நீயா நானா பின்னணியில் நடப்பது இதுதான்! எல்லாமே ஸ்கிரிப்ட்டா? பிரபலம் உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட "பழனி" என்கிற பிரபலம் இந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் என்ன நடக்கிறது என்பது பற்றி பல விஷயங்களை தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. ஆனால் இதில் கலந்துகொண்டு விவாதிப்பவர்கள் ஸ்கிரிப்ட் படி பேசுகிறார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் மீண்டும் மீண்டும் கலந்து கொள்வதும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் "அரசியல் நல்லதா? கெட்டதா?" என்ற விவாதம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட "பழனி" என்கிற நபர் தன்னுடைய "all in all" என்ற youtube சேனலில் நீயா நானா நிகழ்ச்சியில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் பின்னணியில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் ஒரு மாதத்திற்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் வரும் வார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று வந்த ஃபோன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தேன். நான் மிஸ்டுகால் கொடுத்த அன்றே எனக்கு போன் செய்து பேசினார்கள். அப்போது ஒரு மூன்று எபிசோடுகள் வரப்போகிறது அது குறித்த தலைப்பை உங்களிடம் கேட்கிறோம் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் என்று பேசினார்கள்.
அப்போது என்னிடம் தத்துவ பாடல்கள் குறித்தும், அண்ணன் தங்கை பாசம் மற்றும் அரசியல் தற்போதைய சூழ்நிலையில் நல்லதா கெட்டதா என்ற தலைப்பில் கேள்வி கேட்டார்கள். நான் என்னுடைய அனுபவத்தை சொல்லி இருந்தேன். அடுத்ததாக எனக்கு போன் பண்ணி வர சொல்லி இருந்தார்கள். நானும் செவ்வாய்க்கிழமை சேலத்தில் என்னுடைய சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்தபோது காலை 6:00 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டேன்.
அங்கு நீயா நானா வேன் காத்திருந்தது அதில் ஏறி ஒன்றரை மணி நேரம் டிராவல் செய்து ஈவிபி ஃபிலிம் சிட்டி என்ற பெரிய போர்ட் வைத்திருக்கும் ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போனாங்க. அங்கு கூடாரம் கூடாரமாக நிறைய கட்டிடங்கள் இருந்தது. அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூட செட் அமைத்து வைத்திருந்தார்கள்.
ஒரு பக்கத்தில் "அது இது எது" நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நீயா நானா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நாங்கள் போனோம். எங்களை சாப்பிட சொல்லி இருந்தார்கள் அங்கிருந்த சாப்பாடு அவ்வளவு அருமையாக இருந்தது. காலையில் இட்லி, தோசை, பொங்கல் என்று விதவிதமான சாப்பாடு இருந்தது. சாப்பாட்டை முடித்துவிட்டு இரண்டு மணி நேரம் செட்டில் அமர்ந்திருந்தோம்.
யார் யார் எந்த இடத்தில் அமர வேண்டும் என்று அமர வைத்து லைட், கேமரா என எல்லாத்தையும் செட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிறகு 11 மணி இருக்கும் கோபிநாத் வந்தார். அவர் வந்ததும் செட்டே பரபரப்பாக மாறிவிட்டது. அவர் ஜாலியாக கொஞ்ச நேரம் பேசி அப்படியே நிகழ்ச்சியை கொண்டு போய்க் கொண்டிருந்தார். பிறகு இரண்டு மணிக்கு சாப்பிட விட்டார்கள்.
இரண்டு அரை மணிக்கு மீண்டும் நிகழ்ச்சியை தொடங்கி இருந்தார்கள். அதற்குப் பிறகு ஆறு மணி வரைக்கும் நிகழ்ச்சி நடப்பு முடிவடைந்தது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு 7 மணி நேரத்திற்கு மேலே நிகழ்ச்சி சூட்டிங் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் நாங்கள் எங்க ஏறினோமோ அங்கே கொண்டு விட்டார்கள்.
ஆனால் எல்லோரும் சொல்கிறபடி நீயா நானா நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எல்லாம் கிடையாது. நான் இந்த நிகழ்ச்சியில் ஒருமுறைதான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில் தான் நிகழ்ச்சிக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாரிடமும் நீங்கள் இதை தான் பேச வேண்டும் இதை பேசக்கூடாது என்று சொல்லவில்லை.
ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வெள்ளை, கருப்பு, மஞ்சள் என்ற கலர் சட்டைகளை மட்டும் தவிர்த்து விட சொல்லி இருந்தார்கள். வேறு எதுவும் சொல்லவில்லை. நிகழ்ச்சிக்குள் ஒவ்வொருவர் பேசுவதை வைத்தும் தான் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்று அந்த வீடியோவில் பழனி என்கிற நபர் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications