வீட்டை விட்டு வெளியவே போக முடியாது போல! இப்படியும் ஏமாற்றுவாங்களா? நீயா நானாவில் அம்பலமான க்ரைம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் அக்டோபர் 20ஆம் தேதிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
முன்னாடி காலகட்டத்தில் எல்லாம் பர்சில்தான் எல்லோரும் பணத்தை வைத்திருப்பார்கள். சின்ன அலுவலகங்கள் முதல் பெரிய அலுவலகங்கள் வரை ஒன்றாம் தேதி கையில் பணம் கொடுக்கப்பட்டதும் வீட்டு செலவுக்காகவும், அத்தியாவசிய செலவுக்காகவும் கையில் பணத்தை கொண்டு செல்வார்கள். அப்போது சிலர் அந்த பணத்தை பறிப்பதற்கு வாய்ப்பு இருந்தது.

பணத்தை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று பணவர்த்தனையை எளிமையாக்குவதற்காகவும் ஆன்லைன் ட்ரான்ஸ்லேஷன் அதிகரித்தது. ஆனால் இப்போது அதனாலேயும் பலருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலமாக பலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர் .போனில் தெரியாத நம்பரில் இருந்து வரும் மெசேஜ்களை என்னவென்று பார்க்கும் போதே அந்த போனில் இணைக்கப்பட்டு இருக்கும் பேங்க் அக்கவுண்ட் ஹேக் செய்து அதில் இருக்கும் பணத்தை ஏமாந்தவர்கள் ஏராளமானவர் இருக்கிறார்கள்.
ஒரு சிலரிடம் உங்களுக்கு பரிசு பொருள் விழுந்திருக்கிறது அதனால் கொஞ்சம் பணம் நீங்கள் கட்டினால் உங்களுக்கு பெரிய தொகை வந்து சேரும் என்று ஆசை வார்த்தை சொல்வதை நம்பி ஏமாந்து போகின்றனர். இப்படி ஆன்லைனில் நாளுக்கு நாள் பலர் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். அதை மையப்படுத்தி தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறுகிறது.
தற்போதைய சூழ்நிலைக்கு இந்த தலைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் மோசடியில் தெரியாமல் ஏமாந்த பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவும் பலர் சில வழிமுறைகளையும் கூறுகிறார்கள். அப்படித்தான் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஒரு பெண் என்னுடைய போனிலிருந்து நம்பரை எடுத்து அவங்களே ஏடிஎம் கார்டு ரெடி பண்ணி என்னுடைய அக்கவுண்ட் ஃபுல்லா க்ளோஸ் பண்ணிட்டாங்க என்று அதிர்ச்சி கொடுக்குறார்.
அதைத் தொடர்ந்து பேசிய இன்னொரு நபர் உலக அளவில் நடக்கும் எலக்ட்ரானிக் பேமெண்டில் 55 சதவீதம் இந்தியாவில் தான் நடக்கிறது என்று சொல்கிறார். இதற்கு பிறகு பேசிய நபர் தான் எல்லோருக்கும் பகீர் விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது கை அடக்கத்தில் சின்னதாக ஒரு ப்ளூடூத் போன்ற ஒரு கருவி இருக்கிறது. அதை கோபிநாத் கையில் கொடுத்த அந்த நபர் இந்த கருவியில் என்எஃப்சி லீடர் இருக்கிறது.
உங்கள் ஏடிஎம் கார்டின் பின் நம்பர் கண்டிப்பா உங்க பேண்ட் பாக்கெட்டின் பின்பக்கத்தில் தான் இருக்கும். அந்த இடத்தில் இந்த மிஷினை காட்டினால் உங்கள் காட் இங்கே குளோன் ஆகிவிடும். உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணம் முழுமையாக எடுத்து விடலாம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம் என்பது கோபிநாத் உட்பட எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
நாம் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்றால் பர்ஸ்ஸில் நம்முடைய ஏடிஎம் கார்டு இருக்கும் அந்த இடத்தில் நம் பக்கத்திலேயே நின்று கொண்டு இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்கள் இந்த மிஷினை வைத்துக்கொண்டு நமக்கே தெரியாமல் நம்முடைய ஏடிஎம் கார்டை அதில் இணைத்து பணத்தை முழுமையாக எடுத்து விடுவார்கள் என்று பகீர் தகவலை சொல்லி இருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியே கையில் பணத்தை கொண்டு போனால் தான் கஷ்டம் என்று நினைத்தால் இப்போது கார்டில் கொண்டு போனாலும் பெரும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் என்ற வழிமுறைகளையும் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆன்லைன் மோசடி பற்றி தெரியாதவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.
-
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத் -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் குழந்தை பற்றி சரவணன் சொன்ன வார்த்தை! அடி வெளுத்து வாங்கிய கோமதி! பாண்டியன் எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications