இனி தமிழ் பசங்க நிலைமை? கரூரில் “கொரியன்” மாப்பிள்ளை.. நீயா நானாவில் திகைத்துப் போன கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூலை 14ஆம் தேதிக்கான எபிசோடில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரியன் மோகத்தை பற்றி ஒரு விவாதம் நடைபெறுகிறது. இதில் பல இளம் பெண்கள் தங்களுக்கு கொரியன்ஸை எதற்காக பிடிக்கிறது என்ற காரணத்தை சொல்லி இருக்கிறார்கள். அதை எதிர்த்து பொதுமக்கள் விவாதம் செய்கிறார்கள்.
இன்னும் 90ஸ் கிட்ஸ்கள் பலர் திருமணம் ஆகாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்த பல 90ஸ் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்போது உள்ள 2k கிட்ஸ்களின் பலர் பள்ளி கல்லூரி பருவத்திலேயே கமிட் ஆகி விடுகிறார்கள் என்று 90's கிட்ஸ்கள் வேதனையோடு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மேலும் ஆண்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக இப்போது சமுதாயத்தில் ஒரு ட்ரெண்ட் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதாவது தமிழ் ஆண்களை விட சில பெண்களுக்கு கொரியன்ஸ் தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். அதற்கு பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். அவர்களுடைய அழகு மற்றும் அவர்களுடைய பேச்சு வழக்கு கூட எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் போகிற போக்கை பார்த்தால் இனி வரும் தமிழ் சந்ததியினருக்கு தமிழ் பெண்கள் கிடைப்பது சந்தேகம்தான் போல... வெளிநாட்டு மோகம் அதோடு வெளிநாட்டவர்களின் கலாச்சார ஈர்ப்பு காரணமாக பலர் கொரியன்ஸ்களை தங்களுக்கு பிடித்திருக்கிறது என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதிலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் தங்களுடைய பேக்குகளில் கூட BTS அதாவது கொரியன்ஸ் பாடகர்களின் புகைப்படங்கள் இருப்பது போன்று பேக்குகளை பார்த்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். பள்ளி படிக்கும் குழந்தைகள் கூட நோட்டு புத்தகங்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றில் BTS வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் இது குறித்த விவாதம் தான் நடைபெறுகிறது. அதில் கோபிநாத் உங்களுக்கு கொரியன்ஸ் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்க எதிர் தரப்பில் இருந்த இளைஞர்கள் பலர் கொரியன்ஸ் பேச்சு வழக்கு மற்றும் அவர்களுடைய அழகு எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை விமர்சிக்கும் அணியில் இருக்கும் பொதுமக்கள் நீங்கள் மொபைல் போனில் கொரியன்ஸ்களை பார்த்துக்கொண்டு இவர்களின் உலகம் இப்படி தான் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மொபைல் போனில் பார்ப்பது போல அங்கு உலகம் இருக்காது கண்மூடித்தனமாக யாரையும் நம்பவும் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதே போல நீயா நானாவில் ஒரு பெண் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னை கரூரில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மா அப்பா கரூரில் கூலி வேலை செய்து வருவதாகவும் வீட்டின் எதிர்ப்பை மீறி கொரியன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்து இணையத்தில் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications