெற்று இருந்தாலும் இந்த முறை இடம்பெற்ற தத்துவ பாடல் விவாதம் பலரையும் மனம் கவர்ந்திருக்கும்.
காரணம் எத்தனையோ பாடல் ஆசிரியர்களும், பாடகர்களும் புதியது புதியதாக வந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலருடைய தத்துவ பாடல்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் கண்ணதாசன் கில்லியாக இருந்தார். அவருடைய பாடல்கள் இப்போதும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. 80ஸ் 90ஸ் கிட்ஸ்களுக்கு கண்ணதாசன், வைரமுத்து, வாலி போன்றோர் என்றால் 2k கிட்ஸ்களுக்கு நா. முத்துக்குமார் அருமருந்தாக கிடைத்திருந்தார்.
நா முத்துக்குமார் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் இப்போதுள்ள இளம் தலைமுறைகளின் மனதில் ஒரு வரி பிசங்காமல் இடம் பிடித்திருக்கிறது என்பது நேற்றைய தினம் நீயா நானா நிகழ்ச்சியிலும் தெரியவந்தது. அதே நேரத்தில் நேற்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் பாடல் வரிகளை ஆத்மார்த்தமாக பலர் பகிர்ந்து கொண்டனர். அதைபோல எதிர் தரப்பில் அமர்ந்திருந்த பாடகர்களும் தங்களுடைய அனுபவங்களை கூறி பலரையும் வியப்படைய வைத்து இருந்தனர்.
அதிலும் "நிழல்கள்" திரைப்படத்தில் இடம்பெற்ற "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடல் பாடிய போது அது குறித்து தன்னுடைய நினைவுகளையும் கோபிநாத் அழகாக கூறி கண்கலங்கி இருந்தார். அதாவது "கேகே நகர் சாலையில் நான் 13 கிலோ துணி பையை தூக்கிக்கொண்டு அலைந்து திரிந்த போது இந்த பாடல்கள்தான் எனக்கு உத்வேகம் கொடுத்தது" என்று மீண்டும் அந்தப் பாடலில் சில வரியை கோபிநாத் பாட சொல்லி இருந்தார்.
அதே நேரத்தில் இந்த பாடலை பாடிய நபர் தன்னைப் பற்றியும் யாருக்கும் தெரியாத சில விஷயங்களையும் சொல்லி இருந்தார். அதாவது நான் பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறேன். எங்க வீட்டில் எல்லாருமே படித்தவர்கள். ஆனால் எனக்கு பாட்டு பிடிக்கும் என்பதால் நான் பாட ஆரம்பித்து ஸ்டேஜ் பாடகராக மாறிவிட்டேன்.
ஒருமுறை நான் காமராஜர் அரங்கத்தில் பாட்டு கச்சேரி பார்ப்பதற்காக நான் போய் இருந்தேன். அப்போது மேடையில் எஸ்பி. பாலசுப்பிரமணியன் "பொன்மாலை பொழுது" பாடலை பாடி கொண்டிருந்தார். திடீரென்று அவரை வைரமுத்து நிறுத்த சொல்ல நான் இந்த பாடலில் வெளியே தெரியாத சில சரணங்களை எஸ்பிபிக்கு சொல்லி இருக்கிறேன். அவர் அதை பாடுவார் என்று சொன்னார்.

அதை எஸ்பிபியும் பாடினார். அதாவது, "இரவும் பகலும் யோசிக்கிறேன்... எனையே நாளும் பூஜிக்கிறேன்... சாலை மனிதரை யாசிக்கிறேன்... தீயின் சிவப்பை நேசிக்கிறேன்... வேதங்களே வேதங்களாய் தூங்காது... இது ஒரு பொன் மாலை பொழுது..." என்று அந்த வரிகளை பாட அதைக் கேட்டு கோபிநாத் ஆகா ஓஹோ என்று பாராட்டினார். கோபிநாத் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாகவும் புதுமையும் ஆகத்தான் இருந்திருக்கும்.
இதுவரைக்கும் எத்தனையோ எபிசோடுகளை கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தாலும் நேற்று நடந்த எபிசோடில் அவருடைய ரசனை அனைவருக்கும் நிரூபணமாகி இருக்கிறது. ஒவ்வொரு பாடலையும், வரிகளையும் அவ்வளவு ரசித்து ரசித்து பாடி இருக்கிறார். அதே நேரத்தில் வைரமுத்து மற்றும் இளையராஜா இருவருடைய காம்பினேஷனில் எத்தனையோ தத்துவ பாடல்கள் பலருக்கும் அருமருந்தாய் மனதிற்கு இதமாய் அமைந்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பாடல்கள் கொடுக்காதது அவர்கள் இருவருக்கும் மட்டுமல்லாமல் இது சமுதாயத்துக்கும் இழப்புதான்.












Click it and Unblock the Notifications