நீயா நானா நிகழ்ச்சியில் பாதியில் கண்கலங்கி வெளியேறிய கோபிநாத்.. நடந்தது என்ன? மறக்க முடியாத நினைவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் "தமிழ் திரையில் தத்துவ பாடல்கள்" என்ற தலைப்பில் பாடகர்கள் ஒருபுறமும் பாடல் ரசிகர்கள் ஒருபுறமும் விவாதிக்கிறார்கள்.
இந்த நிலையில் 80ஸ் காலகட்டத்தில் வெளியான ஒரு பாடலை கேட்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கோபிநாத் தன்னால் இதற்கு மேல் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று பிரேக் சொல்லி நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறி இருந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக குழந்தை பருவம் முதல் வயதான பருவம் வரை எல்லோருடைய வாழ்க்கையிலும் சில நினைவுகளோடு சில பாடல்கள் ஒட்டி இருக்கும். அது சந்தோஷமான தருணங்களாக இருந்தாலும் சரி, சோகமான தருணங்களாக இருந்தாலும் சரி அதில் ஒரு சில பாடல்கள் மனதிற்கு ஆறுதல் கொடுக்கும். சில பாடல்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து விடும்.
பள்ளி படிக்கும் போது புத்தகத்தில் இடம் பெற்ற பாடல்களாக இருந்தாலும் சரி பருவம் வந்த பிறகு கேட்டு ரசித்த தத்துவ பாடல்களாக இருந்தாலும் சரி எல்லாமே இனிமை தான். காதலுக்கு மட்டும் பாடல் தேவை இல்லை சோகத்திற்கும் பாடல் தான் அருமருந்து. அதை உணர்த்தும் விதமாகத்தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் முன்னிலையில் விவாதம் சிறப்பாக நடைபெறுகிறது.
அதில் ஒரு பக்கத்தில் தத்துவ பாடல் ரசிகர்கள் இருக்கிறார்கள். மறுபக்கத்தில் பாடகர்கள் இருக்கிறார்கள். அதில் பாடகர்களை விடவும் பாடல் ரசிகர்கள் பாட்டு பாடியதை கேட்பது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பாடலில் இத்தனை அர்த்தங்கள் இருக்கிறதா? என்று இப்போதைய தலைமுறை கூட புரிந்து கொள்ள முடிகிறது.

தத்துவ பாடல்கள் எம் ஜி ஆர், சிவாஜி காலத்தில் இருந்து எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் இடம் பிடித்திருந்தாலும் அந்த பாடல்களை இப்போதும் ரசிகர்கள் எந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதை இந்த வார நீயா நானா நிகழ்ச்சி வெளிக்காட்டுகிறது. அதில் "நிழல்கள்" திரைப்படத்தில் இடம்பெற்ற "இது ஒரு பொன் மாலை பொழுது" என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் பாட அதைக் கேட்டு கோபிநாத் மெய்மறந்து போயிருக்கிறார்.
பாடல் ரசிகர்கள் ரசித்து "இது ஒரு பொன் மாலை பொழுது" என்ற பாடலின், வானம் எனக்கொரு போதிமரம்... நாளும் எனக்கு அது சேதி சொல்லும்.. ஒரு நாள் உலகம் நீதி பெறும்.. திருநாள் நிகழும் செய்தி தரும்.. கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்.." என்ற வரிகளை பாடி கொண்டிருக்கும்போது,
கோபிநாத், நான் கேகே நகர் தெருக்களில் 13 கிலோ துணி மூட்டையை தூக்கிக் கொண்டு நான் திரிஞ்சபோ என்னை பீல் பண்ண வச்ச பாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவருடைய குரல் கரகரவென்று மாறி கண்ணீர் கண்களில் எட்டிப் பார்த்திருக்கிறது. அதோடு கோபிநாத் என்னால் பேச முடியவில்லை. ஒரு பிரேக் எடுத்துக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த உணர்வுபூர்வமான ப்ரோமோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications