நாய் பிரியர்கள் வீடியோ போட சொல்றாங்க! ஆனால் உண்மையில், நடிகர் அருண் வெளியிட்ட பகீர் போஸ்ட் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் , தெரு நாய்கள் பத்திப் பேசின விவாதம், இப்போ சமூக வலைத்தளங்களில் பயங்கரமான புயலை கிளப்பி விட்டுருக்கு. நிகழ்ச்சி முடிஞ்சதும், நாய் பிரியர்களுக்கு எதிராகப் பெரிய கண்டனங்கள் கிளம்ப, அதுல பேசின சிலர், "எடிட்டிங்ல எங்களை தப்பா காட்டிட்டாங்க"னு புலம்பித் தள்ளிட்டிருக்காங்க. இந்தச் சமயத்துல, நடிகர் அருண் குமார் ராஜன் வெளியிட்ட ஒரு வீடியோ, ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் வேற லெவலுக்குக் கொண்டு போயிருக்கு.

Neeya Naana Vijay TV dog

கண்ணீருக்கு முன்பு

இது பத்தி அருண் பேசினப்ப, அவரோட கோபம் ரொம்ப வெளிப்படையா தெரிஞ்சது. "சமீபத்துல பொது விஷயத்த பேச வேண்டாமேன்னு இருந்தேன். ஆனா இந்தத் தெரு நாய் விவகாரம் என்னைத் திரும்பவும் பேச வச்சுடுச்சு. குறிப்பா, என் சக ஆர்ட்டிஸ்டுகள் விஜய் டிவி நிகழ்ச்சியில பேசுன பேச்சு என்னையே கடுப்பாக்கிடுச்சுங்க. பொதுமக்கள் நிச்சயம் கோபப்படத்தான் செய்வாங்க,"னு ஆரம்பிச்சார்.

அப்புறம் அவர் சொன்னதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்: "ஒரு மனுஷன் நாய் பிரச்சினையால் தன் குழந்தையை இழந்துட்டு அழுதுட்டிருக்கார். அந்த இடத்துல போய் என்ன பேசணும், எப்படிப் பேசணும்னு தெரிஞ்சு பேச வேண்டாமா? நானும்தான் வீட்டுல நாய் வளர்க்கிறேன். அதுக்காகக் கண்ணை மூடிட்டுப் பேச முடியுமா? எதுக்குமே ஒரு எல்லை இருக்குங்க.

அருண் சொன்னது ரொம்பவே நியாயமாப்பட்டது. ஒருத்தர் தன் குழந்தையை இழந்த துயரத்துல இருக்கும்போது, அதுக்கு சம்பந்தமே இல்லாம தன்னோட பிரச்சினையைச் சொல்லி, "எனக்கும் ஒரு குழந்தை குறுக்கே வந்ததால் அடிபட்டுச்சு"னு பேசுறது எவ்வளவு பெரிய மனிதாபிமானமற்ற செயல்!

புலம்புறதுல அர்த்தமில்லை

"நிகழ்ச்சியில பேசிட்டு வந்து, டிவியில எடிட் பண்ணிட்டாங்கனு புலம்பிட்டிருக்கிறதுல அர்த்தமில்லை. அவங்களுக்கு அதுதான் வேலையே"னு வெளிப்படையாச் சொன்னார் அருண். சமூக வலைத்தளங்கள்ல, நாய்களுக்கு ஆதரவாப் பேசினவங்கள, "மென்டலா இவங்க?"ன்னு கேட்டு மீம்ஸ்கள் போட்டுத் தாக்கிட்டிருக்காங்க. குறிப்பா, "டாக்ஸ் லிட்டில் பிரின்சஸ்"னு சொல்லி ஒரு நடிகையப் பத்திப் பரவி வர்ற மீம்ஸ் பயங்கரமா இருக்கு. இப்போ, அந்த நிகழ்ச்சியில பேசினவங்க வேற வழி தெரியாம, "எங்க முழு பேச்சையும் வெளியிடல"னு சொல்லி சமாளிச்சிட்டிருக்காங்க.

"அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் கூப்பிட்டாங்க. ஆனா தீவிரமான நாய் லவ்வர்ஸ் சிலர் எதையோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டதா கேள்விப்பட்டேன்"னு சொல்லி, இந்த விவாதத்துல உள்ளேயிருந்து பேசுற மாதிரி ஒரு புதுக் கோணத்தையும் கொடுத்தார்.

சமூகத்துக்கு நான் பதில் சொல்லணும்

கடைசியா அருண் சொன்ன விஷயம், அவரை இன்னும் உயர்ந்த இடத்துல வைக்குது. "இப்ப கடைசியில என்னையும் அவங்களுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிடச் சொன்னாங்க. அதுக்கு அப்புறம்தான், நாம ஏன் உண்மையை மட்டும் பேசக் கூடாதுன்னு தோணிச்சு. இப்போ ரேபிஸ் பிரச்சினை தீவிரமா போயிட்டிருக்கு. இந்தச் சமயத்துல, நான் நாய்தான் முக்கியம்னு பேசிட்டிருந்தா, சமூகம் என்னை மன்னிக்காதுங்க,"னு சொல்லி, ஒரு நடிகர், தான் சமூகத்துக்குப் பொறுப்பானவர் என்பதை உணர்ந்து பேசியிருப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மொத்தத்துல, இந்த ஒரு வீடியோ, 'நீயா நானா' விவாதத்துல இருந்த பல கேள்விகளுக்குப் பதில் கொடுத்திருக்கு. நாய்ப்பிரியர்கள்னு சொல்லிக்கிறவங்க, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ங்கிறதை உணர்ந்து பேசினால், இந்த மாதிரி சர்ச்சைகளுக்கு இடமே இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+