நீயா நானா: இளைஞர்களுக்கு வேலைன்னு சொல்லி இப்படியுமா ஏமாற்றுவாங்க? வெளிச்சம் போட்ட பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 12ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரத்தில் சரியான வேலைக்கு போகாமல் சாக்கு போக்கு சொல்லும் இளைஞர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
அப்போது நடந்த விவாதத்தில் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் மோசடிகள் குறித்து பிரபலம் ஒருவர் பல விஷயங்களை கூறியிருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக கவனம் ஈர்த்து வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தற்போது உள்ள
சூழ்நிலையில் பல இளைஞர்கள் சரியான வேலையை செய்யாமல் இணையத்தின் மோகத்தில் செல்போனில் கேம் விளையாடிய படியும் youtube வீடியோக்களை பார்த்த படியும் நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பல பெற்றோர்களின் வருத்தமாக இருக்கிறது.
நீயா நானாவால் இப்படி ஆகும்னு நினைக்கல.. "காபி" தம்பதி சொன்ன வார்த்தை.. நடந்ததே வேறு விஷயமாம்
குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் பலரும் செல்போன் மோகத்தில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இதை மையமாகக் கொண்டு இந்த வார நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தகுந்த படியே நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த வாரமும் இப்போதுள்ள இளம் தலைமுறைகள் வேலைக்கு போகாமல் சாக்கு போக்கு சொல்லி கொண்டு இருப்பவர்களும் அவர்கள் எப்போதுதான் சொந்தக்காலில் நிற்கப் போகிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி கேட்கும் பெற்றோர்களும் இரு அணியாக கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
அதில் பல இளைஞர்கள் எங்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை அதனால் எங்களுக்கு பிடித்த வேலையை செய்கிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு பெற்றோர் தரப்பிலிருந்து பல பெற்றோர் தங்களுடைய வருத்தங்கள் மற்றும் கோபங்களை கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சில பெற்றோர்கள் பேசுகையில் இவர்கள் சரியான வேலையில் இல்லாமல் அடுத்தடுத்து கம்பெனி மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
நிலையான வருமானமும் இல்லை அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு ஒரு சில இளைஞர்கள் எங்கள் மீது எந்த தப்பும் இல்லை. நாங்களும் முடிந்த அளவிற்கு இண்டர்வியூ போகிறோம். எங்களுடைய திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் வேலைக்கு நாங்கள் ஆசைப்படுகிறோம். அது தப்பா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அதில் பிங்க் சட்டை போட்ட நபர் பேசுகையில் நான் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட பார்மசி கம்பெனிக்கு வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கிறேன். நேர்ல ஒரு அஞ்சு ஆறு கம்பெனி ஏறி இறங்கிட்டேன் என்று சொல்ல, அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நபர் போஸ்ட் ரெக்ரூட்மெண்ட் என்றால் என்ன தெரியுமா? சில கம்பெனியில் வேலைக்கு ஓபனிங் போட்டுருவாங்க.. இன்டர்வியூ நடந்துகிட்டே இருக்கும். ஆனால் வேலைக்கு ஆள் எடுக்க மாட்டாங்க. இப்படி ஒரு ட்ரெண்ட் போய்கிட்டு இருக்கு என்று சொல்ல இது இணையத்தில் அதிகமான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அப்படி பார்த்தால் பல இளைஞர்கள் இந்த மாதிரி கம்பெனிகளில் தெரியாமல் இன்டர்வியூக்கு போய்விட்டால் அவர்களுடைய நேரமும் பணம் செலவழிகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு இடத்தில் தங்களுக்கு செய்ய வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி சிலருக்கு ஏற்பட்டு விடுவதால் அடுத்த முயற்சி தொடராமலேயே விட்டுவிடுவார்கள்.
இன்னும் ஒரு சிலர் இந்த ஏமாற்று இன்டர்வியூவில் தான் கலந்து கொண்டு இருப்பதால் செலக்ட் ஆகுவோமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இதனால் இதை அரசு சரியாக கவனித்து இளைஞர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications