நீயா நானா: உங்க கர்ப்பகாலத்தை ஏன் ஊருக்கே காட்டுறீங்க? ஃபரீனாவை மடக்கிய பெண்.. திடீர் வாக்குவாதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மே 26 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக சீரியல் நடிகை ஃபரீனா கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல இந்த வார எபிசோடில் கர்ப்ப காலத்தை போட்டோ சூட்டோடு கொண்டாடுபவர்களும் அதை விமர்சிப்பவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான தலைப்போடு விவாதம் நடைபெறுகிறது. கடந்த வாரத்தில் பாரம்பரியமான தங்க நகைகளை விரும்பும் பெண்கள் அதை விரும்பாத பெண்கள் என்ற இரண்டு அணியினர் கலந்து கொண்டனர். அதில் பலர் தாங்கள் பல வருடங்களாக சில நகைகளை பாதுகாத்து வருவதாகவோ கூறி இருந்தனர்.

பெண் தான் போட்டிருக்கும் நெக்லஸ் தன்னுடைய மாமியார் உடையது. அதை என்னுடைய மாமியார் 1950 இல் வாங்கியிருக்கிறார். அப்போது ஒன்றரை பவுன் தங்கம் வெறும் 157 ரூபாய் தான் என்று பில்லுடன் வந்திருந்தார். அதுபோல மேலும் சில பெண்கள் தங்களுடைய நகை 50 வருடங்களுக்கு முன்பு உள்ளது என்றும் கூறிக் கொண்டிருந்தனர்.
என்னும் ஒரு சில பெண்கள் தங்களுடைய பாட்டி நகை, கொள்ளுப்பாட்டி நகை என்று பல நகைகளை எடுத்துக்காட்டி எல்லோரையும் வியப்படைய வைத்திருந்தனர். அப்போது எதிர் தரப்பில் இருந்தவர்கள் இவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவது மட்டுமல்லாமல் அதை பாதுகாப்பாக வைப்பதும் பெரிய ரிஸ்க்காக இருக்கிறது. அதனால் நாங்கள் எளிமையான நகைகளையே விரும்புகிறோம் என்று கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் கர்ப்ப காலத்தை வெகு விமர்சனமாக கொண்டாடுபவர்களும் அதை விமர்சிப்பவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுக்கும் போட்டோ சூட் மட்டும் அல்லாமல் விதவிதமான பெயர்களில் பல பங்க்ஷன்களும் கொண்டாடப்படுவதையும் நீயா நானாவில் கர்ப்பமாக இருக்கும் சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதற்கு எதிர் தரப்பில் இருந்த பெண்கள் இவ்வளவு செலவு ஆடம்பரம் எதற்கு என்கிற வகையில் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக ஃபரீனா கலந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய கர்ப்ப காலத்தில் தன்னுடைய முழு வயிறு தெரிகிற மாதிரி போட்டோ சூட் எடுத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் முதல் மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் மாதம் வரைக்கும் தன்னுடைய வயிற்றை போட்டோ எடுத்து ஆல்பம் ஆக போடுவது போன்று வயிற்றை காஸ்டிங் செய்வது குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதல் மாதத்தில் என்னுடைய வயிறு எப்படி இருந்தது, இரண்டாவது மாதத்தில் எப்படி இருந்தது என்று மொத்த காஸ்டிங் பார்க்கும் போது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று சொல்ல கொண்டிருக்கிறார்.
அப்போது எதிர் தரப்பில் இருந்த பெண் கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்வதை யார் பாக்கணும்? என்று கேட்க, அதற்கு ஃபரினா நாங்க தான் பாக்கணும் என்று சொல்ல, அதற்கு கேள்வி கேட்ட பெண் அப்போ நீங்க உங்களை போட்டோ எடுத்து நீங்க பாருங்க ... ஆனா அதை ஏன் ஊரு பார்க்கணும்? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இது அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதுபோல இன்னொரு ப்ரோமோவில் பிறந்த குழந்தையை எப்படி தந்தை கையில் தூக்குவது என்பது குறித்து பெண் ஒருவர் விளக்கம் கொடுக்கிறார். அப்போது அங்கு குழந்தை போன்று ஒரு பொம்மை வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து நெகிழ்ந்து போன கோபிநாத் இதை பார்க்கும்போது குழந்தையின் முகம் போல இருப்பதால் அதை கையில் எடுக்கும் போதே ஒரு விதமான நடுக்கம் ஏற்படுகிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications