நீயா நானா: இதெல்லாம் ஒரு பெருமையா? கோபிநாத் கேட்ட கேள்வி.. அதிர வைத்த பெண்மணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூன் 30-ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரத்தில் இளமையான மாமியார்களும் அதனால் கஷ்டப்படும் மருமகள்களும் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. அதில் ஒரு மாமியாரிடம் கோபிநாத் வயசானா காலையில் தூக்கம் வராது இதை ஒரு பெருமைன்னு பேசிட்டு இருக்கீங்களே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் பைக் மற்றும் கார் மீது காதல் கொண்ட நபர்களும் அவர்களின் செயல்களை விமர்சிக்கும் நபர்களும் கலந்து கொண்டு விவாதித்து இருந்தனர்.

அப்போது பலர் தாங்கள் வைத்திருக்கும் பைக், கார் போன்றவை எங்களுக்கு ஒரு உயிர் போல தான். எங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. எங்களுடைய சுக துக்கங்களை நாங்கள் அந்த பைக்கிடம் ஷேர் பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதோடு இவர்கள் செய்யும் அலப்பறையால் பாதிக்கப்பட்ட பலர் இவர்கள் பைக் மற்றும் கார்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நெருங்கிய உறவுகளிடம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.
இதற்கு கோபிநாத் பதில் கொடுத்து இருந்தார். அதுபோல அதற்கு முந்தைய வாரத்தில் திருமணத்தில் மணப்பெண் வீட்டில் அதிகமான எதிர்பார்ப்பு வைக்கிறார்கள் என்று மணமகன் வீட்டின் பெற்றோர் குற்றசாட்டு வைத்து ஒரு விவாதமும் நடைபெற்றது. இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருவது போல இந்த வாரமும் சுவாரஸ்யமான மற்றும் கலகலப்பான ஒரு விவாதம் வைத்திருக்கின்றனர்.
அதாவது இளமையாக இருக்கும் மாமியார்களும் அவர்களுடைய மருமகள்களும் கலந்து கொள்ளும் இந்த வார நிகழ்ச்சியில் பல மாமியார்கள் தாங்கள் இன்னும் இளமையாக இருக்கிறோம் என்று செய்த செயல்கள் பார்த்து கோபிநாத் கலாய்த்து இருக்கிறார். அதிலும் இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் நான்காவது ப்ரோமோவில் கோபிநாத் ஒரு மாமியாரிடம் வயசு ஆக ஆக காலையில் தூக்கம் வராது. ஆனால் இது ஒரு பெருமை என்று பீத்திக்கொண்டு திரியிறீங்க என்று கேட்க, அந்த மாமியார் இப்படி எல்லாம் ஏன் சார் சொல்லணும் இமேஜ் பாதிக்காதா என்று சொன்னது பார்ப்பவர்களை சிரிக்க வைத்திருக்கிறது.
அதுபோல எதிர் தரப்பில் இருந்த மருமகள் தன்னுடைய மாமியார் குறித்து பல கம்ப்ளைன்ட் சொல்கிறார். அதில் எங்க மாமியார் வாரத்தில் ஒவ்வொரு நாளும் என்னென்ன கலர் சொல்றாங்களோ அதே கலர்ல தான் நான் டிரஸ் பண்ணனும் என்று சொல்ல, அதற்கு டென்ஷனான கோபிநாத் எனக்கு புரியல அவங்க என்ன ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கலர் டிரஸ் போடணும் என்று கேட்க, அதற்கு அந்த மாமியார் சார் நவகிரகங்கள் சார் என்று சொல்ல எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்த ப்ரோமோக்கள் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதுபோல முதல் ப்ரோமோவில் பல கப்புகள் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பல டயலாக் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எந்த கப்பை யார் தன்னுடைய மாமியாருக்கு கொடுக்கிறீர்கள் என்று மருமகளிடம் கேட்க ஒவ்வொரு மருமகளும் அங்கு கொடுக்கப்பட்டிருப்பதில் தங்கள் மாமியாருக்கு செட்டான வசனங்களை எடுத்து காட்டுகிறார்கள்.
அதில் ஒரு மருமகள் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்ற கப்பை எடுத்துக்காட்டுகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு மருமகள் உங்க கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையே என்று கப்பை எடுத்துக்காட்டுகிறார். அதைத் தொடர்ந்து ஒரு மருமகள் நீங்க யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உங்களுக்கு தெரியும் என்ற கப்பை எடுத்துக்காட்ட அதை பார்த்ததும் கோபிநாத் உட்பட அரங்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோக்களுக்கு கீழே இந்த வாரம் எபிசோடு செம கலகலப்பாக இருக்கும் போலயே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications