2 வயசு பையனை 5 தெரு நாய் கடிச்ச விஷயம் தெரியுமா? அது எங்க மகன்தான்.. நீயா நானா “காபி தம்பதி” எமோஷனல்
சென்னை: சில தினங்களுக்கு முன்பு பார்க்கில் இருந்த ஐந்து வயது சிறுமியை இரண்டு நாய்கள் கடித்து குதறியது பார்க்கும் மக்களை பதற வைத்தது. அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய வீடியோவும் பெரிய அளவில் வைரலானது. அது எங்களுடைய மகன்தான் என்று "நீயா நானா" நிகழ்ச்சியில் பிரபலமடைந்த "காபி தம்பதி" அப்போது நடந்த நிகழ்வுகளை கண்கலங்க கூறியிருக்கின்றனர்.
சில தினங்களாகவே இணையத்தில் ஐந்து வயது குழந்தையை நாய் கடித்த விஷயம் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே போல நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னுடைய கணவர் ஆபிசுக்கு போயிட்டு வந்து காபி போட்டு கொடுத்தால்தான் குடிப்பேன் என்று சொன்ன விஷயமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழரசி மற்றும் அவருடைய கணவர் சபரி இருவரும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

அதில் நீயா நானா நிகழ்ச்சியில் நாங்கள் எதார்த்தமாக பேசிய விஷயம் இந்த அளவிற்கு இணையத்தில் வைரலாகும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. என்னுடைய கணவர் வேலைக்கு போயிட்டு வந்து எனக்கு காபி போட்டு கொடுத்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து குடித்தபடி கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
காரணம் நானும் வேலை பார்க்கிறேன். வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொண்டு பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது கணவர் வேலைக்கு போயிட்டு வந்ததும் அவர் போட்டு தரும் காபியை குடித்தபடி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்றுதான். நான் அந்த நிகழ்ச்சியில் சொல்ல வந்தேன். ஆனால் வேறு விதமாக சொல்லிவிட்டேன். என்று விளக்கம் கொடுத்திருந்த தமிழரசி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் தமிழரசி நெய்வேலியை சார்ந்த பொண்ணு தான். அவருடைய கணவர் கன்னட பையனாம். இருவரும் சென்னையில் ஒற்றாக வேலை பார்க்கும் போது காதலித்திருக்கிறார்கள். அவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் இரு வீட்டாரும் சம்மதித்த பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வீட்டில் பெற்றோரை கன்வின்ஸ் செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர் பிறகு திருமணம் மட்டும் செய்து வைத்தார்களாம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு இருவரும் பைனான்சியல் ஆக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு பார்த்து இருந்த வேலையையும் தமிழரசி விட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையில் இருக்கும் போது பிசினஸ் செய்யலாம் என்று அதில் பணத்தை போட அதிலும் தோல்வி கிடைத்திருக்கிறது. பணரீதியாகவும், மனரீதியாகவும் கஷ்டத்தில் இருந்த நேரத்தில் இவர்களுடைய மகன் இரண்டு வயதாக இருக்கும்போது நான்கு ஐந்து தெரு நாய்கள் குழந்தையை கடித்து குதறி இருக்கிறது.

இவர்கள் இருவரும் பினான்சியலாக கஷ்டத்தில் இருக்கும்போது தமிழரசியின் சொந்த ஊரான நெய்வேலியில் அவருடைய பெற்றோர் வீட்டில் குழந்தையை விட்டு இருக்கிறார்கள். அப்போது பார்க்குக்கு குழந்தையை தமிழரசியின் பெற்றோர் கூட்டிட்டு போயிருந்த போதுதான் தெரு நாய்கள் குழந்தையை கடித்து இருக்கிறது. பிறகு குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்த்து பல மாதங்கள் ஹாஸ்பிடலில் இருந்து குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து இருக்கிறோம் என்று அந்த பேட்டியில் தமிழரசி மற்றும் அவருடைய கணவர் சபரி கண் கலங்க பேசியிருக்கின்றனர்.
அதே நேரத்தில் இவர்கள் இருவரையும் பற்றி இப்போது இணையத்தில் அதிகமாக நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகின்றது. இவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இவர்களை பற்றி தெரிந்து கொண்டு இவர்களுடைய உண்மையான நிலை என்ன என்பது தெரியாமலேயே சிலர் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications