Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்த கணவரின் சாம்பலை தின்று, எலும்போடு வாழ்ந்த மனைவி.. மாமியாரின் பெருந்தன்மை! இப்போ ஊரே கொண்டாடுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கை என்பது பாசம், அன்பு, உறவுகளால் பின்னப்பட்டது. ஆனால், அன்பை அறியாமலேயே அனாதையாக வளர்ந்த ஒரு பெண்ணுக்கு, கணவரின் இழப்பு எந்த அளவுக்குப் பேரிழப்பைக் கொடுக்கும் என்பதை, 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு குடும்பத்தின் கதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. கணவரின் மரணம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆன பிறகும், அந்த ஒன்றரை மாதச் சொர்க்கத்தை மறக்க முடியாமல் தவித்து வரும் மனைவியின் நிலை, அதற்குப் பின்னால் இருக்கும் மாபெரும் தியாகத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

Neeya Naana Vijay TV

ஆதரவற்ற குழந்தையின் ஏக்கம்

சிறுவயது முதலே ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்த அந்தப் பெண்மணிக்கு, நினைவு தெரிந்தது முதலே அன்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தையும் பார்க்கும்போது, 'நமக்கு இப்படி ஒருத்தரும் இல்லையே' என ஏங்கியே தன் கல்லூரிப் படிப்பையும் கடந்துள்ளார். இந்த அன்புப் பற்றாக்குறைதான், அவரின் வாழ்க்கையில் வந்த கணவரின் இழப்பைத் தாங்க முடியாமல் போக முக்கியக் காரணம்.

அப்போதுதான், முதல் கணவர் அவரின் வாழ்க்கைக்குள் நுழைகிறார். தன் சகோதரியின் மகளைப் பார்க்க வந்தவர், அந்தப் பெண்ணின் நிலையையும், படிப்பையும் பார்த்து இரக்கப்பட்டுப் பழக ஆரம்பித்திருக்கிறார். தன் அக்கா மகளுக்காகச் சாப்பாடு கொண்டு வரும்போதெல்லாம், தன் தாயிடம் கேட்டு இந்தப் பெண்ணுக்கும் தனியாகச் சாப்பாடு கட்டி கொண்டு வந்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிய அன்பு, பாசமாக மாறி, இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஒன்றரை மாத சொர்க்கம்

சின்ன வயதில் இருந்தே அன்பை அறியாத அந்தப் பெண்ணுக்கு, திருமணத்திற்குப் பின் கிடைத்த அந்த ஒன்றரை மாத வாழ்க்கை, அப்பட்டமான சொர்க்கமாகவே இருந்திருக்கிறது. பல்லு விளக்க பிரஷில் பேஸ்ட் வைத்துத் தருவது, பசிக்குது என்று எப்போது ஆசைப்பட்டாலும், உடனே கூட்டிட்டுப் போய் விரும்பியதை வாங்கிக் கொடுப்பது, டீச்சர் பயிற்சிக்குப் பிறகு, மேல படிக்கக் காலேஜில் சேர்த்துவிட்டு, அவரே தினமும் கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வருவது...

இப்படி, இத்தனை வருட அன்பு ஏக்கத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகக் கொட்டிக் கொடுத்திருக்கிறார் அந்த முதல் கணவர். வாழ்நாளில் அன்பை அனுபவிக்காத ஒருவருக்கு, திடீரெனக் கிடைக்கும் இத்தகைய கவனிப்பும், பாசமும் எத்தனை பெரிய ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும்!

ஆனால், அந்தச் சந்தோஷத்தின் ஆயுள் ஒன்றரை மாதம்தான். அந்தப் பெண்ணிற்காக தீபாவளிக்கு புடவை எடுத்துக்கொண்டு வரும் வழியில் ஆக்ஸிடண்ட் ஆகி இறந்து போயிருக்கிறார். அதனால்தானோ என்னவோ, 9 வருடங்கள் ஆன பிறகும் அந்தப் பெண்ணால் அந்த நினைவுகளைக் கடந்து வர முடியவில்லை.

ஒரு குடும்பம் செய்த மகத்தான உதவி

கணவரின் மரணத்திற்குப் பின் அந்தப் பெண் உடைந்துபோனது யாரும் அறியாததில்லை. தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார். அப்போது, மாமனார் குடும்பம் நகையை விற்று, ஒரு வாரம் மருத்துவமனையில் போராடி அவரைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கணவரின் சாம்பல், எலும்புகள் போன்றவற்றைக் கூட யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண் தன் கையோடே கொஞ்ச நாள் வைத்திருந்திருக்கிறார். நல்லவேளை, இந்தக் குடும்பம் அவரைத் தனியாக விட்டுவிடவில்லை; இல்லையென்றால், அவர் என்றோ இந்த உலகை விட்டுச் சென்றிருப்பார்.

தன்னுடைய கணவர் இறுதி சடங்கு நடந்த பிறகு யாருக்கும் தெரியாமல் இடுகாட்டிற்கு சென்று அந்த கணவரின் சாம்பலை உடல் எல்லாம் பூசிக்கொண்டு, சாம்பலை தின்று தலைவிரி கோலமாக அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருப்பாராம். அப்போது அக்கம் பக்கத்தினர் தான் அந்த பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு கையை வெட்டுவது, காலை வெட்டுவது என்று வேண்டாத வேலைகள் எல்லாம் செய்து இருக்கிறார். கணவர் மீது இருந்த பாசத்தால் அவர் என்ன செய்கிறோம் என்பதையே தெரியாமல் செய்து இருக்கிறார்.

இந்தத் துயரமான சூழ்நிலையில், மறைந்த கணவரின் தம்பியான வெற்றி என்பவர், அந்தப் பெண்ணின் நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அண்ணனின் பாசத்தைப் பார்த்து, அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று, அவரை உடைந்துபோகாமல் இன்னும் அரவணைத்து வருகிறார். இவ்வளவு பெரிய துயரத்தையும், நினைவுகளையும் தாண்டி ஒரு பெண்ணை மனைவியாக ஏற்று, அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வெற்றிக்கு உண்மையிலேயே பெரிய மனசு! இந்தத் தியாகமும், அன்பும் நிறைந்த குடும்பம்தான் 'நீயா நானா' மேடையையும், பார்வையாளர்களையும் பெரும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தப் பெண்ணிற்காக ஆரம்பத்தில் இருந்தே உறுதுணையாக இருந்தது அவருடைய மாமியார் தான்க்ஷ அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, எனக்கு ஐந்து பெண் குழந்தைகள். அதற்கு பிறகு தான் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் ஒருவரை தான் என்னுடைய மருமகள் முதலில் திருமணம் செய்து வந்தாள். ஆனால் என்னுடைய பையன் ஒன்றரை மாதத்தில் இறந்து போய்விட்டான். அதற்குப் பிறகு இந்த பொண்ணு வேண்டாம் என்று ஊரெல்லாம் சொன்னார்கள். ஆனால் என் பையனை நம்பி வந்த பொண்ணை நான் எப்படி வெளியே அனுப்ப முடியும் என்று நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். என் பையன் இறந்த பிறகு அந்த பொண்ணு இருக்கும் நிலைமையை பார்த்து வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்க கூடாது என்று சொல்லி என்னுடைய மகள்கள் எல்லோரும் ஒரு காலேஜில் சேர்த்து விட்டோம். அதற்குப் பிறகு மூன்று வருடம் கழித்து தான் என்னுடைய சின்ன மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம் என்று கண்கலங்க பேசி இருக்கிறார். இந்த தாயின் பாசத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். பலர் வரதட்சணைக்காக வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் காலத்தில் இந்த மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அம்மாவாக மாறி இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

அன்பைத் தேடும் இத்தகைய மனங்களுக்கு, நாம் குடும்பமாக இருந்து எப்படி ஆதரவு கொடுக்கலாம்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+