நீயா நானாவால் இப்படி ஆகும்னு நினைக்கல.. “காபி” தம்பதி சொன்ன வார்த்தை.. நடந்ததே வேறு விஷயமாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் கணவன் மற்றும் மனைவிகள் கலந்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மனைவி தன்னுடைய கணவன் வேலைக்கு போயிட்டு வந்து காபி போட்டு குடுத்தால் தான் நான் குடிப்பேன் என்று சொன்னது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த தம்பதி தற்போது பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பலர் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமடைந்து விடுகிறார்கள். பலருக்கு திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பிரபலம் கூட சில நேரங்களில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்து விடுகிறது. அதனாலேயே போட்டி போட்டு பலரும் பல தலைப்புகளில் விவாதம் நடக்கும் போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் எதார்த்தமாக எதையோ பேச போறேன் என்று சொல்லி எதையோ பேசி விட்டு ஒரு பெண் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிலும் இவரை ஆண்களை விடவும் பெண்கள் தான் அதிகமாக திட்டி கொண்டிருக்கிறார்களாம். அதற்கு காரணம் இந்த பெண் தன்னுடைய கணவர் ஆபிசுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து எனக்கு காபி போட்டு குடுத்தால் தான் நான் குடிப்பேன் என்று சொன்னது தான்.
இது குறித்து அந்தப் பெண் நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு தனியார் youtube சேனலில் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கை இப்படி மாறும் என்று நினைக்கவே இல்லை. அந்த நிகழ்ச்சியில் நான் வேறு ஒன்று பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய கணவர் காபி போட்டு தந்தால் தான் குடிப்பேன் என்று எதையோ பேசி விட்டேன்.
நானும் பிசினஸ் பண்ணுகிறேன். என்னுடைய கணவரும் ஆபீஸ் போய்விட்டு வருகிறார். அவர் வரும்போது எனக்கு காபி போட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பொதுவா நான் டீ காபி எல்லாம் குடிக்கிறது கிடையாது. நாங்கள் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டிலுமே சம்மதிக்கவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் வீட்டினரின் சம்மதத்தோடு திருமணம் செய்தோம். ஆனாலும் எங்களுக்கு குடும்பத்தினர் யாரும் சப்போர்ட் கிடையாது. நான் என்னுடைய கணவரோடு டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவர் ரொம்ப ஸ்லோவாக இருப்பார்.
அவர் வேலைக்கு போயிட்டு வந்ததும் எனக்கு ஒரு காபி போட்டு தந்து இருவரும் காபி குடித்தபடியே அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை பேச வேண்டும் என்று நான் அவர் வருவதற்கு முன்பு ஸ்நாக்ஸ் செய்து வைத்து விடுவேன். ஸ்னாக்ஸ் செய்த எனக்கு காபி போடத் தெரியாதா? ஆனால் அவர் காபி போட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் நான் நீயா நானாவில் சொல்ல நினைத்தேன். ஆனால் வேறு மாதிரி பதட்டத்தில் சொல்லிவிட்டேன்.
இப்போ இணையத்தில் என்னுடைய கணவர் ரொம்பவே ஹீரோவாக மாறிவிட்டார். நான் வில்லியாக மாறிவிட்டேன். பலரும் தவறாக நினைத்து என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் .அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் என்னை அதிகமாக திட்டுகிறார்கள். என்னை திட்டுனாலும் பரவாயில்லை. என்னுடைய கணவர் இப்போ ஹீரோவா ஆகிவிட்டார் என்பது எனக்கு சந்தோஷம்தான் என்று அந்த பேட்டியில் நீயா நானா பிரபலம் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications