சொந்த ஊருக்கு கூட போக முடியலையே.. நீயா நானாவில் கதறிய நபர்.. இனி நிலைமை மாறுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று தலைப்பில் விவாதம் நடந்தது.
அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் நிலையை பார்த்து நீங்கள் மிரண்டு போனது என்ன என்று கோபிநாத் கேள்வி கேட்டிருந்தார்.

அதில் பலர் சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் வித்தியாசத்தை கூறிக் கொண்டிருக்கையில் ஒரு நபர் தன்னுடைய சொந்த ஊருக்கு போவதற்கு போக்குவரத்து செலவு அதிகரித்திருப்பது பற்றி பேசி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் அடிப்படை வாழ்க்கையில் என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த மாதிரியான தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்படுவது வாடிக்கைதான். அந்த வகையில் இந்த வாரமும் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற தலைப்பில் விவாதம் வைத்து விலை ஏற்றத்தால் செலவு அதிகம் ஆகிறதா? அல்லது வருமானத்தை மீறி மக்கள் செலவு செய்கிறார்களா? என்ற அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.

அதற்கு ஒரு தரப்பினர் சில வருடங்களுக்கு முன்பு இருந்த விலை இப்போது பல மடங்கு அதிகரித்து விட்டது. அதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கையில் செலவுகளை குறைத்துக் கொள்ளம் வேண்டும் என்ற எதிர் அணியில் இருந்த பலர் மேல் தட்டு மக்களின் மனநிலையிலேயே பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த விவாதம் சுவாரசியமாக போய்க் கொண்டிருந்த நிலையில் கோபிநாத் நீங்கள் இப்போது உள்ள விலையேற்றத்தை பார்த்து மலைத்துப் போன விஷயம் என்றால் என்ன என்று கேட்க, அதில் ஒரு பிரபலம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் சில வாரங்களுக்கு முன்பு இருந்த தக்காளி விலை இப்போது எப்படி இருக்கிறது? என்று உங்கள் எல்லாருக்குமே தெரியும் என்று சொல்ல, அதை தொடர்ந்து இன்னொரு நபர் ஆமாம் நான் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய மருந்து பொருட்கள் கூட பத்து ரூபாயில் இருந்தது.

அடுத்த வாரம் வாங்கும் போது 17 ரூபாய் ஆகிவிடுகிறது என்று கூறுகிறார்.அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் சில வாரங்களுக்கு முன்பு சீயக்காய் மூன்று ரூபாயில் இருந்தது கூட இப்போது ₹4 ஆகிவிட்டது. இதெல்லாம் அடிப்படை சின்ன விஷயமாகத்தான் தெரியும். ஆனால் இதுவும் எங்களுக்கு கஷ்டமாக தானே இருக்கிறது என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து இன்னொரு நபர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பு செல்லும்போது இருந்த தொகைக்கும் இப்போது இருக்கும் போக்குவரத்து செலவுக்கும் அதிக அளவில் டிஃபரண்ட் வந்து விட்டது என்று சொல்கிறார். இப்படியே போனால் சொந்த ஊருக்கு கூட போக முடியாது போல என்றும் அவர் வருத்தத்தை தெரிவிக்க, இதைத்தான் நாங்களும் அனுபவிக்கிறோம் என்று பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications