போராடு டா.. நீ வாள் ஏந்துடா.. நீயா நானாவில் சிலிர்க்க வைத்த கோபிநாத்.. கடைசியில் நடந்தது நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 7-ம் தேதிக்கான எபிசோடின் ஆறாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வார நிகழ்ச்சியில் "தத்துவ பாடல் பிரியர்களும், பாடல் ஆசிரியர்களும்" கலந்து கொண்டு விவாதிக்க இருக்கிறார்கள்.

அதில் தற்போது வெளியான ஆறாவது ப்ரோமோவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான "அலை ஓசை" திரைப்படத்தில் இடம்பெற்ற "போராடு டா ஒரு வாள் ஏந்துடா" என்ற பாடலை பாடல் ரசிகர் ஒருவர் பாட அதைக் கேட்டு கோபிநாத் நெகிழ்ச்சியான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

Neeya Naana 7th april 2024 promo 6 and fans reaction

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று இருந்தாலும் அதில் அதிகமாக மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து அதிலிருந்து வெளியேறி சொந்தமாக பிசினஸ் செய்பவர்களும், இவர்கள் ஐடி நிறுவனத்திலிருந்து வெளியே வந்ததே தவறு என்று இரண்டு அணியாக விவாதித்திருந்தனர்.

இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த வாரம் தத்துவ பாடல் ரசிகர்கள் ஒரு பக்கமும், பாடல் ஆசிரியர்கள் ஒரு பக்கமும் தங்களுடைய கருத்துக்களை விவாதிக்கிறார்கள். அந்த வகையில் வெளியான ஒரு ப்ரோமோவில் பாடல் ரசிகர் ஒருவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் "அலை ஓசை" திரைப்படத்தில் இடம்பெற்ற போராடு டா ஒருவாள் ஏந்துடா.. என்ற பாடலை பாட அதைக் கேட்டு கோபிநாத் ஹைப் ஆகி இருக்கிறார். அதோடு அந்த பாடலை கோபிநாத் சேர்ந்தே பாடி இருக்கிறார்.

அதில் "வேங்கைகளும் இனி தூங்காதுடா.." என்ற வார்த்தைகளை பாடும் போது விஜயகாந்த் கண்கள் சிவக்க முடிய சிலிர்த்து கிட்டு அப்படியே வருவாரு பாருங்க... அந்தப் பாடல்கள் எல்லா போராட்டக்காரர்களின் எவர்கிரீன் பாடல். அதை கேட்கும் போது எப்போதும் மனதிற்குள் ஒரு உற்சாகம் தோன்றிவிடும் என்று கோபிநாத் கடைசியில் அந்த பாடலை பாடிய நபரை கட்டியணைத்து அவரை பாராட்டி இருக்கிறார்.

இது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. எப்போதும் சண்டை சச்சரவுகளோடு விவாதம் இருக்கும் நிலையில் இந்த வாரம் வித்தியாசமாக பாடல்கள் வைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள் என்று சிலர் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் டிவியில் ஏற்கனவே பல பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் இருக்கும் நிலையில் இப்போது நீயா நானா நிகழ்ச்சியிலும் இதை கொண்டு வந்து விட்டார்களே என்று சிலர் கருத்து தெரிவித்து வருவதையும் காண முடிகிறது.

அதுபோல இந்த பாடலைக் கேட்ட ரசிகர் ஒருவர் இந்த ப்ரோமோவிற்கு கீழே," கோபி அண்ணா நல்ல வேலை இந்த பாடலை போட்டீங்க... இது நம்ம ஆளுங்க ரொம்ப பேரு இது சாதி பாட்டு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாங்க. அலையோசை படத்துல விஜயகாந்த் நடித்த பாடல். இது கஷ்டப்படுற மக்கள் விடுதலைக்காக பாடிய பாட்டு.

ஆனால் அதை சிலர் தவறா பயன்படுத்துறாங்க. இதை நீயா நானாவில் தெரியப்படுத்தியதற்கு நன்றி" என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இந்த ப்ரோமோவிற்கு கீழே இந்த பாடலை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுபோல நடிகர் விஜயகாந்தை மிஸ் பண்ணுவதாகவும் ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+