நீயா நானாவில் அழுததற்கு அவ்வளவு வலி இருக்கு! தற்கொலைக்கு முயற்சி செய்தோம்.. வலி நிறைந்த வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் தனி ஆளாக குடும்பத்திற்காக வேலை செய்யும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பெண் தன்னுடைய மகன் உதவியால் தான் டெலிவரி வேலை செய்து வருவது பற்றியும் தன்னுடைய கனவுகள் குறித்தும் கண்ணீரோடு பேசியது பலரையும் கண் கலங்க வைத்தது.
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு அவர் இணையத்தில் அதிகமாக பிரபலம் அடைந்ததை தொடர்ந்து அவர் தனியார் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் சில எபிசோடுகள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு விடுகிறது. அந்த வகையில் தான் கடந்த வார நீயா நானா நிகழ்ச்சியிலும் நடந்தது.

பலர் வாழ்க்கையில் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தான் மட்டும் கஷ்டப்படுவதாக புலம்பி கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடை பார்த்தால் கண்டிப்பாக தங்களுடைய வாழ்க்கை எவ்வளவு மேலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்வார்கள்.
தனி ஆளாக குடும்பத்திற்காக இரவு பகலாக உழைக்கும் பெண்கள் தங்களுடைய கஷ்டங்கள் குறித்து பல கண்ணீர் கதைகளை நீயா நானா நிகழ்ச்சியில் பேசி இருந்தார்கள். அதில் ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் ஆன்லைன் சாப்பாடு டெலிவரி வேலை செய்து வருவதாக கூறியிருந்தார். அதோடு அவருடைய மகன் தனக்காக செய்த உதவிகள் குறித்தும் பேசியிருந்தார்.
அந்த பெண்ணிடம் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை கொடுத்து கோபிநாத் அவருடைய மகனுக்கு ஊட்டி விட சொல்லியிருந்தார். பிறகு அதே ஸ்வீட்டை தனக்கும் வேண்டும் என்று கோபிநாத் உரிமையுடன் சண்டை போட்டு வாங்கி சாப்பிட்டார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் தன்னைப் பற்றி பிரபல சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் என்னுடைய பெயர் முத்துலட்சுமி. நான் நீயா நானா நிகழ்ச்சியில் அழுததற்கு காரணம் என்னுடைய வாழ்க்கையில் அவ்வளவு வலி இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நீயா நானா நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன். என்னுடைய கணவர் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் எங்களுடைய வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து கை கால் இழுத்துகிச்சு. அதற்குப் பிறகு அவருக்கு மருத்துவ செலவுக்காக கையில் இருந்த பணம் எல்லாம் செலவுக்கு ஆகிவிட்டது.
அதோடு கடனும் வந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். கணவரால் வேலைக்கு போக முடியாது அவர் வீட்டில் இருக்கிறார். அவருக்கு மருத்துவத்திற்கும் பார்க்க வேண்டும். பிள்ளைக்கு படிப்பு செலவுக்கு பார்க்க வேண்டும், சாப்பாட்டு கொடுக்க வேண்டும் என்று நான் தவித்து போய் இருந்தேன். அப்போது பல நாள் நாங்கள் பட்டினியாக வீட்டில் இருந்தோம்.
அந்த நேரத்தில் தான் என்னுடைய மகன் ஜொமேட்டோவில் எப்படி ஆர்டர் எடுப்பது டெலிவரி செய்வது என்பதை சிலரிடம் கேட்டு வந்து என்னிடம் சொன்னான். இதில் நீ வேலை பார்த்தால் அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடியும் வீட்டையும் பார்த்துக் கொள்ள முடியும் என்று என்னுடைய மகன் சொன்னதை கேட்டு நானும் அந்த வேலையில் சேர்ந்தேன். முதலில் வேலை எப்படி பார்க்க வேண்டும் என்பது தெரியாது.
அப்போது என்னுடைய மகன்தான் எனக்கு சொல்லித் தந்தான். அந்த நேரத்தில் என்னுடைய மகன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் நான் அடுத்த வாரம் கடன் கொடுக்க வேண்டுமே கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்களே... பொண்ணுக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று அழுது கொண்டே என்னுடைய மகனை பின்னாடி உட்கார வைத்து வண்டி ஓட்டிக்கொண்டு டெலிவரி கொடுப்பதற்காக போய்க்கொண்டிருக்கிறேன்.
அப்போது என்னுடைய மகன் என்னிடம் அம்மா எதிரே ஏதாவது பெரிய வண்டி வந்துச்சுன்னா என்னை அந்த வண்டியில் தள்ளி விட்டுருங்க அப்ப கொஞ்சம் காசு கிடைக்கும் அதை வச்சு நீங்க நிம்மதியா இருக்கலாம். அக்காவை நல்லா படிக்க வைக்கலாம் நீங்களும் இப்படி ஓடி ஓடி வேலை பார்க்க வேண்டாம். நிம்மதியா சாப்பிடலாம் என்று சொன்னான். அதை என்னால் மறக்க முடியாது. அதற்கு பிறகு நான் என்னுடைய கஷ்டங்களை அவனிடம் ரொம்ப சொல்ல கூடாது என்று நினைத்தேன்.
காலையில் 5:00 மணிக்கு எழுந்து ஹோம் ஒர்க் எல்லாம் முடித்துவிட்டு என்னுடைய மகன் என்னோடு டெலிவரிக்கு வந்து விடுவான். பிறகு ஸ்கூல் முடித்ததும் என்னோடு வருவான். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களும் அவன் என்னோடு தான் இருப்பான். அதுபோல ஒரு முறை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மாத்திரை எல்லாம் எடுத்து விட்டோம்.
அப்போ என்னுடைய கணவர் நீ இப்போ இந்த முடிவு எடுத்ததற்கு நான் கீழே விழுந்த போதே எடுத்து இருக்கலாம். இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டு இப்போ இப்படி பண்ணனும்னு நினைச்சுட்டியே.. இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு உடம்பு சரியாகும் நான் உங்களை உட்கார வைத்து வேலைக்கு போய் பார்த்துகிறேன் என்று அவர் சொன்னார். அதற்கு பிறகு இனி அந்த முடிவு எடுக்கவே கூடாது என்று நான் நினைத்து விட்டேன்.
என்னுடைய வாழ்க்கை இன்னும் சரியாகவில்லை என்னைக்கு தான் எங்களுக்கு கஷ்டம் தீரும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியாவது என்னுடைய பிள்ளைகளை நல்லா படிக்க வைத்து வளர்த்து விட்டிரனும்னு பிடிவாதத்தோடு நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று முத்துலட்சுமி கண்கலங்க பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications