நீயா நானா 'நாய்' எபிசோடால் பரபரப்பு! டாக் லவ்வர்ஸ்க்கு எதிராக திரும்பிய பிரபலங்கள்! கோபிக்கு அதிகரிக்கும் சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் மிகவும் பிரபலமான விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா'-வில், சமீபத்தில் தெரு நாய்கள் குறித்த விவாதம், சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவாதத்தால், 'டாக் லவ்வர்ஸ்' மற்றும் 'டாக் ஹேட்டர்ஸ்' என இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இணையத்தில் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.

Neeya Naana Vijay TV Gopinath

தெரு நாய்களும், மக்கள் படும் அவஸ்தைகளும்

கடந்த சில ஆண்டுகளில், தெருவுக்குத் தெரு 5 முதல் 10 நாய்கள் என, அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் பெரியவர்கள் எனப் பலரும் நாய்களால் துரத்தப்படுவது, கடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில சமயங்களில், நாய்க்கடி காரணமாக உயிரிழப்புகள் கூட நேர்ந்துள்ளன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அரசாங்கமும் இதை ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதி, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சி: விவாதமும், மோதலும்

இந்தச் சூழலில்தான், 'நீயா நானா' நிகழ்ச்சியில் 'டாக் லவ்வர்ஸ்' மற்றும் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இருதரப்பும் நேருக்கு நேர் விவாதித்தனர். நாய்களின் மீது அக்கறை கொண்ட நடிகை அம்மு மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட படவா கோபி போன்றோர், நாய்களைப் பராமரிப்பதன் அவசியம் குறித்துப் பேசினர். ஆனால், இதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத், மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வன்மையாகக் கண்டித்தார். இந்த விவாதம், சமூக வலைத்தளங்களில் 'நாயா நானா' என்று டிரெண்டானது.

நடிகை அம்முவின் குற்றச்சாட்டு

நிகழ்ச்சியில் பேசியதற்குக் குறைவான வாய்ப்பே கொடுக்கப்பட்டது என்றும், 8 மணி நேர ஷூட்டிங்கில் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடிட் செய்து ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் நடிகை அம்மு சோசியல் மீடியாவில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "நாய் கடிப்பதை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறார்கள்?" என்று அவர் கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அம்மு ஒருமுறை நாய் போல ஊளையிட்டுக் காண்பித்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து, அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். முதலில் அந்த வீடியோ விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்ட நிலையில் பிறகு அது நீக்கப்பட்டு இருக்கிறது.

பிரபலங்களின் கருத்துகள்

பனிமலர் பன்னீர்செல்வம்: இந்த விவாதத்திற்குப் பல பிரபலங்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். செய்தி வாசிப்பாளராகவும் சோசியல் மீடியா பிரபலமாகவும் பிரபலம் அடைந்த பனிமலர் பன்னீர்செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "தெரு நாய்களை விட இந்த டாக் லவ்வர்ஸ் தான் ரொம்ப ஆபத்தானவங்க என்பதை 'நீயா நானா' நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. நாய்களின் மீது அலர்ஜி மற்றும் பயம் கொண்டவர்களைக் கூட, 'டாக் லவ்வர்ஸ்' பேச்சைக் கேட்டால், 'டாக் ஹேட்டர்ஸ்' ஆக மாறிவிடுவார்கள்" என்று தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். நானும் டாக் லவ்வர் தான் ஆனால் குழந்தைகளா நாயா என்று வரும்போது குழந்தைகள் தான் வேண்டும் என்று சொல்வேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பாடகி சுசித்ரா

சோசியல் மீடியாவில் எந்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது அதைப்பற்றிய அதிகமாக பேசி வரும் பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "தெரு நாய்கள் தொல்லை பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதை அரசாங்கமே முதல் முறையாக உருப்படியாகச் செய்ய முன்வந்தால், இந்த டாக் லவ்வர்ஸ் மனுஷ விரோதிங்களா இருக்காங்க. இவங்களையும் ஒரு சாக்கு மூட்டையில போட்டு மார்ஸ்ல தூக்கிப் போட்டுடணும்" என்று கடுமையாகப் பேசியுள்ளார். மேலும், "மனிதர்கள் தான் முக்கியம்" எனப் பேசிய கோபிநாத், தனிக்கட்சி ஆரம்பித்து தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

கோபிநாத், பனிமலர், சுசித்ரா ஆகியோரின் கருத்துகளுக்கு ஒருபுறம் ஆதரவுகள் குவிந்தாலும், மறுபுறம் எதிர்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 'நீயா நானா' நிகழ்ச்சி, மக்களின் மனசாட்சியைத் தொட்டு, ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை மீண்டும் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+